வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் கண்காணிப்பு வார நிறைவு விழா -2022
வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் 2022-ம் ஆண்டு கண்காணிப்பு வார நிறைவு நாள் விழாவானது 16.11.2022 அன்று ‘வளர்ந்த தேசத்திற்கு ஊழல் இல்லாத இந்தியா’, என்ற தலைப்பில் மத்திய கண்காப்பு ஆணையத்தின் அறிவுறத்தலின்படி துறைமுக ஜவஹர்லால் நேரு கூட்டரங்கில் வைத்து வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
திரு. எஸ். முரளி கிருஷ்ணன், IDAS, தலைமை கண்காணிப்பு அதிகாரி, வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். அவர்கள் தனது வரவேற்புரையில் தகவல் தொழில்நுட்பம் (IT), மற்றும் கணினிமயமாக்கப்பட்ட நில ஆவண மேலாண்மையை அமல்படுத்தியுள்ள துறைமுகம், தீர்வு காணும் செயல்பாட்டில் வெளிப்படையாக செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.
திரு. தா.கி. ராமச்சந்திரன், இ.ஆ.ப., வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர்கள் தனது சிறப்புரையில் நம் நாடு வளர்ச்சி அடைந்த நாடாக வளர்ந்து வருகின்ற வேளையில், உண்மை, ஒழுக்கம், நேர்மை பற்றிய முக்கியத்துவத்தை இளைஞர்கள் மனதில் விதைப்பது மிகவும் அவசியமான ஒன்று என்று கூறினார். மேலும் துறைமுக அதிகாரிகளிடம் அதிகாரப்பூர்வ நடைமுறைகளை செயல்படுத்தும்போது, நிறுவனத்தின் செயல்பாடுகள் சீராக இருக்க “மனித நேய” அணுகுமுறையை கையாளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
திரு. பிமல்குமார் ஜா, வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் துணை தலைவர் தனது உரையில் துறைமுகத்தில் நடைபெற்ற
போட்டிகள் அனைத்தும் பள்ளி, கல்லுரி மாணவ, மாணவர்களுக்கு இடையே தேசத்தை மேன்மைப்படுத்துவதில் ஊழல்களால் வரும் தடைகள் மற்றும் நேர்மையின் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தும் என்று கூறினார்.
வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின், கண்காணிப்பு வார விழாவின் ஒரு பகுதியாக பள்ளி மற்றும் கல்லுரி மாணவர்கள் மற்றும் துறைமுக ஊழியர்களுக்காக வாசகப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, பாட்டு போட்டி, ரங்கோலி போட்டி, என்று பல்வேறு போட்டிகள் துறைமுகத்தில் நடைபெற்றன. அவ்வாறு துறைமுகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போட்டிகளில் 400-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுரி மாணவ, மாணவிகள் மற்றும் துறைமுக ஊழியர்கள் முனைப்புடன் பங்கேற்றனர்.
திரு. தா.கி. ராமச்சந்திரன், இ.ஆ.ப., வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர், பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி, கல்லுரி மாணவ, மாணவியர்கள் மற்றும் துறைமுக ஊழியர்களுக்கு வெற்றி கோப்பைகளையும் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
மேற்சொன்ன தகவலை வ,உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
கருத்துகள்