இமயம் வென்று, ஈழம் கொண்டு, கலிங்கம் வீழ்த்திய, கடாரம் கொண்ட சோழச் சக்ரவர்த்தி அருண்மொழித் தேவரின் 1037 வது சதய நட்சத்திரப் பிறந்த நாள் விழாவில்
ஒவ்வொரு தமிழ்க் குடிகளும் அவரைத் தனது முப்பாட்டனாகவும் அவர்களெள்லாம் நேரடி வாரிசுகளாவும் முறுக்கேற்றி அவருக்கு புகழ் சேர்ப்பதில் தவறேதுமில்லை. ஆனால் , வரலாற்றில் மெய்த்தன்மை கண்டறியும் துறை ஒன்று
இந்தியாவில் உண்டு அதுவே க்ரோனாலஜி எனப்படும். அங்கு பொய்யான தகவல் இல்லை
தற்போது அதனை ஜாதியக் கண்ணோட்டத்தில் விமர்ச்சிக்க வேண்டிய அவசியமுமில்லை. இன்றைய தமிழ்நாட்டுச் சூழ்நிலையில் வந்தேறிகள் சூழ் உலகில் தொன்மைக்குடிகள் கொண்ட சமூகத்தின் போர் வீரம் கொண்ட அரசனை அனைத்து தொன்மைக் குடிகளும் தமக்கேற்றார் போல வாழ்த்தட்டும் அவரது வீரத்தை போற்றட்டும்.
ஆனால் ன்றய ஆசியாவை அன்று வென்ற அவரது வீரமும் கல்வெட்டும் செப்பேடும் "மெய் கீர்த்தியும் இராச இராச சோழத் தேவர்" என்றே வரலாறு பறைச்சாற்றுகிறது. தஞ்சாவூர் பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் 1010- ஆம் ஆண்டு கட்டி முடித்து குடமுழுக்கு நடத்திய கோவில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்வதோடு, இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் இருக்கிறது. மாமன்னன் இராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக 1 நாள் மட்டும் பெரிய கோவில் வளாகத்தில் நிகழ்ச்சிகள் நடந்தது.
இந்த ஆண்டு சதய விழா இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதன்படி சதய விழா நேற்று பெரிய கோவில் வளாகத்தில் மங்கள இசை, களிமேடு அப்பர் பேரவையின் திருமுறை அரங்கத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் சதயவிழாக்குழு தலைவர் செல்வம் வரவேற்றார். விழாவிற்கு தலைமை தாங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தனது கருத்தாக :-
"நமது நாட்டை பல மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்களில் பிறந்த நாள் சதய விழாவாக சிறப்பாக கொண்டாடப்படுவது மாமன்னன் ராஜராஜ சோழனுக்குத் தான் என்பது பெருமையானது.
ஒரு மன்னன், மக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டால், காலத்தினால் யாராலும் மறக்க முடியாதென்பதற்கு ராஜராஜ சோழன் தான் சான்று. இதற்கு களக்காட்டூர் காடன் மைந்தன் கல்வெட்டு சாட்சி.
மேலும் கண்ணன் ஆரூரான் என்பவர், ராஜராஜ சோழனின் பணியாளர் ஒருவர் தான் வெட்டிய குளத்திற்கு ராஜராஜ சோழன் பெயரை வைத்துள்ளார். இத்தகையை அன்பை பெற்றவர். காலத்தினால் அழிக்க முடியாத பல பொக்கிஷங்களைத் தந்தார்.
ஒரு மன்னன் போரில் படைக்கு பின்னிருந்து வழி நடத்தாமல், படைக்கு முன்னின்று வழி நடத்துவதில் சிறந்தவர் ராஜராஜன் என்பது கரந்தை செப்பேடுகள் தெரிவித்துள்ளது " எனக் கூறினார் .அதைத் தொடர்ந்து கருத்தரங்கம், திருமுறை பண்ணிசை, திருமுறையின் திருநடனம், பரதநாட்டியம், நாதசங்கமம், கவியரங்கம், பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெற்றது.
தொடக்க விழாவில் மத்திய தொல்லியல் துறை திருச்சிராப்பள்ளி மண்டல இயக்குனர் அருண்ராஜ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சூரிய நாராயணன், உதவி ஆணையர் கவிதா, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, சதய விழாக்குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெருவுடையார்-பெரியநாயகிக்கு பேரபிஷேகம்
இன்று(வியாழக்கிழமை) தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குகினார். அதனைத் தொடர்ந்து மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல், திருமுறை ஓதுவார் திருமுறைப்பண்ணுடன் ராஜவீதிகளில் திருமுறை திருவீதி உலா நடக்கிறது.
தொடர்ந்து பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடக்கிறது. மாலையில் பல்வேறு நிகழ்ச்சிகளும், இரவு ராஜராஜ சோழன், லோகமாதேவி ஐம்பொன் சிலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலாவுடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.
சதய விழாவையொட்டி தஞ்சாவூர் பெரிய கோவில் முழுவதும் எல்இடி வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரிய கோவில் முன்பும் அலங்கார தோரண வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன.
பெரியகோவில் அருகே உள்ள பாலம், சோழன்சிலை சிவகங்கை பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு தஞ்சாவூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. சதய விழாவை யொட்டி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று (வியாழக்கிழமை) உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜராஜ சோழச் சக்ரவர்த்தி அவரது காலத்திலுள்ள கல்வெட்டுகள் சாவா மூவா பேராடுகள் குறித்த ராஜராஜசோழன் செய்த அந்த ஏற்பாடு என்ன அன்று சைவ மதமில்லாத வைணவம் சமணம்,பௌத்த மதங்கள் இருந்த போதும் சைவ நெறி மட்டுமே ராஜராஜன் ஆட்சியில் சோழநாடு பின்பற்றியதை காணலாம். அந்த மக்களிடம் இருந்த ஆலயநலம், சமூகநலம், அரச வருமானம் என மூன்றையுமே சேர்த்து முடிவெடுத்த உன்னதமான அறிவும் ஞானமும் கொண்ட திட்டம்
அதாவது தஞ்சாவூர் கோவிலை கட்டிமுடித்த பின் அதற்கு அனுதினமும் விளக்கு ஏற்றும் அவசியமிருந்தது, இடைவிடாமல் அது எரிந்துகொண்டே இருக்கவேண்டும் என்பது விதி
இதனை அரசனே செய்யமுடியும் என்றாலும் நாடும், நாட்டு மக்களும் வளமாக வாழ்ந்தால் தானே வரி வரும், அதனால் எல்லா திட்டங்களும் மக்கள் நலம் சார்ந்து தான் முடிவெடுக்கபடும்.
காவேரி பாசணம் கொட்டி கொடுத்த முப்போகம் விளையும் காலங்களிலும், நாகபட்டிணம் துறைமுகமும் இன்னும் பல துறைமுகங்களும் சுங்கவரியாக அள்ளிக் கொடுத்த காலத்திலும், இன்னும் கடல்கடந்த கலங்கள் கொடுத்த வரியிலும் சோழதேசம் செழித்து மின்னிய. தென்றாலும் அகதிகளாக வருவோர், வறுமையுற்றோர் என சிலர் இருக்கத்தான் செய்தார்கள், அதற்கு பல உணவு சத்திரமும் தங்கும் சாவடிகளும் உண்டு,
அவர்களையும் வாழவைப்பது மன்னன் கடமை அல்லவா? இதனால் வகுத்த திட்டம்
90 ஆடுகள் அல்லது பேராடு என்பது மாடு அதில் ஆடுகளில் புருவை (பெண்) ஆடுகளும் மற்றும் (ஆண்) கடா ஆடுகளும் அடங்கிய மந்தை ஒன்று குடியானவர்களுக்கு வழங்கபடும், அவன் அனுதினமும் ஒரு ஆழாக்கு நெய் கோவில் விளக்குக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் என்பது தான் நிபந்தனை
அக்காலத்தில் மாட்டு பசு நெய் போல ஆட்டுப் பாலின் நெய்க்கும் பெரும் வரவேற்பு இருந்தது, ஆடுகள் வெறும் மாமிசத்துக்கு மட்டும் வளர்க்கப்படவில்லை
இதனால் வறுமையுற்றோர் அல்லது முதல் இல்லாதவர்கள் அரசரிடம் சென்று 90 அல்லது 94 ஆடுகள் கொண்ட மந்தை அல்லது, 45 மாடுகள் அடங்கிய மந்தையினை பெற்றுக்கொள்ளலாம்
இவை கொடுக்கும் குட்டிகள், பால் இதர விஷயமெல்லாம் குடியானவனுக்கே சொந்தம், அவன் அனுதினமும் ஒரு ஆழாக்கு நெய் ஆலயத்தில் கொடுத்தால் போதும்
அவன் பண்ணை அல்லது பட்டி பெருகப் பெருக அவன் நெய் மட்டும் கொடுத்தால் போதும், அதுவும் ஒரு ஆழாக்கு
இப்படி அவன் மந்தை பெருகிவிட்ட பின் அரசன் எப்பொழுது கேட்டாலும் அவன் அந்த 96 ஆடுகளையும் அல்லது 45 மாடுகளையும் திரும்பக் கொடுக்க வேண்டும், அரசன் கொடுத்த பொழுது என்ன வயதோ என்ன பருவமோ அதே பருவத்தில் அதே எண்ணிக்கையில் கொடுக்க வேண்டும்
இதனால் எப்பொழுதும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆடும் மாடும் அரசனிடம் தயாராக இருக்கும், இவை எப்பொழுது கேட்டாலும் அதே பருவத்தில் கிடைப்பதால் அவை சாவுமில்லாத மூப்புமில்லா ஆடுகளாக கருதபட்டனஅதுவே சாவா மூவா பெருஆடு ஆகும்.
இன்று 3 வயது ஆட்டைக் கொடுத்து 10 வருடம் கழித்துக் கேட்டாலும் அது 3 வயது ஆடாகவே வரும்
இதனால் அவை சாவே இல்லாத மூப்பே இல்லாத ஆட்டுமந்தையாயின, இவை "சாவா மூவா பேராடுகள்" என்றாயின
"நந்தாவிளக் கொன்றினுக்கு வைத்த சாவாமூவாப்பேராடு தொண் ணூறு" என்பது கல்வெட்டு வரி, இப்படி விளக்கு எரிக்க சாவா மூவா பேராடுகள் வழங்கபட்டன என்பதை சொல்லும் சாட்சியான வரி
இப்படி "சாவா மூவா பசுக்கள்" எனும் கூட்டமும் உண்டு
இதனால் என்னென்ன நன்மைகள் நடந்தன என்றால் முதலில் ஒரு குடும்பமே பிழைக்க வழி செய்யபட்டது, இரண்டாவது கோவிலில் விளக்கு தடையின்றி எரிந்தது, மூன்றாவது மந்தைகள் பெருகி அவை கொடுக்கும் வருமானம் அரச வரி, மக்கள் தேவை என எல்லா தரப்புக்கும் பயன்பட்டது
அந்த ஆடுகளும் மாடுகளும் இன்னொருவனுக்கு கொடுக்கும் படி எப்பொழுதும் சாகாத மூவாத தன்மையுடன் இருந்தன
இன்று உலகில் எத்தனை பொருளாதாரத் திட்டம் , வட்டி, நிதி என வந்தாலும் இம்மாதிரியான திட்டங்களின் அருகில் கூட எந்த நாடும் வரமுடியாது
இவை சோழ அரசாங்கம் எவ்வளவு ஞானமாக ஆண்டார்கள், எல்லா விஷயத்தையும் எப்படி ஞானமாக அணுகி எல்லோரையும் வாழவைத்தார்கள் என்பதற்கு சான்று
இதுபற்றிய கல்வெட்டு இன்றும் அங்கு உண்டு
"ஸ்வஸ்திஸ்ரீ கோராஜகேசரி பர்மற்கு யாண்டு – -ஆவது நாள் தேவதானந் திருத்துருத்தி மகாதேவர்க்குச் சோழப் பெருமானடிகள் போகியார் நங்கைசாத்தப் பெருமானார் நொந்தா விளக்கனுக்கு வைத்த பொன்(ங). இப்பொன் முப்பத்தின் கழஞ்சுங் கொண்டு இரவும் பகலும் முட்டாமே ஒரு நொந்தா விளக்கு சந்திராதித்த வல் ஏரிப்போமானோந் திருத்துருத்தி சபையோம் இது பன்மாயேசுஸ்வர ரக்ஷை" என கல்வெட்டு சொல்கின்றது
மக்களின் ஞானமும் பக்தியும் சமூக வாழ்வும் எப்படி ஆலயங்களோடு பின்னி பிணைந்திருந்தன, அதுவும் ராஜராஜசோழன் அதை எவ்வளவு ஞானமாக நடத்திக் கொண்டிருந்தான் என்பதற்கு இவையெல்லாம் சாட்சிகள்
இங்கு சாணக்கியன் எழுதிய அர்த்த சாஸ்திரமாகட்டும், வள்ளுவர் எழுதிய ஆட்சிக்குரிய வழிகளாகட்டும் எல்லாமே நீதி தர்மம், எல்லாமே மக்களிடம் சார்ந்த. அரசனுக்கு இருந்த ஆழ்ந்த நிர்வாக அறிவின் சாயலே
அரசாங்கம் ஆழ்ந்த நிர்வாக ஞானமே இப்படி புலவர்களாலும் ஞானியராலும் வடித்து வைக்கபட்டது, ராஜராஜசோழன் அந்த சோழ ஆட்சியின் பெரும் வடிவம் என்பதால் அதையே தன் அரசில் செயல்படுத்தியும் காட்டினான் அந்தப் புலிக்கொடி வேந்தன் அவரது மெய்கீர்த்தி கூறும் கல்வெட்டில் :-
"திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலைக் கலமறுத் தருளி
வேங்கை நாடுங் கங்க பாடியும்
தடிகை பாடியும் நுளம்ப பாடியும்
குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்கமும்
முரட்டெழிற் சிங்களர் ஈழமண்டலமும்
இரட்ட பாடி யேழரை யிலக்கமும்
முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரமுந்
தெண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டதன்
னெழில்வள ரூழியு ளெலலா யாண்டுந்
தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத்
தேசுகொள் கோராசகேசரி வர்மரான
உடையார் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு. " என்பதாகும் .
ஐப்பசி சதயம் - 3 நவம்பர் 2022 வியாழக்கிழமை இராஜராஜனின் 1037ஆவது பிறந்தநாள் மட்டுமில்லை. கி.பி.985 அவர் ஆட்சிக்கு வந்த ஆண்டு. இன்று அவரது பிறந்தநாள் மட்டுமே.
கருத்துகள்