தீபாவளியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து
தீபாவளி பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்
குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;
“தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களையத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தீபாவளி மகிழ்ச்சியின் பண்டிகை. தீபாவளி நாளில் மக்கள் தங்கள் வீடுகளில் லட்சுமி தேவியை வணங்கி, ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடனும், வளமாகவும் வாழ பிரார்த்தனை செய்கிறார்கள்.
தீபாவளி பண்டிகை பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்க உணர்வை மேலும் வலுப்படுத்த ஒரு சந்தர்ப்பமாகும். தீபாவளியின் ஒளி நம் அகம் மற்றும் புற அறியாமை இருளை அகற்றும் ஞானத்தைக் குறிக்கிறது.
ஒரு தீபத்தைப் போல நம் வாழ்வில் ஆற்றலும் ஒளியும் பரவட்டும். பின்தங்கியவர்களுக்கு உதவும் மனப்பான்மை மக்களின் மனதில் ஆழமாக வளரட்டும், மேலும் நாம் அனைவரும் நமது உதயம் மற்றும் லாபம் என்னும் பாரம்பரியத்தைத் தொடர்வோம்" .தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து
குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“தீபத் திருநாளான தீபாவளி திருநாளில் நம் நாட்டு மக்களுக்கும், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும் எனது அன்பான, மகிழ்ச்சிகரமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரம்பரிய உற்சாகத்துடனும், சந்தோஷத்துடனும் கொண்டாடப்படும் தீபாவளி, பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்குப் பிறகு, சீதையம்மா மற்றும் லட்சுமணன் ஆகியோருடன் ஸ்ரீ ராமர் அயோத்திக்குத் திரும்பியதைக் குறிக்கிறது. மேலும் தீமையை ஒழிப்பதற்காக அவர் முனிவர்களிடமிருந்து அறிவைப் பெற்று, காடுகளின் வாழும் பொது மக்களை ஒன்றிணைத்தார்.
நமது இலட்சியமிக்க, கருணை உள்ளம் கொண்ட ஆளுகையான ராமராஜ்ஜியத்தின் வருகையையும் தீபாவளி குறிக்கிறது.
ஸ்ரீராமரின் நல்லொழுக்க வாழ்க்கை முறையானது, நமது நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துகிறது.
லட்சிய மன்னன், கீழ்ப்படிதலுள்ள மகன், வெல்ல முடியாத போர்வீரன், நேர்மையான வாழ்க்கை என அவரால் கட்டமைக்கப்பட்ட ‘மர்யதாஸ்’ அவரை ‘புருஷோத்தம’ ராமனாக, தலைமுறை, தலைமுறையாக மனிதகுலத்தால் பின்பற்றப்படும் முன்மாதிரியாக மாற்றினார்.
தீபாவளி என்பது செல்வச் செழிப்பின் தெய்வமான லட்சுமி தேவி மற்றும் ஞானம், நல்லதொரு எதிர்காலத்தை அருளும் அதிர்ஷ்டத்தின் கடவுளான விநாயகப் பெருமானை வழிபடுவதற்கான சந்தர்ப்பமாகும்.
இந்த தீபத் திருநாள் நம் வாழ்வில் ஞானம், இறையச்சம், செழிப்பு மற்றும் அமைதியைக் கொண்டு வரட்டும்.தீபாவளிப் பண்டிகையையொட்டிப் பிரதமர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
தீபாவளிப் பண்டிகையையொட்டிப் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தத் தீபஒளித் திருவிழா அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும் கொண்டுவரட்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி என்பது ஒளி மற்றும் ஒளிக்கதிர்களுடன் தொடர்புடையது. இந்தப் புனிதமான பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தட்டும். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நீங்கள் ஓர் அற்புதமான தீபாவளியைக் கொண்டாடுவீர்கள் என்று நான் நம்புகிறேன்
விளக்கு ஒளியின் ஆளுமையும், பிரகாசமும் நம் நாட்டில் நம்பிக்கை, மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தட்டும். மக்களுக்கு பிரதமர் தன்தேரஸ் வாழ்த்து
தந்தேரஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்துடன் தந்தேரஸின் நெருங்கிய தொடர்பை விளக்கியுள்ள பிரதமர், இந்தியாவின் மருந்துகள் மற்றும் யோகாவில் உலகளாவிய கவனத்தை ஈர்த்திருப்பதை அங்கீகரித்து, இந்தத் துறைகளில் பணியாற்றுபவர்களின் பாரம்பரிய முயற்சிகளைப் பாராட்டினார். உலகளாவிய ஆயுஷ் உச்சி மாநாட்டில் தாம் ஆற்றிய உரையையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு;
“தந்தேராஸின் மங்களகரமான சந்தர்ப்பத்தில் வாழ்த்துக்கள். நமது தேசத்தின் மக்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்கப்படுவார்கள். செல்வத்தை உருவாக்கும் உணர்வு நம் சமூகத்தில் மலரட்டும்’’.
“தந்தேரஸ் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது.அண்மைக்காலத்தில், இந்தியாவின் பாரம்பரிய மருந்துகள் மற்றும் யோகா உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்தத் துறைகளில் பணியாற்றுபவர்களை நான் பாராட்டுகிறேன். சமீபத்திய உலகளாவிய ஆயுஷ் உச்சி மாநாட்டில் எனது உரையைப் பகிர்ந்து கொள்கிறேன்’’. தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மத்திய அமைச்சர் டாக்டர். எல். முருகன் வாழ்த்து
தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மத்திய அமைச்சர் டாக்டர். எல். முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மங்களகரமான இந்த தீபாவளி பண்டிகை மக்கள் உள்ளங்களில் உள்ள துன்பங்களை அகற்றி, அனைவரின் இல்லங்களிலும் தீப ஒளியால் மகிழ்ச்சி பரவ வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன். இந்த பொன்னான நன்நாளில் நம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி கூற்றுபடி நம் உள்ளூர் உழைப்பாளிகளால் உருவாக்கிய விளக்குகள், புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு பொருட்களை வாங்க மகிழ்ச்சியாக கொண்டாடி நாடு முழுவதும் அமைதியையும் மகிழ்ச்சியையும் பரப்புவோம்.
உலகெங்கும் வாழும் அனைத்து இந்திய சகோதர, சகோதரிகளுக்கும் எனது இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மத்திய அமைச்சர் டாக்டர். எல். முருகன் வாழ்த்து
தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மத்திய அமைச்சர் டாக்டர். எல். முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மங்களகரமான இந்த தீபாவளி பண்டிகை மக்கள் உள்ளங்களில் உள்ள துன்பங்களை அகற்றி, அனைவரின் இல்லங்களிலும் தீப ஒளியால் மகிழ்ச்சி பரவ வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன். இந்த பொன்னான நன்நாளில் நம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி கூற்றுபடி நம் உள்ளூர் உழைப்பாளிகளால் உருவாக்கிய விளக்குகள், புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு பொருட்களை வாங்க மகிழ்ச்சியாக கொண்டாடி நாடு முழுவதும் அமைதியையும் மகிழ்ச்சியையும் பரப்புவோம்.
உலகெங்கும் வாழும் அனைத்து இந்திய சகோதர, சகோதரிகளுக்கும் எனது இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
கருத்துகள்