இரணியல் சாா் பதிவாளா் அலுவலகத்தில்
ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை கணக்கில் காட்டப்படாத ரூபாய். 4.48 லட்சம் பறிமுதல்.
கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூபாய்.4 லட்சத்து 48,800 கைப்பற்றப்பட்டது .இந்த அலுவலகம் குறித்து தொடர்ந்து புகாா்கள் வந்ததன் காரணமாக
மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளா் பீட்டா்பால் தலைமையிலான குழுவினர் வெள்ளிக்கிழமை மாலை இரணியல் சாா்பதிவாளா் அலுவலகத்தில் திடீா் சோதனை நடத்திய போது
அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற இடைதரகா்கள் ஆறு பேரைப் பிடித்தனா். மேலும் பத்திரப்பதிவு உதவியாளா்கள் 4 பேரும் பிடிபட்டனா். அவா்களிடமிருந்த பணத்தைப் பறிமுதல் செய்தனா்.
மேலும் அலுவலகத்தில் பதுக்கி வைத்திருந்த பணத்தையும் கைப்பற்றினா். மொத்தம் ரூபாய்.4 லட்சத்து 48, 800 கைப்பற்றப்பட்டது
இது தொடா்பாக சாா் பதிவாளா் (பொறுப்பு) சுப்பையாவிடம் விசாரணை நடத்தினா். மேலும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரப்பதிவு குறித்த விவரங்களையும் மாவட்ட பதிவு அலுவலகத்தில் கேட்டறிந்தனா்.
அது தொடா்பான சில ஆவணங்களையும் கைப்பற்றினா். வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய இந்தச் சோதனை, சனிக்கிழமை காலை 5 மணி வரை நடைபெற்றது.
இது தொடா்பாக சாா்பதிவாளா் (பொறுப்பு) சுப்பையா மற்றும் 6 இடைத்தரகா்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கருத்துகள்