கலைவாணி சரஸ்வதி தேவிக்குப்
புகழ்பெற்ற ஸ்தலம் கூத்தனூர் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில், மயிலாடுதுறை-திருவாரூர் தொடருந்துத் தடத்தில், பூந்தோட்டம் அருகிலுள்ள சரஸ்வதி கோவில்
புலவர் ஒட்டக்கூத்தர் மன்னர்கள் விக்கிரம சோழன் இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராச சோழன் ஆகியோரது அவைப் புலவராகவும், பிரதானி அமைச்சராகவும் பணியாற்றியவவருக்குப் பல பட்டங்கள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கன. சோழநாட்டின் பாணர் கூட்டம் வாழ்ந்த கூத்தனூரில் பூந்தோட்டம். கிராமத்தில் கலைகளுக்கு அதிபதியன சரஸ்வதி தேவி அம்மன் திருத்தலம் புராண காலத்தில் அம்பாள்புரி என்றும், பூந்தோட்டம் எனவும் அழைக்கப்பட்டு பிற்காலத்தில் இந்த ஊரை இரண்டாம் ராஜராஜ சோழன் தன் அவைப் புலவர் ஒட்டக்கூத்தருக்கு தர்மாசனம் செய்த இனாம் வழங்கியதால் அவரது பெயருடன் கூத்தனூர் ஆகும் சரஸ்வதிக்கான தனிக் கோயில் இங்கு மட்டுமே உண்டு. கருவறையில், சரஸ்வதி தேவி வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரை மலரில் பத்மாசனத்தில் வீற்றிருக்க. வலமேல்கரத்தில் அட்சமாலை ஏந்தி, வல கீழ்க்கரத்தில் சின்முத்திரை காட்டி, இடது மேல்கரத்தில் அமிர்த கலசம் ஏந்தி, இடது கீழ்க்கரத்தில் புத்தகமும் கொண்டு எழிலார்ந்த திருக்கோலத்தில் காட்சி தரும் அம்மன்.
புருஷோத்தம பாரதிக்கு விஜயதசமியில் அம்பிகையின் அருள் கிடைத்ததாகச் சொல்லப்படுவதன். காரணமாக விஜயதசமி நாளில் பல ஊர்களைச் சேர்ந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை இக் கோவிலுக்கு அழைத்து வந்து வித்தியாப்பியாசம் செய்த பிறகு பள்ளியில் சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். பெரும் புலவரான ஒட்டக்கூத்தர் வரகவி பாடும் திறன் வேண்டி கலைமகளை வழிபட்ட ஸ்தலமிது. அவர் கூத்தனூருக்கு அருகில் பூந்தோட்டம் அமைத்து, காவிரி நீரால் சரஸ்வதி தேவிக்கு அபிஷேகம் செய்து பூஜித்தார். அவருடைய பூஜையில் மனம் மகிழ்ந்த சரஸ்வதி தேவி, ஒட்டக்கூத்தருக்குத் தன் வாய் தாம்பூலத்தை வழங்கியதன் பயனாக ஒட்டக்கூத்தர் வரகவி பாடும் திறம் பெற்று, மூன்று சோழப் பேரரசர்களின் அரசவைப் புலவராக விளங்கியவர்.
சரஸ்வதி கோயிலில் வசந்த நவராத்திரியும், சாரதா நவராத்திரியும் சிறப்பாகக் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரி விழா 12 நாள்களும், பின்னர் பத்து நாள்கள் ஊஞ்சல் உற்சவமும் நடைபெற. விழா நாள்களில் சரஸ்வதி தேவி சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு, புஷ்ப அலங்காரம் எனக் காட்சி தருகிறார் சரஸ்வதி பூஜையன்று நியமத்துடன் விரதமிருந்து, பக்தர்கள் தரிசனம் செய்யலாம் . புலவர் ஒட்டக்கூத்தர் மூன்று சோழப் பேரரசின் மன்னர்களுக்கும் அவைப் புலவரான நிலையில் , கலிங்கத்துப்பரணி என்ற நூல் இயற்றியுள்ளார் பரணி வகையைச் சார்ந்த சிற்றிலக்கியம் இந்நூல் முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்கத்துப் போரில் வெற்றி குறித்துப் பாடப்பட்டதாகும். குலோத்துங்கனைப் பாட்டுடைத்தலைவனாக
அனந்தவர்மன் என்னும் வட கலிங்க (தற்போது ஒடிசா)மன்னன் திறை கொடாமலிருந்த பிழையின் காரணமாக முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவனும் அமைச்சனுமாயிருந்த கருணாகரத் தொண்டைமான் பொது ஆண்டு . 1112-ல் போரில் வென்ற செய்தியே கலிங்கத்துப் பரணி இரண்டு வகை முதல் வகை புலவர் செயங்கொண்டார் இயற்றியது. தீபங்குடியைச் சேர்ந்த அருகர். இந்நூலின் காப்புச் செய்யுளால் இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவரென அறியலாம். புலவர் ஒட்டக்கூத்தர் பாடிய கலிங்கத்துப்பரணி, முதலாம் குலோத்துங்கனின் மகன் விக்கிரம சோழன் தென்கலிங்க மன்னன் கலிங்க வீமனை வென்ற திறத்தைப் பாடுகிறது. இந் நூலைப்பற்றிய குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. ஒட்டக்கூத்தர் பாடிய பரணியின் பாடல் என அறிஞர்கள் கருதும்
"மோடி முன்தலையை வைப்பரே மூடி
குலைந்த குஞ்சியை முடிப்பரே
ஆடி நின்று புதுத் திலதம்
அம் முகத்தில் அமைப்பரே
அடிக் கழுத்தி னுடன் சிரத்தை அரிவராலோ
அரிந்த சிரம் அணங்கின் கை கொடுப்பராலோ
கொடுத்த சிரம் கொற்றவையைத் துதிக்குமாலோ
குரையுடலம் கும்பிட்டு நிற்குமாலோ
மண்ணின் ஆள் அற அறுத்த தங்கள் தலை
வைத்த பீடிகை வலங்கொள
விண்ணின் ஆகிய தன் யாகசாலை தொறும்
மீளவும் சிலர் மிறைப்பரே "
பரணி என்பது போரில் ஆயிரம் யானைகளை வென்ற வீரனைப் பாடும் சிற்றிலக்கிய வகை. போரிலிருந்து மீண்ட தலைமகன் பால் புலவியுற்ற தலைமகளது ஊடலைத் தீர்க்க புலவர்கள் வாயிலாவதும், புலவியாற்றிய பின்னர், தலைவன் சென்ற காட்டின் கொடுமையையும் தலைவனின் வீரத்தையும், அக்காட்டிலுள்ள பேய்கள் காளிக்குச் சொல்லுவதையும், காளி பேய்களுக்கு உரைப்பதையும் எடுத்துச் சொல்லும் வடிவுடன் பரணி நூலானது அமையும். பரணி நாளில் பேய்கள் கூடி நிணச்சோறு( இரத்தமும் இறைச்சியும் கலந்த உணவு) அட்டு ( சமைத்து) உண்டு மகிழ்ந்து ஆடிப்பாடிக் களித்துப் போரில் வென்ற மன்னரைப் புகழும் புகழ்ச்சியைக் கூறுவது. காளிக்குக் கூளிகள் கூறுவதாக அமைவதாகும்.புலவர் ஒட்டக்கூத்தர் முதலியார் "செருத்தம் தரித்துக் கலிங்கர் ஓட, தென்தமிழ்த் தெய்வப் பரணி கொண்டு வருத்தம் தவிர்த்து உலகு ஆண்ட பிரான், மைந்தர்க்கு மைந்தனை வாழ்த்தினவே - ஒட்டக் கூத்தரின் தக்கயாகப் பரணி", (தாழிசை 276)"
வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர் செயங்கொண்டான் விருத்தம் என்னும் ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா அந்தாதிக் கொட்டக்கூத்தன் கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள் வசைபாடக் காளமேகம் பண்பாக வுயர்சந்தம் படிக்காச லாதொருவர் பகரொணாதே" என்று அவர் புகழ் பாடும் வரிகளாகும். மன்னர் குலோத்துங்க சோழனின் மனைவி பாண்டிய நாட்டின் ராஜகுமாரி. அவளது ஆசிரியர் நளவெண்பா பாடிய புகழேந்திப்புலவர். அவர் மஹாராணி விருந்தினராகச் சோழ நாட்டில் தங்கியிருந்தபோது புலவர் ஒட்டக்கூத்தரால் புகழேந்திப்புலவர் சிறை வைக்கப்பட்டார். அதில் கோபம் கொண்ட அரசி, மன்னன் குலோத்துங்கன் அந்தப்புரம் வரும் சமயம் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். அந்த காலத்தில் மகாராணிகள் கோபம் கொண்டால் மன்னர்கள் தங்கள் அவைக்களப்புலவரை அனுப்பி சமாதானம் செய்வது வழக்கம். அதன்படி குலோத்துங்க சோழன் தன் அவைக்களப்புலவரும், குருவுமான ஒட்டக்கூத்தரை சமாதானம் செய்விக்க வேண்டிய நிலையில் இராணியின் அந்தப்புரத்திற்கு அனுப்பினார். புலவரும் ராணியின் அறைக்கு முன்னால் நின்று கொண்டு பாடல்கள் மூலம் சமாதானப்படுத்த முயன்றார். ஒட்டக்கூத்தரின் பாடலைக் கேட்ட இராணி மேலும் கோபமுற்று கதவை தாழிட்டு கொண்டாள். ஆதலாலேயே ஒட்டக்கூத்தர் பாட்டிற்கு இரட்டைத்தாழ்ப்பாள் என்ற பழமொழி இன்றும் வழக்கில் உள்ளது.
புகழேந்திப்புலவர் சிறையிலிருப்பது தான் இராணியின் கோபத்திற்குக் காரணம் என்பதை உணர்ந்த மன்னர் புலவரை உடனே விடுதலை செய்தார்.ஈசல் பிடிப்பதெல்லாம் வேட்டையில் சேராது என்பது மாதிரி, களத்திற்காணும் எல்லா வெற்றிகளுமே பரணிக்குப் பாடுபொருளாகாது. எவனொருவன் பகைவரின் ஆயிரம் யானைகளை வெட்டிச் சாய்த்து வெற்றி கொள்கிறானோ அவன் மீது மட்டுமே பரணி பாடப்படும். “ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மான்னவனுக்கு வகுப்பது பரணி” என்பது இலக்கண விளக்கப் பாட்டியல்.
ஆயின், கலிங்கத்துப்பரணியின் பாட்டுடைத் தலைவன் இதில் யார்? முதலாம் குலோத்துங்க சோழனா? கலிங்கத்துப்பரணியின் பாட்டுடைத் தலைவன் என்பது வரலாற்று வழக்கு. ஆணையிட்டவன் குலோத்துங்கனாயினும் களத்திலே ஆயிரம் யானை வென்றவன் படைகொண்டு சென்ற கருணாகரத் தொண்டைமான். ஆதலின் நாட்டுடைத் தலைவன் குலோத்துங்கனாகிறான்; பாட்டுடைத் தலைவன் கருணாகரனாகிறான்.
கருத்துகள்