பாத்திமா – ஆட்கடத்தல் பற்றிய சக்திவாய்ந்த ஆவணப்படம் 53வது இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது
கடத்தப்பட்ட பாலியல் தொழிலாளர்களை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்த சௌரப் காந்தி தத்தாவின் பாத்திமா என்ற ஆவணப்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 53வது பதிப்பில் திரையிடப்பட்டது.
9 வயதில் ஒரு பாலியல் தரகரை மணந்து, 12 வயதில் ஒரு குழந்தைக்கு தாயாகி ஒரு கொடூரமான வாழ்க்கையை வாழ்ந்த பாத்திமா காதுனின் வாழ்க்கையின் கதையை படம் விவரிக்கிறது. இப்போது பாத்திமா, இந்தோ-நேபாள எல்லைப் பகுதியில் உள்ள ஃபோர்பேஸ்கஞ்ச் என்ற சிவப்பு விளக்குப் பகுதிகளுக்கு கடத்தப்பட்ட சிறுமிகளை விடுவிக்க போராடுகிறார்.
"டேபிள் டாக்ஸ்" அமர்வில் ஊடகவியலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளிடம் உரையாற்றுகையில், உணர்ச்சிவசப்பட்ட பாத்திமா காதுன் கண்ணீர் மல்க, இளம் வயதில் நெருங்கிய மற்றும் அன்பானவர்களால் துரோகத்துக்குள்ளானதை விவரித்தார்.
1871 கிரிமினல் பழங்குடியினர் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக முத்திரை குத்தப்பட்ட அவரது நாடோடி சமூகத்தில் உள்ள தலைமுறைகளுக்கு இடையேயான பாலியியல் தொழில் மற்றும் சிறுமிகளை பாலியியல் தொழிலுக்குள் ஈடுபடுத்துவதற்கு எதிரான போராட்டத்தை நடத்துவதற்கான மன வலிமையைத் தான் எவ்வாறு பெற்றார் என்பதை அவர் விவரித்தார்.
இயக்குனர் சௌரப் காந்தி தத்தா ஊரடங்கினால் ஒன்றரை வருடங்களை இழந்தது மற்றும் அதனால் ஏற்பட்ட கூடுதல் செலவுகள் பற்றி பேசினார். ஆனால் அவரது படம் இந்திய சர்வதேச திரைப்பட விழா போன்ற ஒரு மேடையில் திரையிடப்பட்டதில் மகிழ்ச்சியடைந்தார்.
"நான் ஒரு நடிகரை தேர்ந்தெடுக்கவில்லை, ஏனென்றால் அது உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடகமாக மாறும் - நான் செய்ய விரும்பிய ஆவணப்படமாக அல்ல", என்று சௌரப் கூறினார். நீதிமன்றங்கள் அல்லது காவல் நிலையங்களைப் போல் இல்லாமல், கேமராவின் முன் தனது போராட்டங்களை பகிர்வது எளிதல்ல. பாத்திமா தனது கதையை கேமராவில் விவரிக்க பெரும் தைரியத்தைக் காட்டியுள்ளார்” என்று அவர் மேலும் கூறினார். "அந்த உலகத்திற்கு எனது சாளரமாக இருந்ததற்காக பாத்திமாவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று சௌரப் கூறினார்
ஆவணப்படம் பெயர்: பாத்திமா
இயக்குனர்: சௌரப் காந்தி தத்தா
காலம்: 59 நிமிடம்வாழ்க்கையின் கொள்கைகள் குறித்து பேசும் நேரம் இது, வெகு சிலரே இத்தகைய வாழ்க்கையை வாழ்கிறார்கள்: ‘‘மகாநந்தா’ இயக்குனர் அரிந்தம் சில்
“நாம் போராடுவது அனைத்தும் உண்மையான இந்திய மக்களுக்காகத்தான். நாட்டின் ஜனாதிபதி யார்? கொல்கத்தா அல்லது மும்பை எங்கே உள்ளது? என்று அவர்களுக்குத் தெரியாது. ஆனால் இவர்கள்தான் இந்தியாவின் உண்மையான மக்கள்”. இந்த வார்த்தைகளை கூறிய எழுத்தாளர்-சமூக ஆர்வலர் மஹாஸ்வேதா தேவியின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் திரைப்படம் ‘மகாநந்தா’. இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 53வது பதிப்பில் இந்தியன் பனோரமா - ஃபீச்சர் ஃபிலிம் பிரிவில் இடம்பெற்றுள்ள பெங்காலி திரைப்படம், விழாப் பிரதிநிதிகளுக்கு திரையிடப்பட்டது.
இன்று கோவாவில் நடைபெற்ற டேபிள் டாக்ஸ்/பத்திரிக்கையாளர் அமர்சில் விழாப் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய இயக்குநர் அரிந்தம் சில், இந்தச் சிக்கலான காலத்தில் இந்த ஒரு விஷயத்தை நோக்கி பயணிப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்துக்கூறினார். “வாழ்க்கையின் கொள்கைகளைப் பற்றி பேச வேண்டிய நேரம் இது, ஏனெனில் இன்று மிகக் குறைவான மக்களே கொள்கைகளின் அடிப்படையில் வாழ்க்கையை நடத்துகிறார்கள். கொள்கைகளின் அடிப்படையில் வாழ்ந்த ஒரு சிலரில் மஹாஸ்வேதா தேவியும் ஒருவர். கொள்கைகளின்படி வாழ நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் நேரம் இது என்று நான் உணர்கிறேன்.” என்று கூறினார்.
இப்படத்தின் இசையமைப்பாளர் பண்டிட் பிக்ரம் கோஸ், நேற்று சங்கீத நாடக அகாடமி விருது பெற்றார். டேபிள் டாக்ஸ் அமர்வில் அரிந்தம் சில் உடன் இணைந்த கலைஞர், இந்தத் படம் இசை ரீதியாக ஒரு சவாலான வேலை என்று தெரிவித்தார். “படத்தில் தொடர்ந்து அச்சுறுத்தல் உள்ளது. சோகம், மரணம், துக்கம் என அவர் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத அச்சுறுத்தல் ஆகும்.” என்று கூறினார். இந்த அச்சுறுத்தலை வெளிக்கொணர முற்றிலும் பழங்குடி இசை பின்னணி இசையாக பயன்படுத்தப்பட்டுள்ளது, என்று இசையமைப்பாளர் விளக்குகிறார்.
30 வயது முதல் 75 வயது வரை உள்ள மகாஸ்வேதா தேவியாக நடித்த கதாநாயிகி கார்கி ராய்சௌத்ரி, பல செயற்கை தொழில்நுட்பம் மற்றும் ஒப்பனை மூலம் மகாஸ்வேதா தேவியாக தான் நடித்ததை மிகவும் ரசித்ததாக கூறினார்.இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘இண்டராக்சன்’ திரைப்படத்தின் ஆசிய பிரீமியர் காட்சி
ஆர்ட் ஆப் தி வோர்ல்ட் அண்மையில் தயாரித்த இன்டராக்சன் என்ற திரைப்படம் 12 குறும்படங்களின் தொகுப்பு ஆகும். இத்திரைப்படம் கோவாவில் நடக்கும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஆசியாவிலேயே முதல் முறையாக (பிரீமியர் காட்சி ) திரையிடப்பட்டது.
இத்திரைப்படத்தில் பல்வேறு மொழிகளில் உருவாக்கப்பட்ட 12 சிறுகதைகள் உள்ளன. மொராக்கோ, இத்தாலி, பிரான்ஸ், பிரேசில், ஆர்மீனியா, சுவிட்சர்லாந்து, புர்கினா பாசோ, மெக்சிகோ, அமெரிக்கா, கிரீஸ் ,இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த குறும்படங்கள் இடம் பெற்றுள்ளன.
படத்தின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவரான கெயில் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ரூபேஷ் குமார், 12 திரைப்படங்கள் விலங்கு துஷ்பிரயோகம், வன அழிப்பு, பருவநிலை மீதான தீவிர தாக்கம், விலங்குகளின் வாழ்விட அழிவு, கடல் வாழ்க்கை மாசுபாடு போன்ற பல்வேறு தலைப்புகளை ஆராய்கின்றன என்று கூறினார்.
படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான மனபேந்து ராத் கூறுகையில், பருவநிலை மாற்றம் குறித்த ஒரே ஒரு தெளிவான செய்தியை அதிகபட்ச மக்களை சென்றடைவதே இந்த முயற்சி என்றார்.
12 சிறுகதைகளில், காடுகளையும் பல்லுயிர் பெருக்கத்தையும் பாதுகாக்க மனிதகுலத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறது.
படத்தின் தயாரிப்பு ஆலோசகர் புரோட்டிக் மஜூம்தார் கூறுகையில், தென்னிந்தியாவில் கேரளாவில் உள்ள வயநாடு காடுகளில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த சிறு குழந்தைகளின் கண்களால் மனித-விலங்குகளின் தொடர்பு பற்றிய கதையை The Elephant in the Room விவரிக்கிறது. இந்த யானைகளுடன் வளரும் குழந்தைகள், ஒரு சிறப்புப் பிணைப்பை வளர்த்து, காடுகளையும் பல்லுயிர் பெருக்கத்தையும் பாதுகாக்கும் போது மனித - காட்டு விலங்கு மோதலைத் தீர்ப்பது எப்படி என்று விளக்குகிறது.
ஆர்ட் ஆப் தி வோர்ல்டு ஐக்கிய நாடுகளின் பொதுத் தகவல் துறையுடன் தொடர்புடைய ஒரு அரசு சாரா அமைப்பாகும். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை தளமாகக் கொண்ட இந்த அமைப்பு, கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புக்கான ஒரு தளத்தை வழங்குகிறது.சிக்கலான உறவுகளால் பின்னப்பட்டு, தங்க மயில் விருதுக்கு போட்டியிடும் கோல்ட் ஏஸ் மார்பிள் திரைப்படம்
பெரும்பாலும் உருவகப்படுத்துவதைப் போல வாழ்க்கை சிக்கலானதாக இருந்தால், சமூக விதிமுறைகளும் காயப்பட்ட உறவுகளும் இணைந்து கடுமையான புதை மணலாக வாழ்க்கையை மாற்றக்கூடும். தொடர் தோல்வியை சந்திக்கும் கலைஞர் அக்பர், அவரது தோழி மற்றும் தந்தை ஆகியோர் சம்பந்தப்பட்ட கோல்ட் ஏஸ் மார்பிள் (Cold as Marble) என்ற திரைப்படத்தின் வாயிலாக இந்த கசப்பான உணர்வு கோவாவில் நடைபெற்று வரும் 53- வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் கலந்து கொண்ட பிரதிநிதிகளைச் சென்றடைந்துள்ளது. அசர்பைஜான் நாட்டின் இயக்குநர் ஆசிஃப் ரஸ்தமோவ் இயக்கியுள்ள இந்த படம் சிறந்த திரைப்படத்திற்கான தங்க மயில் விருதுக்கு போட்டியிடுகிறது.
கோவாவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது பிரமுகர்களுடன் கலந்துரையாடுகையில், திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஓக்டே நமசோவ் இந்த படம் குறித்த தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். பழமைவாத சமூகத்தில் உள்ள உறவுகளில் நிலவும் சிக்கல்களை இந்தத் திரைப்படம் எடுத்துரைக்க முயற்சித்துள்ளதாக அவர் தெரிவித்தார். திரைப்படத்தில் அக்பரின் தோழியாக நடித்துள்ள நடிகை நடுவன் அப்பாஸ்லியும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.
கருத்துகள்