முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காந்திகிராம ஊரகக் கல்வி நிறுவனத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்றார்

தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம ஊரகக் கல்வி நிறுவனத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்றார்


“மகாத்மா காந்தியின் சிந்தனைகள் இன்றும்கூட மிகவும் பொருத்தமுள்ளதாக இருக்கின்றன”

“காதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு பெருமளவிலான உற்பத்தியின் புரட்சி மட்டுமல்ல பெருந்திரள் மக்களாலான உற்பத்தியின் புரட்சியும் ஆகும்”

“பாகுபாடு இல்லாத காலம் வரை நகரம் மற்றும் ஊரக பகுதிகளுக்கு இடையேயான வேறுபாடு ஏற்கத்தக்கது“



“சுதேசி இயக்கத்தின் முக்கிய மையமாக தமிழ்நாடு இருந்துள்ளது. தற்சார்பு இந்தியாவின் அது மீண்டும் முக்கிய பங்காற்றும்”

“தமிழ்நாடு தேசிய உணர்வின் உறைவிடமாக எப்போதும் உள்ளது”

“ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதன் செயல்வடிவம் தான் காசி தமிழ் சங்கமமாகும்”


“நீங்கள் தான் புதிய இந்தியாவைக் கட்டமைப்பவர்கள். அதன் அமிர்தகாலத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கு தலைமையேற்கும் பொறுப்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் – இதுவே இன்று பட்டம் பெறும் இளைஞர்களுக்கு எனது செய்தியாகும்”


தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம் ஊரகக் கல்வி நிறுவனத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் இன்று (11.11.2022) பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்தப் பட்டமளிப்பு விழாவில் 2018-29, 2019-20 ஆகிய தொகுப்புகளைச் சேர்ந்த 2,300-க்கும் அதிகமான மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர். இதைத் தொடர்ந்து சிறந்த முறையில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கங்களையும் தகுதி மிக்க சிலருக்கு கௌரவ டாக்டர் பட்டங்களையும் பிரதமர் வழங்கினார்.

விழாவில் திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், காந்திகிராமிற்கு வருகை தருவது தமக்கு மிகவும் உற்சாகம் தரும் அனுபவமாகும் என்றார். இந்த கல்வி நிறுவனம் மகாத்மா காந்தியால்  தொடங்கப்பட்டது என்பதை  அவர் நினைவு கூர்ந்தார்.  மகாத்மா  காந்தியின் சிந்தனைகள் மற்றும் ஊரக வளர்ச்சித் தொடர்பான கோட்பாடுகளின் உணர்வை இந்த கல்வி நிறுவனத்தில்  காணமுடியும் என்று அவர் தெரிவித்தார். மோதல்களை முடிவுக்கு கொண்டுவருவதாக இருந்தாலும் அல்லது பருவநிலை  பிரச்னைகளாக இருந்தாலும் மகாத்மா காந்தியின் சிந்தனைகள் இக்காலத்திற்கும் இந்த சகாப்தத்திற்கும் மிகவும் பொருத்தமுள்ளதாக  இருக்கின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார். உலகம் இன்று சந்திக்கின்ற பல சவால்களுக்கும் பதற்றமான   பிரச்னைகளுக்கும் அவரது சிந்தனைகள் பதில்களாக இருக்கின்றன என்று அவர் கூறினார்.



காந்திய வழியிலான  வாழ்க்கையை மாணவர்கள் மேற்கொள்வது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான மிகப் பெரிய வாய்ப்பு என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். மகாத்மா காந்தியின் இதயத்திற்கு நெருக்கமான சிந்தனைகளுக்காக பணியாற்றுவது அவருக்கு செலுத்தும் மிகச் சிறந்த அஞ்சலி என்று அவர் குறிப்பிட்டார். நீண்டகாலமாக மறக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட ஆடையை  தேசத்துக்காக காதி, அழகிய ஆடைகளுக்காக காதி என்பதன் மூலம் மீட்கப்பட்ட உதாரணங்களைப் பிரதமர் வழங்கினார் கடந்த 8 ஆண்டுகளில் காதித்துறையின் விற்பனை 300 சதவீதத்திற்கு மேல் அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்தார். “கடந்த ஆண்டு காதி மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையம்  ரூ.1 லட்சம் கோடிக்கு விற்பனை செய்து சாதனைப் படைத்துள்ளது” என்று தெரிவித்த அவர், தொடர்ந்து பேசுகையில், “இப்போது அதன் சுற்றுச்சூழலுக்கு உகந்த தன்மைகள் காரணமாக உலகளாவிய ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் கூட காதியை எடுத்துக் கொள்கின்றன” என்றார். காதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு  பெருமளவிலான உற்பத்தியின் புரட்சி மட்டுமல்ல பெருந்திரள் மக்களாலான  உற்பத்தியின்  புரட்சியும் ஆகும். கிராமங்களின் தற்சார்புக்கான ஒரு கருவியாக காதியை மகாத்மா காந்தி எவ்வாறு பார்த்தார் என்பதை நினைவு கூர்ந்த பிரதமர், அவரால் ஊக்கமடைந்துள்ள அரசு தற்சார்பு இந்தியாவை நோக்கி பணியாற்றி வருகிறது என்றார். “சுதேசி இயக்கத்தின் முக்கிய மையமாக தமிழ்நாடு இருந்துள்ளது. தற்சார்பு இந்தியாவில் அது மீண்டும் முக்கிய பங்காற்றும் என்று பிரதமர் மேலும் கூறினார்.



ஊரக வளர்ச்சியில் மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வையைப் புரிந்து கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்திய பிரதமர், கிராம வாழ்க்கையின் மாண்புகளை முன்னேற்றத்தில் அவை பாதுகாக்க வேண்டும் என்று தாம் விரும்புவதாக கூறினார். ஊரக மேம்பாட்டை நோக்கிய அரசின் தொலைநோக்குப் பார்வை என்பது மகாத்மா காந்தியின் சிந்தனைகளிலிருந்து பெற்ற ஊக்கமாகும் என்று திரு மோடி குறிப்பிட்டார். பாகுபாடு இல்லாத காலம் வரை நகரம் மற்றும் ஊரக பகுதிகளுக்கு இடையேயான வேறுபாடு ஏற்கத்தக்கது என்பதை அவர் எடுத்துரைத்தார். முழுமையான ஊரக துப்புரவு, 6 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர், 2.5 கோடி மின்சார இணைப்புகள், சாலைகள் மூலம் ஊரக போக்குவரத்துத் தொடர்பு அதிகரிப்பு ஆகியவற்றை உதாரணங்களாக எடுத்துரைத்த அவர், மக்களின் வீடுகளுக்கே வளர்ச்சியை அரசு எடுத்துச் செல்வதாகவும், நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு இடையே நிலவுகின்ற சமத்துவம் இன்மையை சரிசெய்வதாகவும் கூறினார்.



துப்புரவு என்ற கோட்பாடு மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமானது என்பதை நினைவுகூர்ந்த பிரதமர், தூய்மை இந்தியா உதாரணத்தை  எடுத்துரைத்தார்.  அடிப்படை வசதிகளை வழங்குவதோடு அரசு நின்றுவிடவில்லை என்றும் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடுகளுடன் கிராமங்களை இணைக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார். சுமார் 2 லட்சம் கிராமப்பஞ்சாயத்துக்களை இணைப்பதற்கு 6 கிலோமீட்டர் தொலைவிற்கு கண்ணாடி இழை கேபிள்கள் அமைக்கப்பட்டிருப்பதாக  பிரதமர் தெரிவித்தார்.


ஊரக வளர்ச்சியில் நிலைத்தன்மைக்கான தேவையை வலியுறுத்திய அவர், இத்தகைய பகுதிகளில் இளைஞர்களின் தலைமைத்துவம் இருக்க   வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். நீடித்த வேளாண்மை என்பது கிராமப்பகுதிகளின் எதிர்காலத்திற்கு முக்கியமானது என்று கூறிய அவர், இயற்கை வேளாண்மைக்கான மாபெரும் ஆர்வத்தை எடுத்துரைத்தார். நமது இயற்கை வேளாண்மைத் திட்டம் மிகச் சிறப்பாக  செயல்படுகிறது. குறிப்பாக, வடகிழக்கில் என்பதை திரு மோடி சுட்டிக்காட்டினார். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இயற்கை வேளாண்மை தொடர்பான கொள்கையை அரசு கொண்டு வந்திருப்பதையும் அவர் எடுத்துரைத்தார். ஒரே வகையான பயிர் செய்தல் என்பதிலிருந்து வேளாண் துறையை பாதுகாக்க வேண்டிய காலம் வந்துள்ளது என்றும் தானியங்கள், சிறுதானியங்கள் மற்றும் இதரப் பயிர்களின் உள்ளூர் வகைகளை மீட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கிராம நிலையிலான அமைப்புகளுக்கான தேர்தல்களில் பாகுபாடுகளுக்கான போக்கு இருப்பதை சுட்டிக்காட்டிய திரு மோடி, குஜராத்தில் சம்ரஸ் கிராம் யோஜனா, தொடங்கப்பட்டதை நினைவுகூர்ந்தார்.  ஒருமித்த கருத்தின் மூலம் தலைவர்களை தெரிவு செய்யும் கிராமங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டதாகவும் இதன் விளைவாக சமூக மோதல்கள் குறைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

காந்திஜியின் உருவத்தைக் காண்பதற்கு ஆயிரக்கணக்கான கிராமவாசிகள் ரயிலில் வந்ததை நினைவு கூர்ந்த பிரதமர், ஒன்றுபட்ட சுதந்திர இந்தியாவுக்காக மகாத்மா காந்தி போராடினார் என்றும், காந்தி கிராம் என்பதே இந்திய ஒற்றுமையின் சின்னம் என்றும் கூறினார். “தமிழ்நாடு தேசிய உணர்வின் உறைவிடமாக எப்போதும் உள்ளது” என்று கூறிய அவர், சுவாமி விவேகானந்தர் மேலை நாட்டிலிருந்து திரும்பிபோது அவருக்கு ஒரு நாயகருக்கான வரவேற்பு அளிக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார்.  மறைந்த  ஜெனரல் பிபின் ராவத் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர்,  ‘வீரவணக்கம்’ என்ற முழக்கங்கள் கேட்டதை நினைவுகூர்ந்தார்.

காசியில் விரைவில் நடைபெறவுள்ள காசி தமிழ் சங்கமம் குறித்து அனைவரின் கவனத்தை ஈர்த்த பிரதமர், இது காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையேயான உறவைக் கொண்டாடும் என்றார். இது ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதன் செயல்வடிவமாகும். ஒருவரோடு ஒருவருக்கான அன்பும், மரியாதையும் நமது ஒற்றுமையின் அடிப்படை என்று அவர் குறிப்பிட்டார்.

ராணி வேலு நாச்சியாரின் தியாகங்களை நினைவு கூர்ந்த பிரதமர், பிரிட்டிஷாரை எதிர்த்த போரின் தயார் நிலைக்காக அவர், இங்கு தங்கியிருந்தார் என்று கூறினார். “மகளிர் சக்தியின் ஆற்றலை காணுகின்ற  பகுதியில் இன்று நான் இருக்கின்றேன். இங்கு பட்டம் பெறும் இளம் பெண்களை, மாபெரும் மாற்றங்களை செய்பவர்களாக நான் காண்கிறேன். கிராமப்புற பெண்கள் வெற்றி பெற நீங்கள் உதவ வேண்டும். அவர்களின் வெற்றி தேசத்தின் வெற்றியாகும்” என்று அவர் தெரிவித்தார்.

ஒரு நூற்றாண்டின் மோசமான நெருக்கடியை உலகம் சந்தித்த போது, உலகின் மிகப் பெரிய தடுப்பூசி இயக்கமாக இருப்பினும், பரம ஏழைகளுக்கான உணவுப் பாதுகாப்பாக இருப்பினும், உலகின் வளர்ச்சி் இயந்திரமாக இருப்பினும், இந்தியா ஒளிரும் இடமாக இருந்தது என்று பிரதமர் தெரிவித்தார். மகத்தான விஷயங்களை இந்தியா செய்ய வேண்டும் என்று உலகம் எதிர்பார்க்கிறது. ஏனெனில், நம்மால் முடியும் என்ற இளைய தலைமுறையின் கைகளில் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது. இளைஞர்கள் என்பவர்கள் சவால்களை ஏற்றுக் கொள்பவர்களாக  மட்டுமின்றி, அவற்றை எதிர்கொண்டு சமாளிப்பதை விரும்புகின்றவர்களாகவும் இருக்கிறார்கள், கேள்வி கேட்பவர்களாக மட்டுமின்றி பதில்களை  கண்டறிவோராகவும் உள்ளனர். அச்சமற்றவர்களாக மட்டுமின்றி சோர்வில்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். ஆசைப்படுபவர்களாக மட்டுமின்றி சாதிப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். “நீங்கள் தான் புதிய இந்தியாவைக் கட்டமைப்பவர்கள்.  அதன் அமிர்தகாலத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கு தலைமையேற்கும் பொறுப்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் – இதுவே இன்று பட்டம் பெறும் இளைஞர்களுக்கு எனது செய்தியாகும்” என்று கூறி பிரதமர்  உரையை நிறைவு செய்தார்.

இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர்  திரு ஆர் என் ரவி,  மத்திய இணை அமைச்சர்  டாக்டர் எல் முருகன், வேந்தர் டாக்டர் கே எம் அண்ணாமலை, துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் அதற்கு முன்பாக மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் நரேந்திர மோடி காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு புறப்பட்ட நிலையில்  பிரதமரை  மதுரை விமானநிலைய்தில்  வரவேற்ற போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கியத்துவம் அளித்ததால், எடப்பாடி கே. பழனிசாமி ஏமாற்றமடைந்தார். திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடந்தததில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க, பிரதமர் பெங்களூரிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு  பிற்பகல் 2.40 மணியளவில் வந்தடைந்தார்.  அரசு சார்பில் மாநில. ஆளுநர்  ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி, உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி கே.பழனிசாமி,  பகல் 11.30 மணிக்கு விமானத்தில் சென்னையில் இருந்து மதுரை விமானநிலையம் வந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம்  விஸ்வநாதன், உதயகுமார், ராஜன் செல்லப்பா உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் விமான நிலையத்திற்குள் சென்றனர். பிரதமரை வரவேற்க பகல் 1 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்தார். ஓ.பன்னீர்செல்வத்துடன் நாடாளுமன்ற மக்களவை  உறுப்பினர்  ரவீந்திரநாத், மாநிலங்களவை உறுப்பினர் தர்மர், சட்டமன்ற உறுப்பினர்கள்  மனோஜ் பாண்டியன், ஐயப்பன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  கோபாலகிருஷ்ணன் ஆகியோர் விமான நிலையத்திற்குள் சென்றனர்.

மதுரை வந்த பிரதமரை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவர்களுடன் தலா 5 பேர், மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் 24 பேர் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட 42 பேர் வரிசையில் நின்று வரவேற்க அனுமதிக்கப்பட்ட நிலையில்  எதிர்கட்சித் தலைவர் என்பதால் எடப்பாடி .கே பழனிசாமி மற்றும் அவருடன் வந்தவர்கள், பின்னர் ஓ.பன்னீர்செல்வம், அவருடன் வந்தவர்கள் என வரிசையாக நின்றிருந்த நிலையில், இருவரும் மிகுந்த இடைவெளி விட்டு நின்று பிரதமர் மோடியிடம் பூங்கொத்துடன் காத்திருந்தனர்.  

எடப்பாடி கே. பழனிசாமியிடம் முதலில் பூங்கொத்தை பெற முயன்ற பிரதமர் மோடி, வரிசையில் சற்று தள்ளி இருந்த ஓ.பன்னீர்செல்வத்தையும் அருகே வருமாறு அழைத்து, இருவரிடம் இருந்து ஒரே நேரத்தில் பூங்கொத்தை பெற்றுக் கொண்டார். ஓ.பன்னீர் செல்வத்திற்கு பிரதமர் முக்கியத்துவம் அளித்ததைப் பார்த்து எடப்பாடி கே.பழனிசாமி ஏமாற்றமானார். தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்காக பிரதமர் மோடி  புறப்பட்டார். விமான நிலையத்தில் உள்ள ஓய்வறையில் தங்கி, திரும்ப வரும் பிரதமரை சந்தித்துப் பேச திட்டமிட்டிருந்த நிலையில் இருவரும் அந்த அறையை நோக்கி சென்றனர்.

அப்போது விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், யாரும் இங்கு  இருக்கக்கூடாது. பிரதமர் திரும்ப வரும்போது அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டும்  வரலாம் எனக்கூறி அனைவரையும் வெளியேறும்படி அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து  எடப்பாடி கே..பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் விமான நிலையத்திலிருந்து வெளியேறி தனித்தனி ஹோட்டல்களில் தங்கினர். பின்னர் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும்  பிரதமர் மோடியை  வழியனுப்பும் வரிசையிலும் நின்றனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கைகளை மட்டும் காட்டியபடி அங்கிருந்து கிளம்பிச் சென்றார். திரும்பும்போது  இருவரையும் சந்தித்துப் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால்  பிரதமர் மோடி கண்டுகொள்ளாமல் கிளம்பிச் சென்றதால் ஏமாற்றமடைந்தனர்.  அங்கு பேசிய பிரதமர் "குஜராத்தில் பிறந்து, ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி இந்திய தேசத்தின் தந்தையாக வலம் வந்த அண்ணல் காந்தியடிகளுக்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பு மிக மிக அதிகம்!

வட இந்தியாவினர் அனைவரும் ஒரு தென்னிந்திய மொழியைக் கற்க வேண்டும், அது தமிழாக இருக்க வேண்டும் என்று சொன்னவர் காந்தியடிகள்!" என்றார். 

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திண்டுக்கல், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரை.

இந்திய ஒன்றியத்தின் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களே,

மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. ஆர். என். ரவி அவர்களே,

மாண்புமிகு ஒன்றிய இணை அமைச்சர் திரு. எல்.முருகன் அவர்களே,

மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. ஐ.பெரியசாமி உள்ளிட்ட தமிழக அமைச்சர் பெருமக்களே,

மாண்புமிகு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களே,

அரசு அலுவலர்களே,

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர்

டாக்டர் கே.எம். அண்ணாமலை அவர்களே,

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் குர்மித் சிங் அவர்களே,

பேராசிரியர் பெருமக்களே,

என் அன்பிற்குரிய மாணவச் செல்வங்களே,

கிராமப்புற கல்வி மேம்பாட்டிற்கான அறிவாலயமாகத் திகழும் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுள்ள உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்!

குஜராத்தில் பிறந்து, ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி இந்திய தேசத்தின் தந்தையாக வலம் வந்த அண்ணல் காந்தியடிகளுக்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பு மிக மிக அதிகம்.

தனது வாழ்நாளில் 26 முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்த காந்தியடிகள் அவர்கள் - தமிழை விரும்பிக் கற்றவர். மோ.க.காந்தி என்று தமிழில் கையெழுத்து இட்டவர். திருக்குறளைப் படிப்பதற்காகவே தமிழ் கற்க வேண்டும் என்று சொன்னவர்.

இவை அனைத்துக்கும் மேலாக உயராடை அணிந்து அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்த அவரை அரையாடை கட்ட வைத்தது இந்தத் தமிழ் மண்!

வட இந்தியாவினர் அனைவரும் ஒரு தென்னிந்திய மொழியைக் கற்க வேண்டும், அது தமிழாக இருக்க வேண்டும் என்று சொன்னவர் காந்தியடிகள்!

அத்தகைய காந்தியடிகள் பெயரால் அமைந்த பல்கலைக்கழகத்தில் இந்தப் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களைத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற வகையில் வருக வருக வருக என வரவேற்கிறேன்.

கல்வியின் வழியாக மனிதரைச் சமூகத்துக்குப் பயனுள்ளவராக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது.

“இந்தியா கிராமங்களில் வாழ்கிறது.  கிராமங்கள் உயர நாடு உயரும்” என்ற காந்தியக் கொள்கையின் அடிப்படையில், தேசத் தந்தை காந்தியடிகளின் நல்லாசியோடு அவர்களுடைய சீடர்களான டாக்டர் ஜி.ராமச்சந்திரன், அவரது துணைவியார் டாக்டர் எஸ்.சௌந்தரம் அவர்களால் தொடங்கப்பட்ட கிராமிய பயிற்சி நிறுவனம் இன்று நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக வளர்ந்து, சிறந்து விளங்குகிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த மாணவர்களும், வெளிநாடுகளைச் சார்ந்த மாணவர்களும், இங்கு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளைப் பயின்று வருகின்றனர் என்பதை அறியும்போது பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இதற்கு ஏதுவாக, கல்வி கொடையாக 207 ஏக்கர் நிலத்தினை இப்பல்கலைக்கழத்திற்காக வழங்கிய சின்னாளப்பட்டியைச் சேர்ந்த புரவலர்களை இந்நேரத்தில் நன்றியோடு நினைவு கூர்கிறேன்.

தமிழ்நாட்டில் இன்று மாநில அரசின் கட்டுப்பாட்டின்கீழ்

22 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இவை கலை, அறிவியல், பொறியியல், கல்வியியல், விளையாட்டு, கால்நடை, மருத்துவம், மீன்வளம், தமிழ்வளர்ச்சி, சட்டம், வேளாண்மை மற்றும் இசை ஆகிய துறைகளின்கீழ் திறம்பட செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு, இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாகத் திகழ்கிறது.  இதனை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் மாநில அரசு பல்வேறு கல்வித் திட்டங்களைத் தீட்டி வருகிறது.

பெண்களின் உயர்கல்வியினை ஊக்குவிக்க "புதுமைப் பெண்" என்கிற மூவலூர் இராமாமிர்தம்மாள் பெயரில் உயர்கல்வி உறுதித் திட்டம்,

அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வியில்

7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு,

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயில நிதியுதவித் திட்டம் போன்றவற்றின் மூலமாக  அனைவரும் உயர்கல்வி பயில தமிழ்நாடு அரசு ஆவன செய்து வருகிறது.   

நான் முதல்வன், இல்லம் தேடிக் கல்வி, கல்லூரிக் கனவு,

- என்பது போன்ற பல்வேறு கல்வித் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். இவை தமிழக எல்லையைத் தாண்டி அனைத்து மாநில அரசுகளும் உன்னிப்பாக கவனிக்கும் திட்டங்களாக அமைந்துள்ளன.

Education is the only asset, that can never be snatched by anyone under any situation. It is the duty of a state government to impart the wealth of education. Hence, I appeal to the Union Government, to support and encourage such efforts of state government, by bringing back Education, under the State list.

When the constitution was framed, and came into force, education was originally placed, in the State list. It was moved to the concurrent list, only during the period of emergency.

I request, that the Union Government, especially Hon'ble Prime Minister, shall attempt, to move Education, back to the State list.

சமூகத்திற்கு சேவை செய்வதே கல்வியின் ஒட்டுமொத்த இலக்கு என்ற காந்தியடிகளின் கூற்றிற்கு ஏற்ப முற்போக்குச் சிந்தனையுடன் அறிவியல் சார்ந்த சமூகமாக தமிழ்ச் சமூகத்தைக் கட்டமைக்க இளைஞர்களாகிய உங்களை வேண்டுகிறேன்.

உண்மை, ஒழுக்கம், வாக்குத் தவறாமை, அனைவருக்கும் சமமான நீதி, மதநல்லிணக்கம், வகுப்பு ஒற்றுமை, சிறுபான்மையினர் நலன், தனிநபருக்கான மதிப்பு, ஏழைகள் நலன், அகிம்சை, தீண்டாமை விலக்கு, அதிகாரக் குவியலை எதிர்த்தல், ஏகபோகத்துக்கு எதிர்ப்பு, சுதந்திரமான சிந்தனை, அனைவர் கருத்துக்கும் மதிப்பளித்தல், கிராம முன்னேற்றம்,

- இவைதான் காந்தியத்தின் அடிப்படைகள்!

இவை அனைத்தும்தான் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் விழுமியங்கள்!

இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலமாக காந்தியின் பெயரைச் சொல்ல நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்வோம்.

இந்த பெருமைமிகு விழாவில் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது பெரு மகிழ்ச்சிக்குரியதாகும். இசைஞானி என்ற பெருமைமிகு பட்டத்தை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் இசை உலகத்தின் மாமேதையான இளையராஜா அவர்களையும், மிருதங்க வித்துவான் உமையாள்புரம் சிவராமன் அவர்களையும், பட்டம் பெற்றுள்ள மாணவ, மாணவியர் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

காந்திய நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பவர்களாக - பரப்புரை செய்பவர்களாக - நடந்து காட்டுபவர்களாக இளைய சமுதாயம் - மாணவர்கள் இயங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதனை நீங்கள் சாதித்துக் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கையோடு என் உரையை நிறைவு செய்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த