காந்தாரா
கேஜிஎப் படத்தை தயாரித்த Hombale மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம். வித்தியாசமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் படத்திற்கு வரவேற்பு .
கேஜிஎப் படத்திற்குப் பின் பிறமொழி இந்தியத் திரைப்பட ரசிகர்களை கன்னட மொழி திரைப்படத்தை திரும்பிப் பார்க்கத் துவங்கியுள்ள நிலையில் இந்தத் திரைப்படம் கன்னட மொழித் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது.
கம்பாலா எனும் எருமை மாட்டின் போட்டியில் துவங்கும் கதையில் வரும் மலைவாழ் மக்களின் பஞ்சுருளி எனும் தெய்வ நம்பிக்கையை மிரட்டலான காட்சிகளுடன் கண்ணுக்கு விருந்தாக்கி, மலை வாழ் மக்களின் வாழ்வியல் முறையை நம் கண் முன்னே நிறுத்தியிருக்கிறது இத் திரைப்படம்
1847 ஆம் ஆண்டுகளில் துவங்கும் கதை. அந்த நிலத்தை மலை வாழ் மக்களுக்கு தானமாக அல்லது இனாமாக வழங்குகிறார் அந்த பகுதி குறுநில மன்னர் . தற்போது அந்த மலை வாழ் மக்களை வனத்திலிருந்து வெளியேற்ற நினைக்கும் அரசு அதிகாரி ஒருபுறம், மறுபுறம் வனத்தை தானமாக வழங்கிய ராஜாவின் வாரிசுகள் மீண்டும் அந்த நிலத்தை கையகப் படுத்த நினைக்கும் முயற்சி. இந்த முயற்சியை பஞ்சுருளித் தெய்வம் எப்படி முறியடிக்கிறது என்பதை மலை மக்களின் உண்மையான வாழ்வியலை கண் முன்னே காட்சிப்படுத்தியுள்ளார்கள் இயக்குனரும், கதாநாயகனும் ஆன ரிஷப் ஷெட்டி. வன அதிகாரியாக கிஷோர் நல்ல மிரட்டல்.
உண்மைச் சம்பவத்தை தற்கால மக்களின் வாழ்வியலோடு உள்ளது உள்ளபடி கதைக்களம்.அமைத்து அதைக் காட்சிப் படுத்திய விதமென மீண்டும் ஒரு வெற்றிப் படமாக இந்தியத் திரைப்பட்திற்கு கிடைத்துள்ள படம் காந்தாரா.
குல தெய்வ வழிபாடு நம்பிக்கை கொண்டவர்களுக்கு கண்டிப்பாக இத் திரைப்படம் பிடிக்கும். ஒரு சில காட்சிகளில் உடம்பு புல்லரிக்கும் என்பதற்கும் உத்திரவாதம். கண்டிப்பாக படத்தின் தாக்கத்திலிருந்து வெளியே வர கொஞ்சம் அவகாசம் தேவைப்படும்.
காடுகளைப் பாதுகாப்போம் என்ற சமூக கருத்தையும் ஆழமாக விதைத்துள்ளது. வனப்பகுதிகளில் வாழும் மலை வாழ் மக்களின் வாழ்வியல் கதை என்பதால் காட்சிகள் நவீனமாக இருக்காது. இருந்தாலும் திரைப்படம் தரம்.
வாய்ப்பிருந்தால் குடும்பத்துடன் பாருங்கள். தரமான . குலதெய்வம் பற்றிய படம் இரண்டரை மணி நேரத்தில் இரண்டு மணி நேரம் இருபத்தைந்து நிமிடம் சாதாரணமாகத்தான் கடந்து செல்கிறது.
ஆனால் மீதமிருக்கும் 5 நிமிடத்தில் ஒன்று செய்திருக்கிறார்கள்.. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஏதோ செய்தது. இதுவரை வேறு எந்தத் திரைப்படத்திலும் உணர்ந்திடாத ஒன்று.
படம் முடிந்து அரைமணி நேரமாகியும் அந்த உணர்வு இன்னும் நீடிக்கிறது. பயங்கரம்
குலதெய்வம் பற்றிய படம் அவரவர் வழி குலதெய்வம் மனதில் கொண்டு முடிந்தால் திரையரங்கில் காணவும்.
கருத்துகள்