முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மரணம் தொடர்பு ஆணையத்தின் அறிக்கை குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் சிறப்புப் பேட்டி

மறைந்த முதல்வர் ஜெ. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமணையில் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை நேற்று முன்தினம் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

ஜெயலலிதா சுய நினைவுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும், மயக்கமடைந்த பிறகு, அனைத்து நிகழ்வுகளும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்றும் அறிக்கை அதிர்ச்சி  கிளப்பிவிட்ட நிலையில் தற்போது   முக்கியமாக  தமிழ் இணைய இதழில் , மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் சிறப்புப் பேட்டி அளித்துள்ளதில் அவர் கூறியுள்ள கருத்துக்களைப் பார்ப்போம் அவரது வினா?வில் நமக்கும் உடன்பாடு உண்டு, நாம் சொல்ல நினைப்பதை அவர் கூறுகிறார் :- "டாக்டர் ரிச்சார்ட் பீலே என்பவர் தாஜ் ஹோட்டலில்





அந்தச் சமயத்தில் தங்கியிருந்தார். ரூபாய்.2987.81 பைசாவுக்கு ஒரு டிரிங்க்ஸ் குடிச்சிருக்கார். மறுநாள் ரூபாய்.1554.87 பைசாவுக்கு ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.



இந்த விஷயத்தைத் தான், நான் முக்கியமானதாக பார்க்கிறேன். இதில் ஆறுமுகசாமி ஆணையம் தீவிரமாக இறங்கி விசாரித்திருந்தால், அவர் என்ன டிரிங்க்ஸ் அன்று சாப்பிட்டிருப்பார் என்று கண்டுபிடித்திருக்கலாம். மற்றபடி இந்த ஆறுமுகசாமி ஆணையத்தின் ரிப்போர்ட்டானது, குப்பையில் போட வேண்டிய ரிப்போர்ட்டு தான்.காரணம், இதன் முகாந்திரம் என்ன?       நோக்கம் என்பது முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மர்ம மரணத்தைக் கண்டுபிடிப்பது கிடையாது.

ஓ.பன்னீர் செல்வம் மற்றும்  எடப்பாடி கே.பழனிச்சாமி  இருவருக்கும் நடுவில் நடந்த சமரசத்தின் பாகமாக வந்த கமிஷன் இது. ஜெயலலிதாவின் மரணத்தில், எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு டவுட்டே கிடையாது. அதிமுகவில் பெரும்பாலான தொண்டர்களுக்கும் இது சம்பந்தமான எந்த டவுட்டும் இல்லை. ஒரு குறிப்பிட்ட பேருக்கு மட்டும் தான் டவுட் இருந்தது.. அப்படி அவர்களுக்கெல்லாம் மரணத்தில் சந்தேகம் இருந்திருக்கும் என்று சொன்னால், எய்ம்ஸ், அமெரிக்கா, சிங்கப்பூர், ஐரோப்பியாவிலிருந்தோ டாக்டர்களை வரவழைத்திருக்க மாட்டார்கள்.  அதனால், இந்த விஷயத்தில் கமிஷனே தேவையில்லை.இந்தக் கமிஷன் படி இரண்டு  ரிப்போர்ட்கள் எடுக்கப்படுகின்றன.

ஆஸ்பத்திரிக்கு வருவதற்கு முன்பு இருக்கக்கூடிய உடல்நிலை, ஆஸ்பத்திரிக்கு வந்தபிறகு அவரது உடல்நிலை பற்றி குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். ஆனால், இந்த அறிக்கையில் தேவையில்லாத விஷயங்களைதான் நிறையச் சொல்லியுள்ளார்கள். ஜெ.ராதாகிருஷ்ணன் கால்நடை டாக்டரா? இல்லையா? என்று அழுத்தமாக அதையே பேசக் காரணம் என்ன? உங்களுக்கென்ன அதில் அவ்வளவு பெரிய ஆனந்தம்?

ஜெ.ஜெயலலிதா மரணத்தில் எந்த விதமான மர்மமும் கிடையாது, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை நாம் கடந்து போக வேண்டியது தான்.

பேஷண்ட் ஜெ.ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்ட நேரத்திற்கும் சாட்சியங்கள் சொன்ன நேரத்துக்கும் வித்தியாசம் உள்ளதாக எப்படி சொல்கிறார்கள்? ஒரு முதல்வர் இறந்ததை, 30 மணி நேரம் மறைத்து வைத்திருக்க முடியுமா? ஒருநபர் இறந்துவிட்டார் அல்லது இறக்கவில்லை என்பதை யார் முடிவு செய்வது? நீதிபதியா முடிவு செய்வார்? டாக்டர் தானே முடிவு செய்ய வேண்டும்.  ஒரு முதல்வரோ, அமைச்சரோ, ஒரு முக்கியப் பிரமுகரோ அட்மிட் ஆகிறார் என்றால், அவர் இறந்துவிடக்கூடாது என்ற குறைந்தபட்ச அறிவாவது ஆறுமுகசாமி கமிஷனுக்கு இருக்கிறதா? ஆஞ்சியோ செய்ய வேண்டுமா? வேண்டாமா? அதை பேஷண்ட் தாங்குவார்களா? இல்லையா? என்பதை யார் முடிவு செய்ய வேண்டும்?சிகிச்சைக்கு வெளிநாடு கொண்டு செல்வது முதல் எதுவானாலும், சட்டப்பூர்வமாக சசிகலா நடராஜனால். எதிலுமே முடிவெடுக்க முடியாது. அது தொடர்பாக கையெழுத்தும் போட முடியாது. எம்ஜிஆரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றபோது, ஹண்டேவிடம் சிறப்பு அதிகாரம் தரப்பட்டு, எம்ஜிஆர் சம்பந்தப்பட்ட விஷயங்களை கவனித்துக் கொள்வது முதல் கையெழுத்து போடுவது வரை அத்தனையும் அன்று கேபினெட்டில் பேசி முடிவு செய்தார்கள். வி.என்.ஜானகியம்மையார் கூடவே இருந்தாலும்கூட, முடிவெடுத்தது என்னவோ கேபினட்தான். ஆனால், கேபினெட் எடுத்த முடிவுக்கு ஜானகியம்மா ஒப்புக் கொண்டார். அந்த மாதிரி இந்த விஷயத்தில் ஏதாவது நடந்ததா?ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது, எனக்கு தெரிந்து ஆறு முறை கேபினெட் வந்து போயுள்ளார்கள். அப்போதுகூட சிகிச்சை உட்பட இந்த விவகாரத்தில் யார் முடிவெடுப்பது என்பது தீர்மானமாகவில்லை.. சிகிச்சை தொடர்பாக சசிகலா நடராஜன்  முடிவெடுக்கட்டும் என்று கேபினெட்டே சொல்லியிருக்கலாமே? ஏன் சொல்லவில்லை? எனவே, இங்கு வந்து போன அனைத்து அமைச்சர்களுக்கும் இதில் பொறுப்புள்ளது. காரணம் ஆறு முறை கூடியிருக்கிறார்கள், அப்பறம் எப்படி டாக்டர் விஜயபாஸ்கர் மட்டும் பொறுப்பில் வருகிறார்? ஆறுமுகசாமி ஆணையம் தானே இதையெல்லாம் கேட்டிருக்க வேண்டும்.. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இராம்மோகன்ராவ் என்ற அதிகாரியை இதில் சேர்த்து விட்டுள்ளார். மாநில முதல்வர் தொடர்பாக, அதிகாரி தான் முடிவெடுப்பாரா? மேல்சிகிச்சைக்கு கொண்டு செல்வதற்கு சட்ட விதிகள் நிறைய உள்ளன. ஒரு சட்டரீதியான விஷயங்களைக்கூட அளிக்காத அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தைப் பார்த்து, ஏன் ஆறுமுகசாமி கேள்வி எழுப்பவில்லை? அப்படி என்ன உள்நோக்கம்? ஏனென்றால் ஓ.பன்னீர் செல்வத்தால் தானே இவருக்கு இந்த வேலையே கிடைத்திருக்கிறது. கமிஷன் நியமனத்துக்காக நாலரை கோடி ரூபாய் செலவு செய்தவரைப் பார்த்து கேள்வி எழுப்ப முடியாத கூச்சம் இருந்திருக்கும்.யாரை ஓங்கி அடிக்க முடியாதோ அவர்களை பலிஆடு ஆக்கிவிடுவது தான் கமிஷனின் வேலை. ராதாகிருஷ்ணன், ராம்மோகன்ராவ், அப்போலா மூன்று  டாக்டர்கள், அதிகார பலம் இல்லாத சசிகலா, விஜயபாஸ்கர் இப்படி கோர்த்து விட்டுள்ளார். இன்னைக்கு அதிகாரத்தில் உள்ள யாரையாவது பார்த்து கமிஷனில் சேர்த்துள்ளார்களா? அதிகாரத்தில் உள்ளவர்களை ஏதாவது கேள்வி கேட்டிருக்கிறார்களா? ஏன், அன்னைக்கு டெல்லியில் இருந்து அமித்ஷா வந்து போகலையா? மோடி வந்து போனாரே? அமைச்சர்கள் வந்து போனார்களே? வெங்கய்யா நாயுடு இங்கேயே தான் டென்ட் போட்டு உட்கார்ந்துட்டு இருந்தாரு. யாரையுமே இவங்க எதையுமே விசாரிக்கவில்லை.யார் மீதெல்லாம் காழ்ப்புணர்ச்சி உள்ளதோ, அவர்கள் மீதெல்லாம் ஆறுமுகசாமி புழுதி வாரி இறைத்துள்ளார்.. அப்பல்லோ மருத்துவமனை மீது இவருக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி உண்டு. அப்போலா மருத்துவமனை டாக்டர்களை அடிக்கடி விசாரணை என்று கூப்பிட்டுக் கொண்டே இருப்பாராம்.. ராதாகிருஷ்ணன் மீதும் தனிப்பட்ட பகை இருக்கிறது. அதையெல்லாம் இங்கே பேச முடியாது.. ஏன் இந்த விவகாரத்தில் எடப்பாடி கே.பழனிச்சாமி பெயர் வரமாட்டேங்குது? ஏன் ஓ.பன்னீர்செல்வம்  பெயர் இதில் வரவில்லை? எனவே, என்னைப் பொறுத்தவரை ஜெயலலிதா.மரணத்தில் மர்மம் கிடையாது.. இது வேஸ்ட் கமிஷன். இதை நாம் கடந்து போக வேண்டும்..திமுக இதில் நிச்சயம் அரசியல் நோக்கம் இருக்கிறதா என்றுதான் பார்ப்பார்கள்.. அதை தவறு என்று சொல்லவில்லை.. மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடிப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதியில் சொன்னார்.. சட்டசபையில் ஆறுமுகசாமியை கிட்டத்தட்ட சப்போர்ட் செய்வது போலதான் பேசிக் கொண்டிருந்தார்கள். இப்படி அறிக்கையை தாக்கல் செய்து, இன்னொரு வாக்குறுதியையும் நிறைவேற்றிவிட்டோம் என்று அரசியல் செய்துவிட்டார்கள். வேறெதும் இதில் இல்லை" என்றார். மற்றும் உயர் பாதுகாப்பு பிரிவில் உள்ள முக்கியப் பிரமுகர்களுக்கு மட்டுமே, இந்த கறுப்பு பூனைப்படை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இப்பாதுகாப்பு பிரிவில் பணியாற்றுபவர்கள், 24 மணி நேரமும், குறிப்பிட்ட முக்கிய பிரமுகர் அருகில் நிழல் போல இருந்து, அவரை பாதுகாக்க வேண்டும். பாதுகாப்பில் உள்ள முக்கியப் பிரமுகருக்கு, அவர் வசிக்கும் இடத்திற்கு உள்ளேயும்; வெளியேயும் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என்பதால், வசிக்கும் இடத்துக்கு உள்ளேயும் வெளியேயும், இந்த பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் இருப்பர்.அந்த வகையில் பார்க்கும்போது, ஜெயலலிதாவை அப்பல்லோவில் சேர்க்க முடிவெடுத்து, ஆம்புலன்சை வரவழைத்துள்ளனர். ஆனால், அந்தத் தகவல் கறுப்பு பூனைப் படையினருக்கு சொல்லப்பட்டிருந்தால், ஆம்புலன்சுடன், அவர்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்திருக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு தொடர்ச்சியாக 75 நாட்களும், கூடவே இருந்து பாதுகாப்பளித்திருக்க வேண்டும்.நேசனல் செக்யூரிட்டி கார்டு ஆக்ட் 1986 ல் உள்ள பிரிவுகள் 15, 18 ,43 என்ன சொல்கிறது தெரியுமா? உயர் பாதுகாப்புப் பிரிவில் உள்ள முக்கியப் பிரமுகரின் பாதுகாப்பில் உள்ள படையின,ர் 24 மணி நேரமும் கண்ணை இமைகாப்பது போல, அவரைப் பாதுகாக்க வேண்டும். தங்கள் பாதுகாப்புப் பணியில் இருந்து தவறினாலோ, அல்லது வெளியில் உள்ள சட்ட விரோதமான கும்பலின் பேச்சைக் கேட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடாமல் விலகியிருந்தாலோ, அவர்கள் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட்டால், மரண தண்டனை கிடைக்க வழிவகை உள்ளது.

அப்படிப் பார்க்கும் போது எழுத்துப்பூர்வமான உத்தரவு வராமல், ஜெயலலிதாவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கறுப்புப் பூனைப் படை அஜாக்கிரதையாக இருந்தது நிரூபிக்கப்பட்டால், அவர்கள் நிச்சயம் மரண தண்டனையை எதிர்கொள்ள வேண்டிய நிலை  வரும்

இந்தியாவில் வழங்கப்பட்டு வரும், இசட் பிளஸ் பாதுகாப்பின் பின்னணி குறித்து சடட நிபுணர்கள் சிலர் கூறியதாவது:

1986 ஆம் ஆண்டில், தேசிய பாதுகாப்புப் படை வீரர்களுக்கான சட்டம் உருவாக்கப்பட்ட போதிலும், இது மிகக் கூர்மையாகக் கவனிக்கப்பட்டது 1989 ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த வி.பி.சிங் அமைச்சரவையில் உள்துறை அமைச்சர் முப்தி முகம்மது சயீது மகளான, தற்போதைய காஷ்மீர் முதல்வர் மெகபூபாவை. தீவிரவாதிகள் பணயக் கைதியாகக் கடத்திச் சென்றனர். அதன் பின்னர் தான் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு, அவர்களின் பாதுகாப்பு கருதி, என்.எஸ்.ஜி., பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதனால் பொது வாழ்க்கையில் ஈடுபடும் அரசியல் தலைவர்கள், அச்சுறுத்தல் ஏதும் இல்லாமல், தைரியமாக செயல்படும் வகையிலேயே, இந்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. அப்படிதான், இந்த பாதுகாப்பு ஜெ.ஜெயலலிதாவுக்கும் வழங்கப்பட்டது. ஜெ.ஜெயலலிதா அப்பல்லோவிலிருந்த நாட்களில் இந்தப்பூனைகள் ஒதுங்கிக் கொண்டனர்.. 

ஜெ.ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவை சந்தேகப்படத் தோன்றுகிறது என்ற தகவல்   மத்திய அரசையே கைகட்டி வேடிக்கை பார்க்க வைக்குமளவுக்கு சசிகலா சர்வவல்லமை உடையவராக இருந்தாரா என்ற வினா?  எழுகிறது 

ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக நியமித்து ஜெ.ஜெயலலிதா கைரேகை வைத்திருந்தார்.. அது ஜெ.வின் ஒப்புதலோடு தான் நடக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளாமல் அப்போதயஆளுநர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்,  

ஜெ.ஜெயலலிதா மரணத்தில் சந்தேகப்பட வேண்டியது சசிகலாவை மட்டும்தானா..நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை மொத்தம் 608 பக்கங்கள்

ஜெ.ஜெயலலிதாவுக்கு கருப்புப் பூனைப் படை பாதுகாப்பு கோரப்பட்டு, அதன்படி அளிக்கப்பட்டு வந்தது.அன்றிலிருந்து ஜெயலலிதா இறுதியாக மருத்துவமனைக்குச் செல்லும் வரையிலும் எஸ்.ஜி யைப் பொறுத்தவரை ஒரு வி.வி.ஐ.பி அவரது வீட்டில் இருந்து இன்னொரு இடத்திற்குப் பயணம் செய்துவிட்டு, மீண்டும் தன் இருப்பிடத்திற்கு திரும்பி வரும்வரை சம்பந்தப்பட்ட வி.வி.ஐ.பி-யின் பாதுகாப்பு இவர்களின் பொறுப்பில்தான் இருக்கும்.

ஒவ்வொரு வி.வி.ஐ.பி-க்கும் தனிப்பட்ட மெய்க்காவலர்கள்,  பாதுகாவலர்கள் தவிர, மாநில அரசு அளிக்கும் கமாண்டோ பாதுகாப்பும் இருக்கும். அவர்களுக்கும் அடுத்த உயர் பாதுகாப்புதான் என்.எஸ்.ஜி.

ஒரு வி.வி.ஐ.பி வீட்டில் இருந்து புறப்படுவதற்கு 15 நிமிடங்கள் முன்னதாக, இவர்கள் தயாராக இருப்பார்கள். அதுவரை வி.வி.ஐ.பி-யின் தனிப் பாதுகாவலர்கள் மற்றும் மாநிலப் பாதுகாப்புப் படை வசம் உள்ள வி.வி.ஐ.பி-யின் பாதுகாப்பு என்.எஸ்.ஜி-யிடம் ஒப்படைக்கப்படும். மீண்டும் இருப்பிடத்திற்கு வந்த பிறகு உள்ளுர் பாதுகாப்பு மற்றும் மெய்க்காவலர்களிடம் வி.வி.ஐ.பி-யை ஒப்படைத்து விட்டு எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெற்ற பிறகே, என்.எஸ்.ஜி அங்கிருந்து நகரும்.

ஒருவேளை அந்த வி.வி.ஐ.பி வெளியே ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்கிறார் என்றால், அவரோடு மெய்க்காவலர்கள் தவிர, ஒரு தலைமை என்.எஸ்.ஜி ரேஞ்சரும் உடனிருப்பார். வி.வி.ஐ.பி-யின் உயிரைப் பாதுகாக்க, இவர்களுக்கு எந்த சட்ட விதிமுறைகளும் தடையாக இருக்காது. அதே சமயம், முதல்வர் அலுவலகம், சட்டசபை ஆகியவற்றினுள் இவர்கள் வி.வி.ஐ.பி-க்களுடன் செல்ல மாட்டார்கள். ஏனெனில் சட்டசபை என்பது மக்கள் பிரதிநிதிகள் அரங்கம் என்பதால் அங்கு சபைக்காவலர்களைத் தவிர, வேறு எவரும் நுழையக்கூடாது.லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே, அமெரிக்க மருத்துவர் சமீன் சர்மா ஆகியோரை ஆணையம் ஏன் விசாரிக்கவில்லை? அவர்களிடம் விசாரிக்க வேண்டாம் என தடுத்தது யார்? அவர்களிடம் விசாரித்து இருந்தால், ஜெயலலிதாவுக்கு உலகத்தரமான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என கூறியிருப்பர். அவர்களை இந்த ஆணையம் திட்டமிட்டே விசாரிக்காமல் விட்டுள்ளது.டிஜிபி, கூடுதல் டிஜிபி, ஐஜி என 9 காவல்துறை  உயரதிகாரிகளிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. அதில் சதித்திட்டம் குறித்து யாருமே ஒன்றும் கூறவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...