இலகுரக போர் ஹெலிகாப்டர் ‘பிரசந்தா’ அறிமுகம் ஒரு சிறப்பு வாய்ந்த தருணம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்
பாதுகாப்புப் படையில் இலகுரக போர் ஹெலிகாப்டரான ‘பிரசந்தா’ இணைக்கப்பட்டதையடுத்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஒவ்வொரு இந்தியருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கின் ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டி, பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார்.
“இலகுரக போர் ஹெலிகாப்டரான ‘பிரசந்தா’ அறிமுகம், 130 கோடி இந்தியர்களின் கூட்டு முயற்சியுடன், தேசத்தை வலுவாகவும், பாதுகாப்புத் துறையை தன்னிறைவு பெற்றதாகவும் மாற்றுவதற்கான ஒரு சிறப்பான தருணமாகும். ஒவ்வொரு இந்தியருக்கும் வாழ்த்துக்கள்!”உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது
பாதுகாப்புத்துறையில் தற்சார்பை அடைவதற்கு ஊக்கமளிக்கும் வகையில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர் ஜோத்பூரில் உள்ள இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்.
பின்னர் பேசிய அவர், எதிர்காலத்தில் இந்திய விமானப்படை உலகின் முதன்மையான படையாக திகழும் என்று கூறினார். அத்துடன் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் நாடு முழு தற்சார்பை அடையும் என்றும் அவர் தெரிவித்தார். பின்னர் இலகு ரக ஹெலிகாப்டரில் சிறிது நேரம் அவர் பயணித்தார்.
கருத்துகள்