விஷால் நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராவார். திரைப்படத் தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இளைய மகன்
சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தவர், இவர் முதலில் நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் நன்றாக ஓடியது .நடிகர் மற்றும் இயக்குனர் அர்ஜுனிடம், வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய. நடிகர் விஷால் திருமணம் செய்து கொள்ளாதவர். நடிகர் விஷாலுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக அனிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடப்பதாக இருந்தது.ஆனால், திருமணம் நடக்காமல் போனதும். பின் பிரபல நடிகையான அபிநயாவை நடிகர் விஷால் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அவர் நாடோடிகள் படத்தில் நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து இவர் நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த பூஜை திரைப்படத்தில் கூட ஒரு காட்சிகள் நடித்திருப்பார். விஷாலுக்கு மணப்பெண் குறித்து தகவல் வருகிறது
கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்கள். ஆனால், இது எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் கிடையாது. இந்நிலையில்,நடிகர் விஷால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காசிக்கு சென்றதை காணொளியாக வெளியிட்டுள்ளார்.
மேலும், அன்புள்ள மோடி ஜி, அற்புதமான தரிசனம், பூஜை செய்து கங்கை நதியின் புனித நீரைத் தொட்டேன். கோவிலை புதுப்பித்து, அதை இன்னும் அற்புதமாகவும், எளிதாக எவரும் தரிசனம் செய்வதற்காக நீங்கள் செய்த மாற்றத்திற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுக்கு தலை வணங்குகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் மற்றும் அவரது குடும்பத்தினர் வாரணாசி தெருக்களில் உள்ள கோவில்களிலும் சாமி தரிசனம் செய்தனர்.விஷாலின பயணத்தில், நெருங்கிய நண்பரும், அடுத்தப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவருமான நடிகர் நந்தா உடனிருந்தார். விஷாலுக்கு திருமணமாகி விட்டதாக பேசப்பட்டு வரும் நிலையில் திடீரென காசிக்கு ஏன் சென்றார். என ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.
கருத்துகள்