டி வி ஆக்ட் புகார் இரத்து கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை தள்ளி வைத்தது
குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் படி பதிவான புகார்களை இரத்து செய்ய உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியுமா என்பது குறித்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர் அல்லது அவர் சார்பில் மற்றொருவர் நீதித்துறை நீதிமன்றமான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகாரளிக்க குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் வழி வகுக்கிறது.
'இந்தச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் புகார்களை ரத்து செய்யக் கோரி குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவின்படி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாதென தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் 'உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்' என இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக இருப்பதாகக் கூறி மூன்று நீதிபதிகள் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டதன்படி நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் டீக்காராமன் ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் அடங்கிய அமர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த அமர்வு உயர் நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்தது. வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு பின் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் அமர்வு தள்ளிவைத்தது.
கருத்துகள்