ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு குடிமக்களின் வரவேற்பை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு குடிமக்களின் வரவேற்பை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்தத் திட்டத்தின் பயன்கள் இந்தியா முழுவதும் கிடைக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்
குடிமக்களில் ஒருவரின் ட்விட்டரை மேற்கோள் காட்டி பிரதமர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;
“இந்தத் திட்டத்தின் பயனை இந்தியா முழுவதும் உள்ளவர்கள் பெற முடியும் என்பது சம அளவிற்கு மிகவும் முக்கியமானதாகும்”.மலைப்பிரதேச மாநிலங்களின் வளர்ச்சிக்கான குடிமகனின் ட்விட்டரை பகிர்ந்தார் பிரதமர்
இந்தியாவின் மலைப் பிரதேச மாநிலங்களின் வளர்ச்சிக்கு பிரதமரின் தீர்மானம் சம்பந்தமாக ஒரு குடிமகனின் ட்விட்டரை, பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். மலைப்பிரதேச மாநிலங்களின் வளர்ச்சியானது ஒளிரும் கலங்கரை விளக்குகளாக மாறும் சாத்தியம் உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
குடிமகன் ஒருவரின் ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டி, பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், “நான் எப்பொழுதும் நம்புகிறேன், நமது மலைப்பிரதேச மாநிலங்களின் வளர்ச்சியானது ஒளிரும் கலங்கரை விளக்குகளாக மாறும் சாத்தியம் உள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள்