திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் செல் டயல் பைனான்ஸ் என்ற மோசடி நிறுவனம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த முருங்கை, தக்கோலம், புதுகேசாவரம் பகுதிகளில் தீபாவளி சிறு சேமிப்பு திட்டம் நடத்தி பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மளிகைப் பொருட்கள், தங்கம், எலக்ட்ரானிக் சாதனங்கள் போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி 80 லட்சம் ரூபாய் வரை வசூலித்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை என்பதால் பணம் செலுத்தியவர்கள் சீட்டு நடத்தியவர்களிடம் கேட்டுள்ளனர். பணம் வசூலித்தவர்கள் உரிய பதிலளிக்காததால் ஆவேசம் அடைந்த முருங்கை கிராம மக்கள்,
நிறுவனம் நடத்தி வந்த செய்யாறு மற்றும் பல்வேறு பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு, பணம் வசூலித்த லதா, அவரின் உறவினர் ஞானவேலு மற்றும் கார் ஓட்டுனர் ஆகிய மூன்று பேரையும் நேற்று சிறை பிடித்ததையடுத்து அவர்களை தக்கோலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த போது, காவல்துறையினர் காஞ்சிபுரத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து செய்வதறியாமல் ஏமாற்றமடைந்த மக்கள், அவர்களை முருங்கைப் பகுதிக்கு கொண்டு வந்தனர். மேலும் நேற்று இரவு, பெண் என்பதால் லதாவை விடுவித்து அனுப்பி வைத்தனர். தற்போது என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் அப்பகுதி மக்கள் குழம்பி ஏமாந்து திரும்பிச் சென்றனர்.ரூபாய் 3,000 க்கு ரூபாய் 15,000 மதிப்பு பொருட்கள் வழங்குவதாக
தமிழகம் முழுவதும் 71,000 கோடி தீபாவளி நிதி வசூலித்து மோசடி
‘சதுரங்க வேட்டை' படம் போல தீபாவளி பண்டு ரூ.1,000 கோடி வசூலித்து மோசடி செய்தவர் கள் ஓட்டம் பிடித்ததால், முதலீட்டாளர்கள் 10 லட்சம் பேர் கவலை அடைந் துள்ளனர். இது குறித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை விசாரித்து நடவ டிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந் துள்ளது.
தமிழில் 'சதுரங்க வேட் டை' சினிமா படத்தில் மக்களை ஏமாற்ற முதலில் அவர்களது ஆசையை தூண்ட வேண்டும் என்று உரையாடல் வரும். இதே தந்தி ரத்தைப் பயன்படுத்தி, திரு வண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர் ஆரணி இணைப்புச்சாலை மற்றும் ஆற்காடு சாலை லோகநாதன் தெருவில் அரசு மகளிர் பள்ளி அருகில் செயல்பட்ட தீபாவளி நிதிச் சீட்டு நடத்திய நிறுவனங்கள் அதிகளவில் பொருட்களைத் தருவதாக கூறி வசூலில் ஈடுபட்டுள்ளது. துவக்கத்தில் ஒரு சிலர் மட்டுமே முதலீடு செய்த நிலையில், கடந்த இரண்டாண்டுகளாக குறிப்பிட்ட நேரத்துக்குப் பொருட்களை வாரி வழங்கியுள்ளனர்.
இதற்காக 13 ஆயிரம் தவணைத் தொகையாக கட்டினால், தீபாவளிக்கு ரூ. 15,000 மதிப்புள்ள பொருட் கள் தருவதாகவும், ரூ.50,000 கட்டினால் இரண்டரை சவரன் தங்க நகை, வெள்ளி நகைகள் பாத்திரங்கள் கொண்ட கிப்ட் பொருட்கள் தருவதாகவும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டனர். இரணடாண்டுகளாக அனைவருக் கும் பொருட்களை வாரி வழங்கியதால் முதலீட்டா ளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்தது. முகம் தெரியாத நபர்கள் கூட பணத்தாசை காரணமாக முதலீடு செய்தனர் இதன் மூலம் இந்தாண்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணா மலை, ராணிப்பேட்டை.
வேலூர் மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் பேர் ரூ.1,000 கோடி. வரை முதலீடு செய் திருப்பதாகக் கூறப்படுகிறது இதில் செய்யாறு பகுதியில் மட்டும் ரூ.200 கோடிக்கு வசூலிக்கப்பட்டுள்ளதாகவும்.
இந்த நிலையில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், முதலீடு பெற்ற நிறுவனம் நடத்திய உரி மையாளர்கள் மற்றும் ஊழி யர்கள் திடீரென பொருட் களை வழங்காமல் ஒட்டம் பிடித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகவும் கவலையடைந்தனர். மேலும் முதலீட்டாளர்களி டம் வசூல் செய்து கமிஷன் வாங்கி சிலகாலம் மகிழ்ந்த உள்ளூர் ஏஜென்டுகளும் செய்வதறியாமல் தற்போது திகைத்து வருகின்றனர். எனவே பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவ டிக்கை எடுக்க முதலீட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்