அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே
கர்நாடகா மாநிலத்தில் மூத்த அரசியல்வாதி மற்றும் பதினாறாவது நாடாளுமன்ற மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் குல்பர்கா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய இரயில்வே அமைச்சராக இருந்தவர் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நிர்வாகத்தில் ஞானம் மிக்கவர். தற்போது நாடாளுமன்ற மக்களவையின் காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார்.
தொடர்ந்து பத்து தேர்தல்களில் வெற்றி பெற்ற சாதனை படைத்தவர் ஒன்பது முறை கர்நாடகா மாநில சட்டசபைக்கும் கடைசியாக குல்பர்கா நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியிலும் வெற்றி பெற்றார், ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவர். நாற்பதாண்டு காலம் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், ஐந்து வருடம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
மல்லிகார்ஜூன கார்கே 1942 ஆம் ஆண்டு வர்வாட்டி, பால்கி தாலுகா, பீதர் மாவட்டத்தில் பிறந்த அரசியல்வாதி மற்றும் வழக்கறிஞர் இவரது தந்தை ஸ்ரீ மபண்ணா, தாயார். சாய்பவ்வா, மனைவி ராதாபாய் இல்லத்தரசி குழந்தைகள் 3 மகன்(கள்) 2 மகள்(கள்) உள்ளனர்
பகுத்தறிவு சிந்தனை கொண்ட மூடநம்பிக்கைகள் மற்றும் பழமைவாத நடைமுறைகளுக்கு எதிராக போராடுவதை நடைமுறையில் கொண்டுள்ளார். கபடி, ஹாக்கி, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்டவர். குல்பர்காவில் உள்ள மாணவர் ஒன்றியத்தின் மாணவர் தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி
2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், குல்பர்கா பாராளுமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட்டு, 73,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் போட்டியாளரை வென்றார். ஜூன் மாதம் மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார்.
2009 ஆம் ஆண்டு குல்பர்கா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1969 ஆம் ஆண்டில் எம்.எஸ்.கே மில்ஸ் ஊழியர் சங்கத்தின் சட்ட ஆலோசகராகவும், சம்யுக்த மஜ்தூர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். தொழிலாளர்கள் உரிமைக்காக பல போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியுள்ளார். அதே ஆண்டு அவர் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். குல்பர்கா நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரானார்.
குல்பர்காவில் உள்ள நூதன் வித்யாலயா பள்ளியில் படிப்பை முடித்த மல்லிகார்ஜுனகார்கே. பின்னர் குல்பர்கா அரசுக் கல்லூரியில் இளங்கலை படிப்பையும், குல்பர்கா சங்கர்லால் லஹோத்தி சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தார். குல்பர்கா அரசுக் கல்லூரியில் படித்த சமயத்தில் அவருக்கு அரசியல் ஈடுபாடு ஏற்பட்டு அரசியல் பக்கம் திரும்பினார். மாணவர் சங்க பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டார்.
சித்தார்த் விஹார் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவராவார். இந்த அமைப்பு தான் குல்பர்காவில் உள்ள புத்த விகாரை நிறுவியது. பெங்களூரிலுள்ள மிக பிரபலமான செளடய்யா மெமோரியல் ஹாலின் புரவலராக விளங்குகிறார். இங்கு பல்வேறு கச்சேரிகள், நாடகங்கள் உள்ளிட்டவை நடைபெறும். இந்த அரங்கத்தை புனரமைக்கவும், புதுப்பிக்கவும் மத்திய அரசிடமிருந்து பல்வேறு உதவிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.
குல்பர்காவில் உள்ள மக்கள் கல்விக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஆவார் (2012 வரை)
தும்கூர், சித்தார்தா கல்விக் கழகத்தின் தலைவர் ) 1996 ஆம் ஆண்டு வரை.
கர்நாடகத்தில் மருத்துவ, தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருமளவில் வர காரணமாக இருந்துள்ளார்.
தற்போது காங்கிரஸ் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மொத்தமுள்ள 9,385 வாக்குகளில் மல்லிகார்ஜுன கார்கே 7,897 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். சசி தரூர் பெற்றது 1072 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக பொறுப்பேற்கும் மல்லிகார்ஜுனகார்கேவை எதிர்த்துநின்று 1072 வாக்குகள் பெற்றுத் துணைத் தலைவராகும் சசிதரூர்.
கருத்துகள்