தலையாரி வேலை 5 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு முடிக்காத நபர்கள் தானே தேவை தற்போது பட்டதாரிகளும் களத்தில் போட்டியாக
கிராம உதவியாளர் என்ற தலையாரி வேலை ஒரு காலத்தில் யாருமே வருவதற்கு யோசித்த நிலையில், தற்போது அதற்கு இலஞ்ச இலாவண்யங்கள் தாண்டவமாடுகிறது,
ஊழல் தடுப்புத்துறை நடவடிக்கை வந்தால் அன்றி தகுதியான, நேர்மையான பலர் அதில் சேர்வது கடினம்தான். மாநிலம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நவம்பர் 7 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
டிசம்பர் 19 ஆம் தேதிக்குள் நேர்காணல் நடத்தி முடித்து பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்று முன்னதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. எனவே, குறைந்த நாட்களே இருப்பதால், கிராம உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பித்தவர்கள், அடுத்தக் கட்ட நேர்காணல் நடவடிக்கைக்குத் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அடுத்து விண்ணப்பத்தார்கள் திறன் அறிதல் தேர்வுக்கு அழைக்கப்படுவர்இவர்கள் கல்வித்தகுதி என்பது ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி முதல் பத்தாம் வகுப்பில் தோல்வி.வரை இந்தத் தேர்வு, வாசித்தல், எழுதுதல் என இரண்டு நிலையிலிருக்கும். எந்த ஒரு புத்தகத்திலுமிருந்து ஏதாவது ஒரு பக்கத்திலுள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம். இதற்கு 10 மதிப்பெண்கள், ஏதேனும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம். இதற்கு 30 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன்பின், நேர்காணல் தேர்வு, மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் அதிகபட்ச மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். எழுத்துத் தேர்வுக்கு பாடத்திட்டங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. தமிழ்கத்தில் வருவாய் நிர்வாக கட்டமைப்புகள் குறித்த பொது விவரங்களைத் தெரிந்து வருவது நல்லது.
தமிழ்நாட்டில் தற்போது 38 மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அளவில் காலி இடங்களில் நியமனம் அரசாணை ஜாதிவாரி இடஒதுக்கீட்டு முறை மற்றும் தகுதி முன்னுரிமை மட்டுமே
தமிழ்நாடு வருவாய் நிர்வாகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களின் கீழ் கிராம உதவியாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.
1995 க்கு முன்பு வரை, கிராம உதவியாளர்கள் எனும் தலையாரிகள் தற்காலிகத், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றினர் 1995 ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணை எண்.625 ன் படி இவர்கள் முழு நேரப் பணியாளராக மாற்றப்பட்டனர். ஊதிய உயர்வு, ஓய்வூதியம், கருணை அடிப்படையிலான வேலை உள்ளிட்டவைகளும் சிறப்பு ஊதிய விதியின் கீழ் வழங்கப்படுகிறது.
கிராம நிர்வாகப் பணிகளில் கிராம நிர்வாக அலுவலரும் அதன் உதவியாளராக உள்ள தலையாரியும் சம்பந்தப்பட்ட ஊரில் வசிக்க வேண்டும் என்பது தான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுப்படி அரசாணை படி நியமனம் நடக்கும் அதில் முதலில் பணி காலியிடங்கள் குறித்து விபரம் உள்ள படி நியமனம் நடக்க வேண்டும் மற்றும் அதை மாற்றாமல் தான் நியமனமே நடக்க வேண்டும். இதுவே ஊழலை ஒழிக்க வாய்ப்புகளாகும் ..
கருத்துகள்