முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காசி தமிழ் சங்கமத்திற்கு தமிழ்நாட்டு. 216 பிரதிநிதிகளுடன் ரயில்பயணம தொடங்கியது

காசி தமிழ் சங்கமத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் தொகுப்பான 216 பிரதிநிதிகளுடன் ரயில்பயணம் இன்று தொடங்குகிறது


• ஒருமாத கால காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் போது தமிழ்நாட்டிலிருந்து காசிக்கு 13 ரயில்கள் இயக்கப்படும்

• இந்த ரயில்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2592 பிரதிநிதிகள் பயணம் செய்வார்கள்

• இந்தப் பிரதிநிதிகள் ராமேஸ்வரம், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், சென்னை ஆகிய இடங்களிலிருந்து தங்களின் பயணத்தை தொடங்குவார்கள்


• இந்த ரயில்கள் செல்லும் வழியில் 21 ரயில்நிலையங்களில் நிற்கும்

ஒருமாத கால ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்வின் போது தமிழ்நாட்டிலிருந்து உத்தரப்பிரதேசத்தின் காசிக்கு இந்திய ரயில்வே மொத்தம் 13 ரயில்களை இயக்கவுள்ளன. முதலாவது ரயில் 216 பிரதிநிதிகளுடன் இன்று தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயிலில் 35 பிரதிநிதிகள் ராமேஸ்வரத்தில் இருந்தும், 103 பேர் திருச்சிராப்பள்ளியில் இருந்தும், 78 பேர் சென்னை எழும்பூரில் இருந்தும்  செல்வார்கள். தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி, இந்த பிரதிநிதிகளுடன் சென்னை எழும்பூரில் நாளை (17.11.2022) கலந்துரையாடிய பின், கொடியசைத்து அனுப்பி வைப்பார். இந்த நிகழ்வில், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன் வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பங்கேற்பார்.


இந்த ரயில்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2592 பிரதிநிதிகள் பயணம் செய்வார்கள். இந்த பிரதிநிதிகள் ராமேஸ்வரம், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், சென்னை ஆகிய இடங்களிலிருந்து தங்களின் பயணத்தை தொடங்குவார்கள். இந்த ரயில்கள் செல்லும் வழியில் 21 ரயில்நிலையங்களில் நிற்கும். ஒவ்வொரு ரயிலிலும் 216 பிரதிநிதிகள் பயணம் செய்வார்கள்.

“சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா”வின் ஒரு பகுதியாக மத்திய அரசின் முன்முயற்சியாக காசி தமிழ் சங்கமம் - 2022 அமைந்துள்ளது. ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வை கொண்டாடுவதாக இது இருக்கும். மேலும் அழகிய தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் இது கொண்டாடும்.


காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே தொன்மையான நாகரீக பிணைப்பையும் பல நூற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காக ஒருமாத கால ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி வாரணாசியில் நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழக பிஎச்யு நிகழ்வின் ஒரு பகுதியாக காசி, தமிழ்நாடு இடையேயான தொடர்புகள் மற்றும் பகிரப்பட்ட மாண்புகளை வெளிக்கொணர்வதை நோக்கமாக கொண்டு இரண்டு தொன்மையான இந்திய கலாச்சார நகரங்களின் பன்முகத் தன்மையுடன், நிபுணர்கள்/ அறிஞர்களிடையே  கல்விசார் பரிமாற்றங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள் இடம்பெறும். இரண்டு ஞானம் மற்றும் கலாச்சார பாரம்பரியங்களை நெருக்கமாக கொண்டு வருவது நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தில் புரிதலை உருவாக்குவது  இரு பிராந்தியங்களுக்கு இடையே மக்களுடனான உறவை ஆழப்படுத்துவது என்பவை இதன் பரந்த நோக்கமாகும்.


தமிழ்நாட்டிலிருந்து பிரதிநிதிகளின் பன்னிரண்டு குழுக்கள் - துணைத் தலைப்பின் கீழ், பன்னிரண்டு குழுக்களின் சுருக்கமான விளக்கம்

இந்நிகழ்ச்சியில் 12 குழுக்கள் இருக்கும். ஒவ்வொரு குழுவிலும், ஒரே மாதிரியான 216 பேர் இருப்பார்கள், அதாவது 200 பிரதிநிதிகள் மற்றும் 16 வசதியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்ட ஒரே மாதிரியான குழுவாக 3 ரயில் பெட்டிகளில் பயணிப்பர்.

தமிழ்நாட்டிலிருந்து, முதலாவது குழு, நவம்பர் 16ஆம் தேதி புதன்கிழமை இரவு 23:55 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும், கடைசி குழு, அதாவது 12-வது குழு, டிசம்பர் 20ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 08:10 மணிக்கு சென்னையை வந்தடையும் .



காசி தமிழ் சங்கமம் 17 நவம்பர் முதல் 16 டிசம்பர் 2022 வரை நடைபெறும்.

ராமேஸ்வரம் , கோயம்புத்தூர் மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து முறையே 3 குழுக்கள் தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் . இருப்பினும், திரும்பும் பயணத்தில், தளவாட காரணங்களால் சென்னை வரை சேவைகள் இருக்கும்.

ஒவ்வொரு குழுவிற்கும் 8 நாட்கள் திட்டம் :The 8-days program for every : 2 நாட்கள் முதல் பயணம் (ரயிலில்), 2 நாட்கள் காசியில், பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தியை பார்வையிட 2 நாட்கள் (பேருந்தில்) மற்றும் 2 நாட்கள் காசியிலிருந்து தமிழ்நாடு திரும்பும் பயணம் (ரயிலில்)

குழுவின் பெயர்கள் பின்வருமாறு-

மாணவர்கள்

ஆசிரியர்கள்

இலக்கியம்

கலாச்சாரம்

தொழில் வல்லுநர்கள்

தொழில்முனைவோர்

வணிக

கைவினைஞர்கள்

பாரம்பரியம்

ஆன்மீக

கிராமப்புறம்

கோவில்

குழு வாரியான விவரங்கள்


மாணவர்கள் : மாணவர்கள் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/கல்லூரி/நிறுவனத்தில் பி.எச்.டி / எம்.ஃபில் /யுஜி/பிஜி/புரொபஷனல்/டிப்ளமோ படிப்புகளை பயின்று கொண்டிருக்க வேண்டும். அவர்களின் படிப்பு கலை/அறிவியல்/ மொழி/ பொறியியல்/ மருத்துவம்/ மேலாண்மை / சட்டம்/ கணக்குகள் போன்றவற்றில் இருக்கலாம். திரும்பும் மாணவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தில் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர்கள் : ஆசிரியர்கள் / பேராசிரியர்கள் பல்கலைக்கழகம் / கல்லூரி / பள்ளி/ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும். மற்றும் தொடக்க நிலை / இரண்டாம் / மேல் நிலை பள்ளிக்கல்வி அளித்தல் அல்லது கல்லூரி மட்டத்தில் கலை / அறிவியல் / பொறியியல்/ மருத்துவம் / மேலாண்மை / சட்டம்/ கணக்குகள் துறையில் கல்வியை வழங்குதல். ஆசிரியர்கள் அல்லது விரிவுரையாளர்களுக்கு / இலக்கியம் / ஆராய்ச்சி / சமூக பணி / ஆன்மீக சொற்பொழிவு / விளையாட்டு/ போன்றவற்றோடு “ஒரே பாரதம் உன்னத பாரதம்” என்ற கருத்தை ஊக்குவித்தல் போன்ற ஆர்வம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இலக்கியம்: வெவ்வேறு பணித் துறையில் ஈடுபட்டுள்ள பணிபுரியும் அல்லது தன்னிச்சை எழுத்தாளர் இந்தக் குழுவின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளனர் இலக்கியப் படைப்பின் ஒரு பகுதி, புனைகதையாக இருக்கலாம் / வரலாறு / மொழி / ஆராய்ச்சி / அறிவியல் /கலை முதலியன மற்றும் ஒரு எழுத்தாளர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் தமிழ், இந்தி ஆங்கிலம் அல்லது இந்திய அரசியலமைப்பின் 8 வது அட்டவணையில் பரிந்துரைக்கப்பட்ட 22 மொழிகளில் எழுதுபவராக இருக்கலாம்.

கலாச்சாரம் : கலாச்சாரத்தை மேம்படுத்தும் துறையில் ஈடுபட்டுள்ள, பணிபுரியும் அல்லது ஓய்வுபெற்ற தனிநபர் இந்தக் குழுவின் கீழ் வருவர். பண்பாட்டுப் பணி என்பது மொழி வளர்ச்சி / பாரம்பரிய கலாச்சார மேம்பாடு / சமயம் / ஆன்மீகம் / இசை / நடனம் / நாடகம் / மக்கள் போன்றவை .

தொழில் வல்லுநர்கள் : பணிபுரியும் / சுயதொழில் செய்பவர்கள் / சொந்தத்தொழில் உரிமையாளர்கள் இந்த குழுவின் கீழ் வருவார்கள். . கணக்குகள் / சட்டம் / மேலாண்மை / மருத்துவம் (சித்தா / ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவம் / தகவல் தொழில் நுட்பம்/ ஊடகம்/மேலாண்மை/ பொறியியல் /ஆலோசகர் / கட்டிடக்கலை / நுண்கலை போன்றவையாக இருக்கலாம்

தொழில்முனைவோர் : இந்தக் குழுவின் கீழ் உள்ள தொழில்முனைவோர், தொடக்க / சிறிய அளவிலான / நடுத்தர அளவிலான / பெரிய அளவிலான நிறுவனங்களின் உரிமையாளர் / உரிமையாளர் என பரவலாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஆலோசனை/உற்பத்தி/தகவல் தொழில் நுட்பம் /மார்க்கெட்டிங் / விற்பனை போன்றவற்றில் ஈடுபட்டிருக்கலாம்.

வணிகம் : கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சிறிய வகை - (முறையான மற்றும் முறைசாரா) குடும்ப வணிகம் / சில்லறை வணிகம் / மொத்த வணிகம் / போன்றவற்றில் ஈடுபட்டுள்ள நபர் இந்தக் குழுவின் கீழ் வருவர். அது சுயவுரிமை / கூட்டாண்மையாக இருக்கலாம். மளிகை / பால் பொருட்கள், பால் மற்றும் பால் பொருட்கள் / ஹோட்டல் மற்றும் கேட்டரிங் / உணவகம் / புத்தக கடை / உணவு பொருட்கள் / தீவனம் மற்றும் கால்நடை தீவனம் / சமையல் எண்ணெய் / கால்நடை பராமரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கலாம்

கைவினைஞர்கள் : மர கைவினை / உலோக கைவினை / ஆடை வேலை / ஆபரணங்கள் / பொம்மைகள் / கைவினைப்பொருட்கள் / கல் வேலை / கொத்து / போன்றவற்றில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள் மற்றும் கைவினை நபர்கள் இந்த குழுவின் கீழ் உள்ளனர். அவர்கள் சுயதொழில் செய்பவர்களாகவோ அல்லது கூட்டுறவு / சுய உதவிக் குழுவில் ஈடுபட்டவர்களாகவோ இருக்கலாம்.

பாரம்பரியம் : தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் / பாரம்பரிய கலை கலைஞர்கள் / சுற்றுச்சூழல் பாதுகாவலர் / யோகா போதகர் அல்லது ஆசிரியர் / ஆயுர்வேத / சித்த மருத்துவர்கள் இந்த குழுவின் கீழ் உள்ளனர். அவர்கள் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு மாற்றுவதன் மூலம் மேம்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்மீகம் : : ஆன்மீகப் பிரசங்கம் / ஆன்மீக புத்தக வெளியீடு / ஆன்மீக எழுத்து / ஆன்மீக சொற்பொழிவு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள நபர்கள் இந்தக் குழுவின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

கிராமப்புறம் :விவசாயிகள் / விவசாயிகள் / கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள நபர்கள் / பண்ணை தொழிலாளர்கள் / தோட்டக்கலை / தோட்டத் தொழிலாளர்கள், கிராமப்புற தொழிலாளர்கள் இந்த குழுவின் கீழ் உள்ளனர்.

கோவில் : கோவில் பூசாரிகள் / கிராம பூஜாரிகள் / கோயில் சமையல்காரர்கள் / கோயில் கட்டிடக் கலைஞர்கள் / கோயில் மரக் கலை நிபுணர்கள் / சிற்பம் / ஷில்பா சாஸ்திர வல்லுநர்கள் / ஆகம பயிற்சியாளர்கள் / ஆகம ஆசிரியர் / கோயில் நிர்வாகிகள் / தர்மகர்த்தா ( அறங்காவலர் ) / கோயில் பணியாளர் / வேத மந்திரங்கள் (ஓதுவார்கள் / பிரபந்தக்காரர்கள் / அத்யாபகர்கள் ) / வாத்தியக்காரர்கள் ( வாத்தியகாரர்கள் ) / கோயில் பணிகளில் ஈடுபடும் கோசாலை பணியாளர்கள் இந்த குழுவின் கீழ் உள்ளனர் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...