சென்னையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை ஆனார்.
பாஜகவில் முன்னால் நடிகைகள் குஷ்பு சுந்தர், கவுதமி தடிமல்லா , நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோரை சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளர் சைதை சாதிக் அவதூறாக விமர்சித்திருந்ததில் அவர்மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
மகளிர் பிரிவு நடத்திய போராட்டத்தில் அகில இந்திய பாஜக மகளிர் தலைவி வானதி சீனிவாசன் , குஷ்பு சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொள்ளாத நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது திமுகவுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் விடுதலையாயினர் .தமிழ்நாட்டில் ஏற்கனவே அதிமுக எதிர் திமுக என்றிருந்த நிலை மாறி திமுக எதிர் பாஜக என அதிமுக நான்காக பிரிந்து நிற்கும் நிலையைப் பயன் படுத்தி பாஜக காலூன்ற முயல்வது தெரிகிறது. அதன் காரணமாக இப்போது பாஜக அதிகம் பேசுபொருளாகிறது.
கருத்துகள்