இந்தியாவில் பொருளாதாரம் குறைந்த உயர் ஜாதிக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லுமெனஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானதென தமிழக முதல்வர் உள்ளிட்ட பலர் கருத்து
இந்தியாவில் பொருளாதாரம் குறைந்த உயர் ஜாதிக்கான ஏழைகளின் வாரிசுகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு
செல்லுமெனஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு.
உச்சநீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகளில் மூவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதி ஏழைகளுக்கு வழக்கும் அவர்களது ஒதுக்கீட்டிலேயே 10 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்தது.
இந்தியாவில் 103 ஆவது அரசியல் சட்டத் திருத்தச் சீர்திருத்தத் திட்டம் EWS என்ற தனி வகுப்பை உருவாக்குகிறது; 50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு கூடாது என்ற அடிப்படை உரிமையை இந்த ஒதுக்கீடு மீறவில்லை - என நீதிபதி திரிவேதியும் தெரிவித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால்
பொருளாதரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 1,0 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது உறுதியானது உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லுமென உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் (3:2) கொண்ட அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு
உயர்சாதி ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு 2019 ஆம் ஆண்டில் 103 வது அரசியல் சாசனச் திருத்தத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட சட்டம் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. இடஒதுக்கீடு வரம்பு 50 சதவீதத்தை மீறக்கூடாதென்ற விதியை மீறியது, ஆண்டுக்கு எட்டு லட்சம் வரை வருவாய் வரம்பு நிர்ணயிக்கப்பட்டது, எந்த அளவுகோலின் அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீடு தீர்மானிக்கப்பட்டதென்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகிற நிலையில்,
சமூக ரீதியாக, மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்ற அரசியல் சாசன விதிகளை மீறி உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதாக மாநிலத்தில் ஆளும் திமுக, உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டமென்று திமுகவின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான வில்சன்
உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட போது. பொருளாதார ரீதியான இடஒதுக்கீடென்பது சமத்துவத்தை பின்பற்றச் சொல்லும் அரசியல் சட்டத்தின் பிரிவு 14 க்கு எதிரான அநீதி என்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கத்தையே சிதைக்கிறதென்றும் வாதிட்டார்.
மத்திய அரசின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்தச் சட்டத் திருத்தம் முறையானதென்று வாதிட்டனர். இப்படி நடந்த வாதப் பிரதிவாதங்களுடன் செப்டம்பர் மாதத்தில் ஏழு நாட்களும் அரசியல் சாசன அமர்வில் தொடர்ந்து விசாரிக்கப்பட்ட இவ் வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்ததில் ஐந்து நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள் உயர் ஜாதியினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதி செய்து உத்தரவு. அதில்
நீதிபதி மகேஸ்வரி:-
'இடஒதுக்கீடு விவகாரத்தில் மறுபரிசீலனை செய்யும் தருணம் வந்துவிட்டது. 10 சதவீதம் இட ஒதுக்கீடு செல்லும்; அதில் எந்தவித விதிமீறலுமில்லை. சமூக சமத்துவத்திற்கு எதிராக 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை' என்றும்.
நீதிபதி பேலா திரிவேதி:-
'10 சதவீதம் இடஒதுக்கீடு சட்டத்திருத்தம் 50 சதவீதம் இடஒதுக்கீடு என்ற வரையறையை மீறவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும்' என்றும்.
நீதிபதி பர்திவாலா:-
'ஒவ்வொரு ஒதுக்கீட்டுக்கும் கால நிர்ணயம் தேவை' என்றும் தீர்ப்பளித்தார்.
நீதிபதி ரவீந்திர பட்:-
10 சதவீத இடஒதுக்கீட்ட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் 10 சதவீத இடஒதுக்கீடு சட்டவிரோதம். தற்போதைய 10 சதவீதம் இடஒதுக்கீடு என்பது சமத்துவம் என்ற அரசியல் சாசனத்தின் இதயத்தையே தாக்குவது போலுள்ளது. இந்தச் சட்டத் திருத்தம் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கியுள்ள இடஒதுக்கீடு அவர்களை சிறப்பான உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்குகிறது. இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை மீற அனுமதிப்பதென்பது மேலும் மீறல்களுக்கு வழி வகுக்கும். தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீடு என்பது அந்த மாநிலத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு பின்பற்றுவது பிற்படுத்தப்பட்ட,
,ஆதிதிராவிட, மற்றும் பழங்குடிப் பிரிவினரைப் புறந்தள்ளி ஒதுக்கீடு என்பது அரசியல் சாசனத்தில் அனுமதிக்காத ஒன்று. 10 சதவீதம் இட ஒதுக்கீடுச் சட்டத் திருத்தம் சமூக பின் தங்கிய வகுப்பினருக்கு எதிராக உள்ளது. இட ஒதுக்கீடு என்பது சமூகத்தில் பின்தங்கிய உரிய அங்கீகாரம் இல்லாதவர்களுக்கானது என்ற நிலை என்பதை விடுத்து பொருளாதார அடிப்படையிலான நோக்கத்திற்கு மாற்றுகிறதென்று தெரிவித்ததனையடுத்து தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் தீர்ப்புடன் ஒத்துப்போக சமூகநீதி சமத்துவம் இல்லாத நிலை , இந்தச் சட்டத் திருத்தம் செல்லாதென்பதே அவரது தீர்ப்பாகும்..உயர்வகுப்பு இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்ற
தீர்ப்பு சமூக நீதி மீதான தாக்குதல் எனவும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின்
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதில்
'மத்திய அரசு மற்றும் பல மாநிலங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103-ஆவது திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இட ஒதுக்கீட்டின் நோக்கம் சமூக நிலை முன்னேற்றம் தான் என்ற சமூக நீதியின் அடிப்படை தத்துவத்தை இந்தத் தீர்ப்பு தாக்கி, தகர்த்தெறிந்திருக்கிறது.
மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி இரன்டாவது வாரத்தில் நாடாளுமன்றத்தில் அவசர, அவசரமாக கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் பல மாநிலங்களிலும் இந்த இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது. பொருளாதார அடிப்படையில் மட்டும் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் இந்த சட்டத்திருத்தம் செல்லாதென அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, உயர்வகுப்பு ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு செல்லும் என 3:2 என்ற விகிதத்தில் தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு இரு வகைகளில் அரசியலமைப்பு சட்டத்தின் இரு முக்கிய அம்சங்களுக்கு எதிராக அமைந்துள்ளது. அவற்றில் முதலாவது கல்வி, சமூக நிலை ஆகியவற்றில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; இரண்டாவது, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படக்கூடாது என்பதாகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கல்வியிலும், சமூகநிலையிலும் பின்தங்கியவர்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. அவர்களில் பட்டியல் ஜாதியினரும், பழங்குடியினரும் கல்வி - சமூகநிலையில் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், பிற்படுத்தப்பட்ட நிலையிலுள்ள மற்றவர்களை அடையாளம் காண்பதற்காகவே பின்னாளில் காகா கலேல்கர் ஆணையமும், மண்டல் ஆணையமும் அமைக்கப்பட்டன.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண மண்டல் ஆணையம் ஆய்வு செய்த 11 காரணிகளில் ஒன்று கூட தனித்த பொருளாதாரம் சார்ந்தவையல்ல. கடன், குடிசை வீடுகள், குடிநீர் வசதி இல்லாமை போன்ற சமூகத்தில் பின்தங்கிய நிலைக்குக் காரணமான அம்சங்கள் தான் கருத்தில் கொள்ளப்பட்டன. சமூக ஏற்றத்தாழ்வுகளின் கொடிய அடக்குமுறைகளை இவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக அனுபவித்து வந்தனர் என்பதால் தான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி சமூக மக்களின் இட ஒதுக்கீடு மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி வழங்கப்பட்டது.
ஆனால், இப்போது சமூகநிலையில் எந்த பின்னடைவையும் எதிர்கொள்ளாமல், அடக்குமுறைகளை அனுபவிக்காமல் பொருளாதார அடிப்படையில் மட்டும், அதுவும் கூட ஆண்டுக்கு ரூபாய். எட்டு லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களை ஏழைகள் என்று கூறி 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதும், அதை எந்த கேள்வியும் எழுப்பாமல் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்வதும் சமூகநீதியின் மீதான தாக்குதலாகும்.
இட ஒதுக்கீடு என்றாலே புள்ளிவிவரங்கள் எங்கே? என்று கேட்கும் உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் அத்தகைய வினாவை எழுப்பாதது மிகவும் வியப்பளிக்கிறது. உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2005-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டு, 2010-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட சின்ஹோ ஆணையத்தின் அறிக்கை தான் அடிப்படையாக கூறப்படுகிறது. ஆனால், அந்த ஆணையத்தின் அறிக்கையில், உயர்ஜாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று எந்தவிதமான பரிந்துரையும் அளிக்கப்படவில்லை; மாறாக, அவர்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கலாம் என்று மட்டும் தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, உயர்வகுப்பு ஏழைகளின் மக்கள்தொகையை அறிய எந்த விதமான கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை. இதை 11.12.2019 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய சமூகநீதி அமைச்சகமும் உறுதி செய்திருக்கிறது.
இவ்வாறு எந்தக் கணக்கெடுப்பும் நடத்தப்படாமல் உயர்ஜாதி ஏழைகளுக்கு எந்த அடிப்படையில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதென்பது தெரியவில்லை. அது குறித்து உச்சநீதிமன்றமும் எந்த வினாவும் எழுப்பாததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட போது, அதை உறுதி செய்ய போதிய அளவில் கூடுதல் புள்ளிவிவரங்களை திரட்ட வேண்டும் என்று கூறி அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. ஆனால், எந்த புள்ளிவிவரமுமே இல்லாமல் உயர்வகுப்பு ஏழைகள் இட ஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சமூகநீதி இரு அளவுகோல்களால் அளவிடப்படக்கூடாது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பில் மிகவும் கவலையளிக்கும் விஷயம் என்னவெனில், உயர்ஜாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு செல்லும் என்று 3 நீதிபதிகளும், செல்லாது என்று 2 நீதிபதிகளும் தீர்ப்பளித்திருந்தாலும் கூட, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று ஐந்து நீதிபதிகளும் கூறியிருக்கின்றனர். இது இந்தியாவின் சமூகநீதி தத்துவத்தை வறுமை ஒழிப்பு கொள்கையாக குறுக்கி விடும்; மேலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து வரும் சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்க வகை செய்யும்.
இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டுக்கு மிகக் கூடாது என்று 1962-ஆம் ஆண்டில் பாலாஜி வழக்கிலும், 1992-ஆம் ஆண்டு இந்திரா சகானி வழக்கிலும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், உயர்வகுப்பு ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை அனுமதிப்பதற்காக, இட ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பு வளைக்க முடியாததல்ல என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். இதுவும் சமூக அநீதியானது.
ஒருபுறம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பெரும்பகுதியினருக்கு கிரீமிலேயர் தத்துவத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. மற்றொருபுறம் உயர்வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. உயர்வகுப்பினருக்கான இடஓதுக்கீட்டின் அளவு அவர்களின் மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளது. ஆனால், பிற பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அவர்களின் அதிகமான மக்கள்தொகையில் குறைவாக பாதிக்கும் ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இட ஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு வளைக்கத்தக்கது தான் என்று உச்சநீதிமன்றமே கூறி விட்ட நிலையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முழுமையான சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்ய அவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக உயர்த்தி நிர்ணயிக்க மத்திய அரசு முன்வர வேண்டும். அதற்கு தமிழக அரசு தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலிக்கத்துவங்கியுள்ளது.தான் தற்போது உள்ள நிலை."பொருளாதார அடிப்படையிலான 10 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பு நூற்றாண்டு கால சமூகநீதி போராட்டத்திற்கு ஒரு பின்னடைவு"
என தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அறிக்கை. அமைந்துள்ளது.
'சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும்”
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக. மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:-
'பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக 2019-ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஐ.க. அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறை சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமையும் என்ற அடிப்படையில், இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்து நடத்தி வந்தது. இந்த வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது.
எனினும், தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, சமூகநீதிக்கு எதிரானதான முன்னேறிய வகுப்பினருக்கான இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான நமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்.
சமூகநீதியைக் காக்க முதல் அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வைத்த தமிழக மண்ணிலிருந்து, சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். எனத் தெரிவித்துள்ளார். CAUSE DETAILS :- SCC -Case Number: WP (C) 55/2019. வழக்கில் சீராய்வு மனு தாக்கலாகும் என்பதே தற்போதய நிலை.10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் ஜாதிகளாக : ஆற்காடு முதலியார் உள்ளிட்ட முதலியார்கள் முதலியார், பிராமணர்கள், ஆங்கிலோ இந்தியர் உரோமன் கத்தோலிக்கர் உள்ளிட்ட கிறிஸ்தவர்களின் ஆறு பிரிவினர்,ஹிந்து உயர்சாதியில் இருந்து கிறிஸ்தவராக மதம் மாறியவர்கள்,சைவ மற்றும் வெள்ளாள்கள்,தாவூத், மீர், மைமன், நவாப், லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் உள்ளிட்ட சுமார் பத்து வகை முஸ்லிம் பிரிவினர், செட்டியார்களின் பல பிரிவுகள் வெள்ளாளர்களின் பல பிரிவுகள், பலிஜா நாயுடுகள், ரெட்டியார்களின் பல பிரிவுகள், ராவ், ஆதி சைவர்கள் வீர சைவர் உள்ளிட்ட சைவர்கள் மற்றும் செங்குந்தர், சைவ சிவாச்சாரியர்கள், ஓதுவார்கள் நாயர்கள் (மேனன், நம்பியார் உள்ளிட்டோர்) அடங்கும். இச்சட்டத் திருத்தத்தின் படி உயர் சாதி பிராமணர், ராஜபத்திரர் (தாகுர்), ஜாட், மராத்தா, பூமிஹர், ஜெயின், செட்டியார் போன்ற சமூத்தைச் சேர்ந்த ஏழைகள் பயனடைவர். உயர் ஜாதியினரில் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவான வருமானம் அல்லது 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயன்பெற முடியும்.உயர் சாதிகளின் ஏழைகளுக்கு (பொது பிரிவினர்) 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வகையில் திருத்தம் செய்ய 124-வது அரசியலமைப்புச் திருத்தச் சட்ட மசோதா, ஜனவரி மாதம், 2019-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பொதுப்பிரிவினரில் உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டம் 14 சனவரி 2019 முதல் நடைமுறைக்கு வந்தது
கல்வி நிலையங்களிலும், அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பட்டியல் பழங்குடிகளுக்கு முறையே 15 சதவீதம் மற்றும் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு 27.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் படைவீரர்களுக்கு இந்திய அரசு மற்றும் இந்திய அரசு சார்ந்த பொதுத் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேவையான கல்வித் தகுதி படைத்த மாற்றுத் திறனாளிகளுக்கு, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்பில் 4 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்