முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சோழர்கள் வரலாறு எழுதிய சதாசிவப் பண்டாரத்தாருக்கும் புதினம் எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்திக்கும் வித்தியாசம் உண்டு

சோழர்கள் வரலாற்றில் உண்மையான


வரலாற்றாய்வாளர் காலம்சென்ற தி.வை.சதாசிவ பண்டாரத்தார்.

பேருந்துகளோ, சாலை வசதிகளோ, இல்லாத தொலைத்தொடர்பு சாதனங்கள் குறைந்த காலத்தில் ஒவ்வொரு கோவிலாகப் பயணம் செய்து கல்வெட்டுகளையும், பட்டயங்களையும், சான்றாவணங்களையும் தேடிப்பிடித்துப் படித்து அவற்றைத் தொகுத்து நூலாக வெளியிட்டதன் விளைவாகவே, இன்று சோழர்களைக் குறித்து நாம் பேசி வருகிறோம். பலர் பொய்யாக எழுத முனைந்த கதைகளைப் பறம்தள்ளுவதற்கு அது நல்ல சான்றாக அமைகின்றன,ஓராயிரம் ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழகத்தில் 400 ஆண்டுகள் ஆட்சி செய்த பிற்காலச் சோழப் பேரரசு குறித்து முழுமையான வரலாற்றை தமிழில் எழுதியவர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்.             


ஒரு காலத்தில், வரலாற்றாய்வுகள் நடத்திய மாணவர்களுக்கு மானசீகக் குருவாக இருந்தவர், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மக்களிடையே அந்நியப்பட்டு வருகிறார். இவரைக் கொண்டாட வேண்டிய பெரும் பொறுப்பு நம்மிடையே உள்ளது.   வரலாற்றில் மாற்றம் செய்து அதில் சில கட்டுக்கதைகளைப் புகுத்தி எழுதிய கதைப் புதினங்கள்: வரிசையில் வரும் 


பொன்னியின் செல்வன் அதை எழுதிய கல்கி என அறியப்படும் ரா.கிருஷ்ணமூர்த்தி  வேங்கையின் மைந்தன் - எழுதிய அகிலன். உடையாரும், கங்கை கொண்ட சோழனும் - எழுதிய பாலகுமாரன்,  சோழ கங்கம் -எழுதிய சக்தி ஸ்ரீ ஆகியோர் எழுத்தாளர்கள் மற்றும் கதாசிரியர்கள் ஆனால் வரலாற்றாசிரியர்கள் அல்லர். அவர்கள் எழுதியது முழுவதும் உண்மை வரலாறல்ல கதை  அதில் உண்மை 40 சதவீதம் மட்டுமே. அதை அடிப்படையாகக் கொண்டு கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி எழுதிய கதை களம் அடிப்படையில் எடுக்கப்பட்ட இயக்குனர் மணிரத்தினம் திரைக்கதை தான் பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்து வரலாறு எனக் கொண்டாடும் மக்கள் உண்மை வரலாறு படிக்காதவர்கள் மற்றும் அறியாதவர்கள்.

மேலும் தனது சொந்த வீட்டில் உள்ள கடந்து போன கால வரலாற்று விபரங்கள் அறிந்தவர்கள். தனக்குத் தெரிந்த உலக வரலாறு மட்டுமே பேசி சிலர் பெருமைப்படுவது போல உள்ள நிகழ்வு தான் அது, இன்று பல குடும்பங்களிலுள்ள சிறுவர் மற்றும் சிறுமியர் தங்கள் குடும்பத்தில் உள்ள வயது முதிர்ந்த அப்பத்தாக்கள் மற்றும் அய்யாக்கள் பெயர் கூற சரியாகத்  தெரியவில்லை. கேட்டால் யோசித்து தெரியாது எனப் பதில் கூறும் நிலையில் அடுத்ததாக அவர்கள் ஐந்து தலைமுறை தெரிவது என்னும் அவசியம் அவர்களிடம் இல்லை,


அப்படி அல்லாத ஒரு சில குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் விதி விலக்காக இருக்க, பலர் பல வடிவங்களில் கூறும் கதைகள் உண்மை என நம்பும் நிலையிலிருக்கும் இன்றைய தலைமுறை தான் காரணம். வரலாற்றைத் திரித்து கூறப்பட்ட பல கதைக்களம் கொண்ட திரைப்படங்கள் உண்மை வரலாறு என நம்பும் நிலையில். இருக்க சிறு வயதில் படிக்க வேண்டிய வரலாறு பாடத்திட்டத்தில் 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பள்ளி மாணவர்கள் படிக்க முடியாத அல்லது இல்லாத காரணத்தால் தான் என்பதே இங்கு உண்மை நிலை,    ஆனால் 1990 ஆம் ஆண்டுக்கு. முன் படித்த மாணவர்கள்


உண்மை வரலாறு எழுதியவர்களான வரலாற்று ஆசிரியர்களான ..சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரியும்,   சோழர் வரலாறு - மா. இராச மாணிக்கனாரும், பிற்காலச் சோழர் வரலாறு - சதாசிவப் பண்டாரத்தாரையும், சோழர் சரித்திரம் - ந. மு. வேங்கடசாமி நாட்டாரையும். தமிழ் நாட்டு வரலாறு சோழப் பெரு வேந்தர் காலம் - தமிழ் வளர்ச்சித் துறை செய்த செயலும்              பழங்காலச் சோழர்களின் வரலாறு -அ.சவரிமுத்துவையும் அறியாமலிருக்க முடியாது. 
இராசராச சோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று.

"ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்."


தமிழக வரலாற்றில் குறிப்பாக சோழர் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக விளங்குவது உடையார்குடி கல்வெட்டாகும். தற்போதைய கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியின் ஒரு பகுதியாக விளங்கும் உடையார்குடி அனந்தீஸ்வரம் சிவாலயத்தின் கருவறையில் மேற்குப்புற அரிஷ்ட்டானத்தில் இச்சாசனம் இடம்பெறுகிறது. கோ இராஜகேசரிவர்மரின் (முதலாம் இராஜராஜ சோழனின்) இரண்டாம் ஆட்சியாண்டு குறிக்கப் பெற்றுள்ள இச்சாசனத்தினை (எபிக்கிராபிகா இண்டிகா தொகுதி 21 ல் எண் 27, கட்டுரையாகத் தமிழ் ஒலிபெயர்ப்போடு கூடிய ) ஆங்கிலத்தில் அமைந்த) விளக்க உரையுடன் வெளியிட்ட வரலாற்றுப் பேரறிஞர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் ஆவார் தம் "சோழர் வரலாறு" (The Cholas) எனும் நூலில் மேற்குறித்த உடையார்குடி சாசனத்தின் அடிப்படையில் ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய செய்திகளை விவரித்துள்ளார். அப்பகுதியில் சுந்தரச் சோழனின் தலைமகனும் அதாவது மூத்த மகன் மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழனின் அண்ணனுமாகிய ஆதித்த கரிகாலனின் கொலை நிகழ்வின் பின்புலத்தில் மதுராந்தக உத்தம சோழனின் துரோகம் இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார். இக்கருத்தே மதுராந்தக உத்தமச் சோழன் மீது ஏற்றப்பெற்ற களங்கமானது. 


 ...............'உடையார்குடிக் (ஸ்ரீபராந்தக சதுர்வேதி மங்கலத்து திருவனந்தீஸ்வரத்துக்) கல்வெட்டு ஆதித்த கரிகாலனைக் கொன்ற துரோகிகள் மற்றும் அவர்தம் உறவினர்கள் பற்றி பின்வருமாறு குறிக்கின்றது.


பொன்னியான காவிரி புகும் பட்டினத்திலிருந்து   கண்ணகியும், கோவலனும் மதுரை பாண்டிய நாட்டை நோக்கிச் செல்லும் போது , இந்தக் கொடும்பாளூர் கடந்துதான் சென்றார்கள் என்று குறிப்பிடுகிறார் சேர நாட்டின் புலவர் மன்னர் முடி துறந்த இளங்கோவடிகள்.

அப்போது இந்த  ஊரை ஆண்டது “ இருக்கு வேளிர் குடி” (வேளார் எனும் மட்பாண்டம் செய்த குலாலர்கள் வேறு வேளிர் என்ற குறுநில மன்னர்கள் வேறு) மன்னர்கள். இவர்கள் சோழ அரசின் கீழ் ஆண்ட சிற்றரசர்கள். எனவே இந்த ஊர் “ இருக்கு வேளூர்” என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஏழாம்  நூற்றாண்டிலிருந்து 12 ஆம் நூற்றாண்டு வரை சோழ மற்றும் பல்லவ மன்னர்கள் தொடுத்த பெரும்பாலான போர்களில் இந்த “ இருக்கு வேளிர் “ சிற்றரசர்களின் பங்கும் இருந்திருக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேல், ராஜ ராஜ சோழனின் பட்டத்தரசி, ராஜேந்திர சோழனின் தாயார் வானவன் மாதேவி கொடும்பாளூரில் பிறந்த இளவரசி தான். 
பின்னர் திருமலை நாயக்கர் காலத்தில் அவருடைய ஆட்சியின் கீழ் இந்த ஊர் வந்துள்ளது. பின்னாளில் வந்த ராணி மங்கம்மாள் இந்த ஊருக்கு “மங்கம்மாள் சத்திரம்” என்று பெயர் சூட்டி அழகு பார்த்திருக்கிறார். அதுவே இப்போது கொடும்பாளூர் சத்திரம் 63 நாயன்மார்களில் ஒருவரான இடங்கழி நாயனார் இந்த ஊரில்தான் பிறந்திருந்திருக்கிறார். இது பற்றி சேக்கிழார் தனது பெரியபுராணத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அது 12 ஆம் நூற்றாண்டில் .
இவ்வளவு சிறப்பு வாய்ந்த கொடும்பாளூர் மிகப்பெரிய வரலாற்றை தின்று செரித்து விட்டு அமைதியாக இன்று ஒரு சிறிய கிராமமாக. மதுரை – திருச்சிராப்பள்ளி செல்லும் சாலையில் உள்ளது. தமிழ்நாடு தொல்லியல் துறை சார்ந்த கோவிலை மிகவும் சுத்தமாகப் பராமரித்து வருகிறது 
நுழையும் இடத்தில், இந்த மூவர் கோயில் , இருக்கு வேளிர் பூதி விக்கிரம கேசரி காலத்தில் கட்டப்பட்டது என்று ஒரு பலகை நம்மை வரவேற்கிறது. 


இவன் பத்தாவது நூற்றண்டில் வாழ்ந்த “ இருக்கு வேளிர்” வம்சத்தைச் சார்ந்த ஒரு சிற்றரசன். இவனுக்கு இரண்டு மனைவிகள். வரகுண நங்கை (அனுபமா ) மற்றும் கற்றளி பிராட்டியார். இதில் முதல் மனைவி வரகுண பிராட்டியார், இரண்டாம் பராந்தகனின் மகள் என்று தெரிகிறது. 

அவர்களுக்காக இரண்டு கோவில்களும், தனக்காக ஒரு கோவிலும் சேர்த்து மூன்று கோவில்களாகக் கட்டியிருக்கின்றான். அந்த மூன்று கோயில்களையும் இணைத்து ஒரு பெரும் மண்டபமும், ஒரு பெரிய விமானமும் இருந்திருக்கிறது. சரியான பராமரிப்பு இல்லாததாலும், சில இயற்கைச் சீற்றங்களாலும், வலது பக்கம் உள்ள ஒரு கோவிலும் ( இது எந்த மனைவியின் பெயரால் கட்டப் பட்டது என்ற தகவல் இல்லை ) , பொது மண்டபமும், விமானமும் அழிந்து அதன் மிச்சங்கள் மட்டுமே இன்று தாங்கள் வாழ்ந்த எச்சங்களின் சிறப்பைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. 
இந்த மூன்று கோவில்களுமே சிவாலயங்கள். அதில் ஒன்றில் மட்டுமே சிவலிங்கம் உள்ளது. மற்றொன்றில் அதுவும் இல்லை. பெரிதாக பூஜைகள் நடப்பதில்லை

அதில் நடுவில் உள்ள கோவிலில் ஏராளமான கல்வெட்டுக்கள், இந்த மன்னனின் சிறப்பைப் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. கல்வெட்டில் வடமொழி சார்ந்த கிரந்த லிபியில் உள்ளது.ஐவர் கோவில் என்றழைக்கப்படும் “ ஐற்றளி” உள்ளது. இந்த இடம் முற்றிலுமாக அழிந்து அதன் அடித்தளம் மட்டுமே இன்று காண முடிகிறது.இதைக் கட்டியவன் “ இராஜ சிம்ம பல்லவன்” என்பது தான்


"பாண்டியனைத் தலைகொண்ட கரிகால்ச் சோழனைக் கொன்று துரோகிகளான சோமன் . . . . றம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரமாதி ராஜனும் இவன் றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழபிரமாதிராஜனும், இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும், இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிலும், இவர் பிரமாணிமார் பெற்றாளும்,.         இ . . . . . ராமத்தம் பேரப்பம் மாரிடும், இவகள் மக்களிடும், தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவகள் உடப்பிறந்த பெண்களை வேட்டாரினவும், இவகள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் முடைமையும் . . . " என்று கூறும் கல்வெட்டுச் செய்தியினை ஆழ்ந்து நோக்கும்போது சோமன், அவன் தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன், அவன் தம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழப் பிரமாதிராஜன் ஆகிய மூவர் மட்டுமே ஆதித்த கரிகாலனைக் கொன்ற துரோகிகள் என்பதும், மற்ற அனைவரையும் இக்கல்வெட்டு கூறும்போது இவகள் (இவர்கள்) என்ற சொல்லோடு தொடர்வதால் அவர்கள் குற்றவாளிகளோடு உறவின்முறையில் தொடர்புடையவர்கள் மட்டுமே என்பதும் புலனாகின்றது.    கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி, புகழ்பெற்ற கற்பனாவாதக் கதைகளை எழுதியவர். அவர் வரலாற்று ஆசிரியரல்ல,கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய கதை வழிப் புதினமாகும். எழுத்தாளர் பாலகுமாரனின் உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தையும் குறிப்பாக தஞ்சாவூர் பெரிய கோவில் கட்ட எடுத்துக்கொண்ட முயற்சிகள் மற்றும் கட்டப்பட்ட விதம் ஆகியவற்றைக் கதைக்களமாகக் கொண்டுள்ளது.விசா பதிப்பகத்தாரால் அது புத்தகமாக வெளியிடப்பட்டது.தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாற்றை, கற்பனை நயத்தோடு, மாமன்னர் இராஜராஜ சோழத் தேவரை நாயகனாகவும் அவரது மனைவி பஞ்சவன்மாதேவியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டது. இராஜ ராஜ சோழரால் தோற்கடிக்கப்பட்ட சேர நாட்டு முன் குடுமி அந்தணர்கள் அதாவது கேரளாவின் நம்பூதிரிகள் போரில் அவரை வெற்றி கொள்ள முடியாது என்பதால்

பைசாசங்களை அனுப்புகிறார்கள். அதிலிருந்து கருவூர்த்தேவர் சோழ ராஜரையும் தஞ்சாவூரையும் காக்கிறார்.  என்பதே      வரலாற்று ஆசிரியர் தி. வை. சதாசிவ பண்டாரத்தார் கூற்று அவர் 1892 ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சோழர்களின் முழுமையான வரலாற்றை முதன் முதலில் எழுதியவர். சதாசிவப் பண்டாரத்தார் கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் வைத்தியலிங்கப் பண்டாரத்தாரின் மகனாவார், பண்டாரம் என்பது இங்கு ஜாதி அல்ல அது நிதியாளர் பண்டா என்பது நிதி ஆகும் 1930 ஆம் ஆண்டு அவரது
“முதலாம் குலோத்துங்க சோழன்” என்ற முதல் நூல் வெளியானது. 1942-1953, 1953 முதல் 1960 வரை உள்ள காலகட்டங்களில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழாராய்ச்சித் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பல இடங்களுக்கும் சென்று சோழர்கள் வரலாற்றை ஆய்வு செய்து “பிற்காலச் சோழர் சரித்தரம்” என்னும் பெரு நூலை எழுதினார். இது மூன்று தொகுதிகளாக 1949, மற்றும் 1951 மற்றும் 1961 ஆம் ஆண்டுகளில் வெளியானது. இரு தமிழ் இலக்கிய வரலாறு நூல்களும், பல தல வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமையாக்கியுள்ளது.

தனித்துவம் - ஆளுமை, சொற்சுவை - பொருட்சுவை இல்லாமலும் படைப்பாளிகள் இருக்கலாம். வாஸ்த்தவத்தில் அத்தகையவர்களே பெருங்கூட்டமாக இருக்கிறார்கள். அதிலிருந்து தனித்துத் தெரிவதற்காகவே தனித்துவமும், ஆளுமையும் வலியுறுத்தப்படுகிறது. அது உடனடியாக வந்துவிடாது. செந்தமிழ் நாவில் வரும் பழக்கம் போல, சித்திரமும் எழுத்தும் கைப் பழக்கம்தான்! தனித்துவம், ஆளுமை ஆகியவை அடையப் பெறும் வரை வாசிப்புத் தன்மை அல்லது வாசிப்பு சுவாரஸ்யம் என்பதையாவது தவறாமல் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.கதை எழுதிகளுக்கு அல்லது கதை சொல்லிகளுக்கு தனக்கென ஒரு மொழியும், கூறல் முறையும் வட்டார வழக்கு மொழிகளும் அவசியம். ஒரு முறை வாசித்த உடனே கல்வெட்டாக மனதில் பதிந்துவிடுகிற இத்தகைய வரிகள் மீது சிலருக்கு இளம் வயது முதலே பெரும் ஈர்ப்பு இருந்து விடும்.  இது தவிர சக புனைவுப் படைப்பாளிகள், விமர்சகர்கள், வாசகர்கள், கட்டுரையாளர்கள் முதலானவர்களும் இத்தகைய அம்சங்கள் பற்றி எழுதுவதை ஆவலோடு உள்வாங்கிக்கொள்ளவேன்டும்.     சோழ மன்னர்களில் கடைசி மன்னர் மூன்றாம் இராசராச சோழன் அவருக்கு குழந்தைகள் கிடையாது. - பிற்காலச் சோழர் சரித்திரம் டி.வி.சதாசிவ பண்டாரத்தார் நிலைமை இப்படி இருக்கையில் சோழர்கள் வாரிசு பிச்சாவரத்தில் இருப்பதாக கதைகட்டி ஒரு கூட்டம் வரலாற்றுப் பிழை செய்து அவருக்கு வருடா வருடம் சிதம்பரம் கோவிலில் முடிசூட்டு கிறார்களாம். பிச்சாவரம் ஜமீன் வேறு ,சோழர் வாரிசு என்பது வேறு இது இரண்டும் ஒன்றல்ல வேறு வேறானது,  

பொன்னியின்  செல்வன் கதைக்களமும் அப்படியே.

இந்தப் படத்திற்கு போதுமான பொருட் செலவு செய்யப்படவில்லை,.பிரமாண்டம் என்றால் செலவு செய்ய வேண்டும். இல்லாத ஒரு தேசத்தின் சித்தரிக்கப்பட்ட கதைப் படமான பாகுபலி க்ளைமாக்சில் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றான்?  என்ற கேள்வி தான் பாகுபலி படத்தின் வெற்றி!. ஆனால், பொன்னியில் செல்வன் திரைப்படத்தில் ஒரு ட்விஸ்ட் ஏதோ  வைத்திருக்கிறார்களாம் ஆனால் அது எந்த உணர்ச்சியையும் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கவில்லையாம். காப்பியங்கள் எழுதிய கவிஞர்களின் பாடல் இல்லை இந்த படத்திலிருந்து கவிஞர் வைரமுத்துவைக் கழட்டி விட்டது கல்கி கிருஷ்ணமூர்த்தி கதை வழி வந்த இயக்குநர் மணிரத்தினம்  பொன்னியில் செல்வனின் மிகப்பெரிய பலவீனம் தான் ரசனையை நயம் செய்ய நல்ல கவி வேண்டும்.


பிரைட் ஆப்ஃ  தமிழ் சினிமா என்று இதைச் சொன்னால் வட மாநிலத்தவன் பான்பராக்கை போட்டுக் கீழே துப்பி விடுவார்கள் இது நம் கருத்து.

பொதுவாக இந்தப்படம்  50 வயதைக் கடந்தவர்களுக்கு ஏன் பிடித்திருக்கிறது. பாகுபலி இளையோரை சென்றடைந்தது போல பொன்னியின் செல்வன் இளம் ரசிகர்களை ஈர்க்கவில்லை. கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி எழுதிய நாவலைப் படித்தால் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் புரியும் என்பது பெரும்பான்மையோர் கருத்தாக உள்ளது. இதுகுறித்து மீம்ஸ்களும் வருகிறது அப்படி என்றால் திரைப்படமாக வசூல் அதிகம் வரும் அது வெற்றி அல்ல ஒரு பிரமிப்பு, கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு காணாதவன் கஞ்சியைக் கண்டதும் ஓயாமல் ஓயாமல் ஊத்திக் குடித்த கதை என்பது தான் பொன்னியில் செல்வன் வெற்றி பெறவில்லை எனலாம்.  நடிகர்கள் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என திரையுலகில் உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றுகிறார்கள்  கல்கி கிருஷ்ணமூர்த்தி நாவலை படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரையுமே சந்தோசப்படுத்தும் வகையில் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.  கதை நாவல் வாசித்தல் செய்த பலர் அதை வடிவமைப்பு திரைப்படம் பார்த்து 70 ஆண்டு கால எதிர்பார்ப்பு இன்று அவர்களுக்கு நிறைவேறியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் பெருமையை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்று விட்டார் என்று கூடச் சொல்லலாம். மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.    இந்தியாவில் மிகப் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திராவும் பொன்னியின் செல்வன் படம் குறித்து தன்னுடைய கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் , "நான் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை பற்றி அதிகம் தெரிந்த தலைமுறையை சேர்ந்தவன். சோழ சாம்ராஜ்யம் குறித்து அறியாமலையே இருந்ததற்கு வருந்துகிறேன். சோழ சாம்ராஜ்யம் குறித்து நம்ப முடியாத பல தகவல்கள் இந்த படத்தில் ஆதாரங்களுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்"

என்று கூறிப் பதிவு.   இதற்கு லைக்கா நிறுவனம் பதில் டீவிட் போட்டவர்கள், "பொன்னியின் செல்வன் திரைப்படம் உங்கள் நம்பிக்கையை நிச்சயம் நிறைவேற்றும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது என்று கூறி படத்தின் டிரைலர் வீடியோ லிங்கை அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார் " தற்போது தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் டீவிட்டும், லைக்கா ப்ரொடக்ஷன் கொடுத்த பதில் டீவிட்டும் தான் சோசியல் மீடியாவில் வைரல், பொன்னியின் செல்வன் கதையின் சுருக்கம் இது (வரலாற்று சுருக்கம் அல்ல) 

சோழர்கள் வம்சத்தில் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் பராந்தக சோழர்.இவருக்கு மூன்று புதல்வர்கள்.

இராஜாதியர்,.கண்டாராதித்தர்.அரிஞ்சய சோழர்.இதில் இராஜாதியர் போரில் இறந்து விட கண்டாராதித்தருக்கு குழந்தை இல்லை இவர் தீவிர சிவ பக்தர்.

குழந்தை இல்லாததால் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார் அந்தக் குழந்தை பெயர் மதுராந்தகர்.இதில் இன்னொரு கருத்தும் உண்டு அவருக்கு காலம் சென்று குழந்தை பிறந்தது அதுதான் மதுராந்தகர் எனவும் சொல்வதுண்டு. அரிஞ்சய சோழருக்கு ஒரு பையன் அவர் பெயர் சுந்தரச் சோழர்.இந்த சுந்தர சோழருக்கு மூன்று குழந்தைகள் மூத்தவர் ஆதித்த கரிகாலன், நடுவில் குந்தவை, கடைசி அருண்மொழி வர்மன் என்கிற இராஜராஜச்சோழன்.இந்த சுந்தரச் சோழர் அருகில் இரண்டு முக்கிய தளபதிகள்  மருது சகோதரர்கள் போல பெரிய பழுவேட்டரையார், சின்னப் பழுவேட்டையார்.

பெரிய பழுவேட்டையார் அறுபது வயதானவர் என்றாலும் உடம்பில் வைரம் பாய்ந்த நபர் பல வீரத்தழும்புகளை பெற்றவர், கிழட்டுச் சிங்கம் அவர் தம்பி சின்ன பழுவேட்டையார் அண்ணன் சொல் மீறாத தம்பி.

தந்தையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார்கள் என்பதால் மூத்த மகன் ஆதித்த கரிகாலனுக்கு இவர்களைக் கண்டாலே பிடிக்காது அதனால் காஞ்சிபுரத்திலேயே தங்கி விடுகிறார். அதேபோல் குந்தவைக்கும் இவர்களைப் பிடிக்காது.

இலங்கையிலிருக்கும் பிரச்சனையை சரி செய்ய அங்கே சென்று தங்கி விடுகிறான் அருண்மொழிவர்மன்.

இராஜராஜச்சோழன் இலங்கை செல்ல முக்கியக் காரணம்,சோழ தேசத்தின் விசுவாசி கொடும்பாளூர் தளபதி பரந்தாகன் சிறிய வேளான் படையுடன் இலங்கை செல்லும் போது படைகள் ஒன்று சேர்வதற்கு முன் பரந்தாகன் சிறிய வேளான் கொல்லப்படுகிறார் இதன் பின் ஒளிந்திருந்த வீரபாண்டியனும் இலங்கை மன்னனோடு சேர்ந்து கொள்கிறான் இதனால் கோபம் கொள்கிற சோழர் படைத்தளபதி ஆதித்த கரிகாலன் அணைவரையும் காலி செய்கிறான்.
மீண்டும் குகையில் ஒளிந்து கொள்கின்ற வீரபாண்டியனை இழுத்து வந்து வெட்டப்போகிறான். அதை அவனுடைய மனைவி வேண்டாமென தடுத்து கெஞ்சுகிறாள் அதையும் மீறி தலையை வெட்டி விடுகிறான்.இதைக் கண்ட வீரபாண்டியனின் மனைவி சபதம் ஏற்கிறாள்.இதன் பிறகு நடக்கும் களேபரங்களை ஒடுக்கத்தான் இராஜராஜச்சோழன் இலங்கை செல்கிறார்.

சோழ தேசத்தை ஒழிப்பேன் என சபதம் ஏற்கும் வீரபாண்டியனின் மனைவி தான் நந்தினி.

இந்த நந்தினி தன்னை யாரேன்று மறைத்து பெரிய பழுவேட்டையார் மனைவியாக சோழ நாட்டின் அரண்மனையில் வாழ்கிறாள்.

சுந்தரச் சோழர் நோய்வாய் படுகிறார்.வானில் துருவ நட்சத்திரம் தோன்றுகிறது. அடுத்த அரசர் யார் என சோழ தேதத்தில் குழப்பம் வருகிறது.பழுவேட்டையார்கள் அடுத்திருக்கும் பொது உலகு அறியாத மதுராந்தகரை அரசராக்கி அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கிறார்கள்.

இலங்கைப் போரில் கொல்லப்பட்ட கொடும்பாளுர் தளபதி மகள் வானதியை,குந்தவை அரண்மனைக்கு அழைத்துச்சென்று தன் அருகிலே வைத்திருக்கின்றார். இவர்தான் பின்னாளில் ராஜராஜச்சோழனின் மனைவியாகிறார்.

உடம்பு சரியில்லாமலிருக்கும் தன் தந்தையை தன்னுடன் தங்கும்படி அழைப்பு விடுத்து அவருக்கு ஒரு ஓலையும்,தன் தங்கைக்கு ஒரு ஓலையும் கொடுத்து தன் நம்பிக்கையான தளபதியிடம் தஞ்சாவூருக்கு  அனுப்புகிறான் ஆதித்த கரிகாலன்.

அந்த தளபதிதான் வாணர் குலத்தைச் சேர்ந்த வந்தியத்தேவன். அவன்தான் பொன்னியின் செல்வனின் கதாநாயகன். அவன் ஓலையை எடுத்துக்கொண்டு  வீராணம் ஏரி வழியாக தஞ்சாவூர் நோக்கி வரும்போது பொன்னியின் செல்வன் கதை துவங்குகிறது.

வரும் வழியில் தன் பால்ய நண்பன் கந்தன் மாறனைச் சந்திக்க கடம்பூர் சம்புவரையர் மாளிகை வருகிறான்.ஆனால் அவன் காணும் காட்சிகள் வேறு மாதிரி இருக்கிறது.அரசரை மாற்ற சதி ஆலோசனை அங்கு நடப்பதை உணர்கிறான். அங்கு ஆழ்வார்க்கடியான் என்ற ஒரு வைணவரைச் சந்திக்கிறார். இவர் ஒரு வீர..? வைணவர். சோழர் குலத்து முதல் மந்திரியான அனிருத்த பிரம்மராயருடைய ஒற்றன்.


இவன் வரும் வழியில் ஒரு நபரை சந்தேப்பட்டு பின் தொடர்கிறான். அங்கு ஒரு குழுவாக ஆதித்த கரிகாலனையும், இராஜராஜச்சோழனைக் கொல்ல திட்டம் போடுகிறார்கள். அவர்கள் ரவிதாசன்,சோமன் உள்ளிட்ட பாண்டிய ஆபத்துதவிகள்.

தஞ்சாவூர் சென்று சேரும் வந்தியத்தேவன் அரண்மனைக்குள் செல்ல முடியாமல் தவிக்கிறான் அவனுக்கு ஒரு பூ விற்கும் தம்பி உதவுகிறான் அவன் பெயர் சேந்தன் அமுதன்.பல இன்னல்களுக்கிடையே சுந்தரச்சோழனிடமும்,குந்தவையிடமும் ஓலையை சேர்க்கிறான் வந்தியத்தேவன்.குந்தவையின் உத்தரவுக்கிணங்க அவர் கொடுத்த ஓலையுடன் இராஜராஜச்சோழனிடம் கொடுக்க இலங்கை கிளம்புகிறான் வந்தியத்தேவன். இலங்கை செல்ல கோடியக்கரையில் உதவி செய்யும் பெண்ணின் பெயர் பூங்குழலி.

இந்த பூங்குழலி,தஞ்சாவூரில் வந்தியத்தேவனுக்கு உதவி செய்த சேந்தன் அமுதனின் முறைப்பெண்.

இலங்கை சென்று இராஜராசசோழனைக் கண்டு ஓலையை கொடுக்கிறான்.இதன் படியே பழுவேட்டையார்களும் இராஜராஜசோழனை அழைத்து வர கப்பல் அனுப்புகிறார்கள்.

அந்த கப்பலில் வந்தியத்தேவனும்,   இராஜராஜனும் வரும்போது கோடியக்கரை அருகே கப்பல் புயலில் சிக்குகிறது. இதில் மூர்ச்சையான இருவரையும் பூங்குழலி காப்பாற்றி நாகப்பட்டினம் புத்தவிகாரையில் சேர்க்கிறாள்.

இராஜராஜச்சோழன் புயலில் சிக்கி இறந்துவிட்டதாக சோழ தேசமெங்கும் செய்தி பரவுகிறது.               மக்கள் கொதிப்படைகிறார்கள் இதற்கு பழுவேட்டையார்கள் காரணம் என நினைக்கிறார்கள்.

இரகசியமாக தம்பியைக் காண புத்தவிகாரைக்கு வரும் குந்தவை,வந்தியத்தேவனிடம்,ஆதித்த கரிகாலனை கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்கு வரவிடாமல் தடுக்கணும் அல்லது மீறி வந்தால் அவர் உயிரை பாதுகாக்க வேண்டும் என அனுப்புகிறார்.


ஆதித்த கரிகாலனை பழிவாங்க துடிக்கும் நந்தினி நயவஞ்சமாக கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்கு வரவைக்கிறார்.

நந்தினி மேல் ஆதித்த கரிகாலனுக்கு ஒரு மயக்கம் உண்டு.

கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் வைத்து ஆதித்த கரிகாலன் படுகொலை செய்யப்படுகிறான்.கொன்றவர்கள் பாண்டிய ஆபத்துதவிகள் இவர்கள் நந்தினின் ஆட்கள்.ஆதித்த கரிகாலனை காப்பாற்ற முடியவில்லையே என வந்திய தேவன் மனவேதனை அடைகிறான்.

ஆதித்த கரிகாலன் கொலைப்பழி வந்தியத்தேவன் மேல் விழுகிறது.

இதிலிருந்து வந்தியத்தேவன் மீண்டு விட்டானா சோழ தேசம் தப்பித்ததா என  கல்கி இரா. கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் கதையௌப்  படிக்கவும் அல்லது சினிமாவை பார்த்துத்  தெரிந்து கொள்ளவும். அது வரலாறு அல்ல வரலாறு மாதிரி கல்கி கதை தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

பதிவு செய்யும் பத்திரங்களில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் கட்டாயம் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை

ஆவணங்கள் பதிவு செய்யும் போது எழுதிய பத்திரங்களின் கடைசி பக்கத்தில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால் பதிவு செய்த பத்திரப் பதிவு செல்லாது      அதோடு தற்போது அவரது புகைப்படம் இணைப்பு வேண்டும். கடைபிடிக்காத ஆவண எழுத்தர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை   பத்திர பதிவுத்துறைமின் சுற்றறிக்கை முழு விபரம்‌ பத்திரப் பதிவு செய்யும் ஆவணங்களில் பதிவு ஆவண எழுத்தர் பெயர், உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால், அந்த பத்திரப்பதிவு செல்லாது. தமிழகத்தில் போலியான பத்திரங்கள் பதிவாவதைத் தடுக்க மாநில பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அதில், ஆவணத்தை தயார் செய்த ஆவண எழுத்தர் அல்லது வழக்குறைஞர் பார் கவுன்சில் பதிவு எண் பெயர் மற்றும் உரிமம் எண் உடன் புகைப்படம் இணைத்து பதிவு செய்ய வேண்டும். ஆவண எழுத்தரின் புகைப்படமும் அதன் கீழ் அவரது கையொப்பமும் வேண்டும். இந்த நடைமுறை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ள இந்த நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் மாதிரிப் படிவம் ஒன