முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்ரீசிவபாதசேகரமங்கலத்தில் (உடையாளூரில்) உள்ளது இராஜராஜதேவரின் பள்ளிப்படையில்லை ! திருமாளிகை.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்திலுள்ள உடையாளூரில்


உள்ளது மன்னர்  இராஜராஜன் சமாதியா என ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தொல்லியல் துறையினர்  தங்கள் அகழ்வாராய்ச்சிக்கான முதல் கட்ட பணிகளை தொடங்கி நடத்தினர். சோழநாட்டின் ஒரு பகுதியான தென்னார்காடு மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டமாக தற்போது உள்ள பகுதியான திருக்கோவிலூரில் பிறந்த இராஜராஜ சோழன் கி.பி.985-ஆம் ஆண்டு சோழப் பேரரசனாக முடி சூட்டி தெற்காசிய பல பிரதேசங்களில்   தனது பேரரசைப் பரப்பினார். தென்னிந்தியாவில் தனக்கு நிகர் யாருமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பல சிற்றரசர்களையும் வெற்றி கண்டார்.

அப்போது, தன்னுடைய வாழ்நாளில் ஏதாவது சாதிக்க வேண்டும் எனக் கருதிய இராஜராஜன் தன்னுடைய தெய்வபக்தியையும், கலையை நேசிக்கும் விதத்தையும் வெளிப்படுத்தும் வகையில் தஞ்சாவூர் பெரிய கோவிலை கி.பி.1010- ஆம் ஆண்டில் கட்டி முடித்தார். பின்னர் கி.பி.1012- ஆம் ஆண்டில் இராஜராஜ சோழன் தனது பட்டத்தைத் துறந்து, தன் மகன் இராஜேந்திர சோழனுக்கு முடிசூட்டினார். இந்த நிலையில் வரலாற்றுத் தகவல்: 


உடையாளூர் உண்மையான  பள்ளிப்படை இல்லையென தொல்லியல் துறை மறுப்பு; 

அப்படி ஸ்ரீசிவபாதசேகரமங்கலத்தில் அதாவது (உடையாளூரில்) ராஜராஜதேவரின் பள்ளிப்படை என்பது  எள்ளளவும் உண்மையற்ற ஒரு தகவலை, கல்வெட்டைத் தவறாகப் படித்துப் புரிந்து கொண்ட ஒருசிலர் செய்திக் கட்டுரையாக்க, அந்தப் பொய்த்தகவல் அப்போதே மைய MDS மற்றும் ASI ஆய்வாளர்களால் மறுக்கப்பட்ட நிலையிலும், மீண்டும், மீண்டும் அதை ஊதிப் பெரிதாக்க நினைக்கும் 'பெருமக்களை' மக்கள் தான் அடையாளம் கண்டு ஒதுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இராமநாதபுரம் வழக்கறிஞர் ஜி.     திருமுருகன், சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், இராஜராஜ சோழனின் சமாதி, கேட்பாரற்று சிதைந்திருப்பதாகவும், அதை பராமரித்து சமாதியுள்ள இடத்தில் மணிமண்டபம் கட்டி, அதை அனைவரும் பார்த்தறியும் விதமாகச் சுற்றுலா ஸ்தலமாக அறிவிக்க உத்தரவிட வேண்டுமென்று கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி  அதுகுறித்து,   தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் உயர்மட்டக் குழுவினர் தற்போதைய நவீன தொழில்நுட்பங்கள், உபகரணங்களைக் கொண்டு, இராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடமாகக் கூறப்பட்டதில் அகழ்வாய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இராஜராஜனைத் தொட்டால் ஆபத்து என்று சிலர் நினைக்கிறார்களா?” என்று கேள்வியெழுப்பி, இந்த வழக்கின் விசாரணையை கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும்,  இராஜராஜ சோழன் சமாதி இருக்குமிடத்தை குடவாயில் பாலசுப்ரமணியனே அகழ்வாராய்ச்சி செய்யலாமென்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

ஏற்கனவே இராஜராஜ சோழன் குறித்து பலர் ஆய்வுகள் மேற்கொண்டு வந்துள்ள நிலையில்,

கல்வெட்டில் இராஜராஜ சோழன்  பள்ளிப்படை பற்றிய தகவல் இல்லை என்பது உறுதியானதும், அவர் பள்ளிப்படை இருக்குமிடமாகப் பத்திரிகைகள் சுட்டிக்காட்டிய வயல்பகுதிக்குச் சென்ற நிலையில்  தனியார் ஒருவருக்குச் சொந்தமான புஞ்சை நிலப்பகுதியில் ஆவுடையாருடன் லிங்கமொன்று மணலில் புதைந்த நிலையில் காட்சியளித்தது. நிலத்துக்குச் சொந்தக்காரர் உதவியுடன் அந்த லிங்கத் திருமேனியைச் சூழ ஆராய்ந்தால். பல ஊர்களில் பரவலாகக் கிடக்கும் கைவிடப்பட்ட லிங்கத் திருமேனிகள் போல தான் அதுவும் இருந்ததே தவிர, அதன் கீழோ, சுற்றுப் பகுதியிலோ பத்திரிக்கைகள் குறிப்பிட்டிருந்தாற் போல் எத்தகய கட்டுமானமும் இல்லை.


கமலக்கண்ணன் என்பவர் இந்த ஆய்வு முழுவதையும் படமெடுத்தார். இவ்வாய்வு, 'இங்குப் பள்ளிப்படை இல்லை' என்பதை ஊர்மக்களுக்குக் கண்ணெதிரில் காட்டியது. உண்மையறிந்த நிலத்துச் சொந்தக்காரர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

தமிழ்நாட்டில் சிலர் வரலாற்றை விட, வரலாற்றைப் போல் வழங்கும் செய்திகளை கண், காது, மூக்கு வைத்த கதைகள் தான் தற்போது பரபரப்பாகப் பேசப்படுகின்றன,  அதில் அவர்களுக்குப் புரியாத தமிழ் வட்டெழுத்து மற்றும் பிரமிகளில் உள்ள வேறு பொருள் விளங்கும் வார்தைகளை எடுத்து அது தங்களுடைய ஜாதி எனப் பதிவிடுவது அபத்தமான செயல். முதலில் மனிதர்கள் பழங்காலங்களில் தங்களது பெயர் மற்றும் ஜாதி அடையாளங்களை, வாழ்வியல் முறையை  மாற்றிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இப்போது அப்படி அல்ல ஏதாவது ஒரு வார்த்தை வந்தால் அது தன் ஜாதியில் அடையாளம் என கூறும் அபத்தம் என்பதை அவர்கள் அறியவில்லை, என்பதே உண்மை.  அதை சிலர் உண்மை என நம்பப்படுகிற நிலை அவர்கள் கல்வெட்டுகளின் ஆராய்ச்சியாளர்களாகவே மாறிவிடும் சூழல் என்பது தான் காலக்கொடுமை. இந்தப் பொய்களை யெல்லாம் நேரடிக் கள ஆய்வுகளின் மூலம் அடையாளம் காட்டுவது தொல்லியல் ஆய்வாளர்களின் கடமை.


இ.ஹுல்ஷ்  எனும் ஜெர்மன் நாட்டுத் தொல்லியல் - கல்வெட்டியலாளர். கோவில் வளாகத்தில் சண்டிகேசுவரர் சன்னதிக்கு எதிரே உள்ள குமுதப்படையில் பொறிக்கப்பட்ட கல்வெட்டினை  முதலில் கண்டறிந்தார். அக்கல்வெட்டின் கீழ்கண்ட வரிகளாகும்:

“பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம்” என்பது  வாசகம். தஞ்சாவூர் பெரிய கோவிலில், பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு வரியின் மூலம் இக்கோவில் முதலாம் இராஜராஜன் எழுப்பியது" எனும் செய்தியினைப் படித்து, படியெடுத்து அறிவித்தவர் ஹூல்ஷ்.1892- ஆம் ஆண்டில் வெங்கையா என்பவர் தென்னிந்திய கல்வெட்டு இரண்டாம் தொகுதி, பகுதி 4-ல் 98 வரிகள் கொண்ட முதல் கல்வெட்டு பதிவு வெளியிடப்பட்டது. இக் கல்வெட்டில்  “நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீச்சரமுடையார்க்கு நாங்குடுத்தனவும், நம் அக்கண் கொடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுத்தார் குடுத்தனவும் ஸ்ரீவிமானத்தின் கல்லிலே வெட்டுக என்று திருவாய் மொழிந்தருள, கல்லில் வெட்டின. யாண்டு இருபதாவது நாள் முன்னூற்றொரு பத்திரண்டினால் உடையார் ஸ்ரீராஜராஜதேவர் .. " என்று பதிவு செய்துள்ளது.

முதலாம் இராஜராஜனின் ஆணையை ஏற்று இக்கோவிலில் முதலாம் இராஜராஜனால் 64 கல்வெட்டுகளும், முதலாம் இராஜேந்திரனால் 21 கல்வெட்டுகளும், இரண்டாம் இராஜேந்திரனால் ஒரு கல்வெட்டும், முதலாம் குலோத்துங்கனால் ஒரு கல்வெட்டும், மூன்றாம் குலோத்துங்கனால் ஒரு கல்வெட்டும், மூன்றாம் இராஜேந்திரனால் ஒரு கல்வெட்டும் வெட்டப்பட்டுள்ளன. சோழர்களின் கல்வெட்டுகள். தவிர, பாண்டியர்களின் இரண்டு கல்வெட்டுகளும், விஜயநகர தஞ்சாவூர் நாயக்கர்களின் நான்கு கல்வெட்டுகளும், மராத்திய சரபோஜிகளின் நான்கு கல்வெட்டுகளும் கோவிலில் பொறிக்கப்பட்டுள்ளன.   


உடையாளூரில் உள்ளது முதலாம் குலோத்துங்க சோழன் காலக் கல்வெட்டு சிவபாதசேகரன் எனும் முதலாம் ராஜராஜ சோழனின் பெயரால் சிவபாதசேகர மங்கலத்தில் அமைந்த சிவபாதசேகரத் தேவர் திருமாளிகை பற்றிய குறிப்புடன் பல முக்கிய வரலாற்றுச் செய்திகளையும் எடுத்துரைக்கும் கல்வெட்டு முழுவதையும் படித்தால் அதன் சிறப்பினை உணரலாம்.

 அத்தூண் கல்வெட்டு வாசகம்;      “ஸ்வஸ் திஸ்ரீஸகலபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு நாற்பத்திரண்டாவது ஸ்ரீ சிவபாதசேகர மங்கலத்து எழுந்தருளி நின்ற ஸ்ரீராஜராஜ தேவரானஸ்ரீசிவபாதசேகர தேவர் திருமாளிகை முன்பில் பெரிய திருமண்டப முன்பில் எடுப்பு ஜீநித்தமையில் இம்மண்டபம் எடுப்பித்தார். பிடவூர் வேளான வேளிர் அரிகேசவனான கச்சிராஜர்காக இவ்வூர் நாயகம் செய்துநின்ற ஜயசிங்க குலகால வளநாட்டு குளமங்கலநாட்டு சா(த்த)மங்கலத்து சாத்த மங்கலமுடையான் நம்பிடாரன் நாடறிபுகழன் இவருடன் விரதங்கொண்டு செய்தார் இவ்வூர் பிடார்களில் ராஜேந்திரசோழனு(க்க) பநாயகநான ஈசான சிவரும் தேவகநாயகமான அறங்காட்டிப் பிச்சரும்” என்பதாகும்.

இச்சாசனத்தின் படி முதலாம் குலோத்துங்க சோழனின் நாற்பத்திரண்டாவது ஆட்சியாண்டில் (கி.பி. 1112 ஆம் ஆண்டில்) ஸ்ரீசிவபாதசேகரமங்கலத்தில் அதாவது (உடையாளூரில்) இராஜராஜதேவரின் திருவுருவம் திகழ்கின்ற ஸ்ரீசிவபாதசேகர தேவர் திருமாளிகை என்ற பெயரில் இருந்துள்ள. மாளிகையின் முன்பகுதியில் அமைந்திருந்த மண்டபப்பகுதி சிதைவடைந்து காணப்பெற்றதால் பிடவூர் எனும் ஊரினைச் சார்ந்த பிடவூர் வேளாண் வேளிர் அரிகேசவனான கச்சிராஜர் என்பவர் அப்பகுதியினை மீண்டும் எடுப்பித்து புனர்நிர்மாணம் செய்தார்.அப்போது அவர் செய்த பணிக்கு ஜெயசிங்க குலகால வளநாட்டு குளமங்கல நாட்டின் ஓர் ஊரான சாத்தமங்கலம் எனும் ஊரினனான நம்பிடாரன் நாடறி புகழன் எனும் சிவபாத சேகர மங்கலத்து அரசு நிருவாக அலுவலனும், அவனுடன் இணைந்து சிவபாதசேகரமங்கலத்து பிடாரர்களில் (சிவாச்சாரியார்களில்) ஒருவனான இராஜேந்திர சோழ அணுக்க நாயகனான ஈசான பண்டிதரும், அறங்காட்டி பிச்சர் என்பவரும் விரதமிருந்து மேலே குறிப்பிட்டுள்ள கச்சிராஜருக்காக இப்பணியைச் செய்தனர் என்பது குறிக்கப்பெற்றுள்ளது.வரலாற்றுச் சிறப்புடைய இக்கல்வெட்டு சாசனத்தால் உடையாளூரில் முதலாம் இராஜராஜ சோழனின் திருவுருவம் எழுந்தருளப்பெற்ற ஒரு மாளிகை பண்டிருந்தது என்பது உறுதியாகின்றது. அது முதலாம் இராஜராஜ சோழனின் நினைவு மாளிகையே, அது பள்ளிப்படை என  (சமாதி கோயில்) இல்லை எனக்கூட கருத வாய்ப்புள்ளது.

அந்த மாளிகை உடையாளூரின் எப்பகுதியில் இருந்தது என்பது இதுகாறும் ஐயம் திரிபற உறுதி செய்யவில்லை. உள்ளூர் ஆற்றங்கரை அருகில் ஒரு வாழைத்தோட்டத்தில் புதைந்த நிலையில் காணப்பெறும் சிவலிங்கம் திகழும் இடமே அப்பண்டைய மாளிகை என்பது அமரர் என். சேதுராமன் என்ற ஆய்வியல் அறிஞரின் முடிவாகும்.  சிவபாதசேகரன் போன்ற வரிகள் தற்போது உடையாளூரில் திகழும் ஸ்ரீகயிலாசமுடையார் திருக்கோயிலே இராஜராஜனின் பள்ளிப்படை எனக் கருதுகின்றனர்.

கயிலாசநாதர் கோயில் குலோத்துங்க சோழன் காலத்தில் முழுவதும் புதுப்பிக்கப்பெற்ற கற்றளியாகும்.விருதுப்பெயர்களாக இராசராசன் கொண்டது மிகப் பலவாகும். 

அதில்:- இராசராசன், மும்முடிச் சோழன், ஜெயங்கொண்ட சோழன் 

என்னும் பெயர்கள் மண்டலப் பெயர்களாகவும் வளநாடுகளின் பெயர்களாகவும் வழங்கின. 

இவையன்றி,  சோழேந்திர சிம்மன், சிவபாதசேகரன், க்ஷத்திரிய சிகாமணி, ஜனநாதன், நிகரிலி சோழன், இராசேந்திர சிம்மன், சோழ மார்த்தாண்டன், இராசாச்ரயன், இராச மார்த்தாண்டன், நித்திய விநோதன், பாண்டிய குலாசனி, கேரளாந்தகன், சிங்களாந்தகன், இரவிகுல மாணிக்கம், தெலுங்க குல காலன் முதலியனவும் வழக்கிலிருந்தன. இப்பெயர்கள் பல சேரிகளுக்கும் இடப்பட்டிருந்தன என்பதைக் கல்வெட்டுகளால் நன்கறிவோம்.        சோழர்கள் காலத்தில் வரலாற்றுக் கலை நிகழ்வுகளில் சித்திரக் கலையின் சோழர் காலத்தை உலகுக்கு வெளிப்படுத்தியது


தஞ்சாவூர் பெரிய கோவிலில் நாட்டியக் கலை வளர்ந்த அளவுக்கு, உலகிலேயே வேறு எங்கும் இந்த அளவுக்கு நாட்டியக் கலை வளர்த்தாக அறிய இயலவில்லை தளிச்சேரி பெணடுகள் குறித்த கல்வெட்டில் அவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் அவர்களுக்கு உரிய உரிமைகள் ஆகியவை பற்றி  கூறப்படுவதோடு நாட்டிய நங்கைகளாக விளங்கிய 400 பேருக்கும் இரண்டு தளிச்சேரி அமைத்து அவருக்கு வழங்கப்பட்ட வீடுகளின் வீட்டிலக்கமும் அவர்கள் முன்பு பணி செய்த இடமும் அவர்களின் சொந்த ஊர் உள்ளிட்ட அனைத்தும் கல்வெட்டில் காணப்படுகிறது.


இவர்களுக்குத் துணை நின்ற நாட்டிய ஆசிரியர்கள் பக்கவாத்தியக் கார்களின் பெயர்களும் அவர்களின் ஊதியம் மற்றும் சலுகைகள் குறித்த விபரமும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது அதற்குரிய ஆணையை இராஜராஜசோழனே நேரடியாக அளித்துள்ளார்

சோழ மண்டலம் முழுவதிலுமிருந்து அங்கு வந்து பணிபுரிந்த ஆடல் மகளிருக்கு ஆளுக்கு ஒரு வேலி வீதம் 400 வேலி நிலமும் அளிக்கப்பட்டுள்ளது.வேலி ஒன்றுக்கு 100 கலம் நெல் இவர்கள் பெற்றார்கள், இங்கு பணிபுரியும் பெண்கள் இறந்தாலோ அல்லது வெளியூர்களுக்குச் சென்றுவிட்டாலோ உரிமையுடைய அவர்கள் குடும்பத்தாரே இக்காணி பெற முடியும் இவ்வாறு அடுத்து முறையாக வருபவர்களுக்கு ஆடற்கலையில் தகுதி இல்லாமல் போய்விட்டால் தகுதி உடைய வேறு ஒருவரை அவர்கள் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணுக்கு பின் வேறு யாரும் இல்லாத பட்சத்தில் வேறு ஒருவரை நியமிக்க அரசு ஆணை கூறுகிறது


நட்டுவம் செய்ய 12 ஆசிரியர்களும், 

கானம் பாட 5 பேரும்.

மொராவியம்என்னும் இசைக்கருவி இசைப்போர் 2 பேரும், 

வாங்கிய மென்னும் குழல் கருவி இசைப்பவர்கள் 3 பேரும்,  

பாடவியம் இசைப்பதற்கு 5 பேரும்,

உடுக்கை வாசிப்பதற்கு 2 பேரும்,

வீணை வாசிப்பு 2 பேரும் 

ஆரியம் பாடுவோர் ,3 பேரும் 

தமிழ் பாட 4 பேரும்,  

கொட்டி மத்தளம் இசைக்க 2 பேரும் ,

முத்திரை சங்கு ஊத 3 பேரும்,

பக்க வாத்தியம் இசைக்க 5 பேரும்,

காந்தர்வர்கள் 75 பேரும் 

தளிச்சேரிப் பெண்களுக்கும் கந்தர்வர்களுக்கும் பணி மேற்பார்வையாளர் 2 பேரும்,

தலைமைக் கணக்கர் ஒருவரும், கீழ்க்கணக்கு 7 பேரும்,

மத்தளம் இசைப்பவர்கள் 66 பேரும், திருப்பள்ளித் தொங்கல் பிடிக்க 10 பேரும் ,

விளக்கு  பணிகளுக்காக தீவெட்டித் தடியர்கள் 7 பேரும்,

நீர் தெளிப்பதற்கு 4 பேரும்,

சன்னாளியல் 2 பேரும், 


திரு மடைப்பள்ளி க்கு மண்பாத்திரங்கள் அளிக்க குலாலர் 10 பேரும், 

துணிகளை துவைப்பதற்கு ஏகாளி 2 பேரும் 

காவி திமை செய்வான் என்னும்

கண்காணிப்பாளர் 2 பேரும், நாவிதம் செய்ய 6 நபரும்,
கோலிளைமை செய்பவர் 4 பேரும். துணி தைப்பவர்கள்

2 பேரும் ரத்தத்னையான் ஒருவரும் ,

கண்ணான் ஒருவரும் ,தச்சர்கள் 5 பேரும், 

சாக்கைக் கூத்து ஆட 4 பேரும் அனைத்துப் பணிகளுக்கும் மேற்பார்வையாளர்கள் ஒருவருமாக மொத்தம் 258 பேர்களுக்கு நிவந்தமாக காணி நிலங்கள் அளிக்கப் பெற்றது,

இவர்களது பணிகளுக்கு ஏற்ப சிலருக்கு 2 காணி உரிமையும் 2 வேலி நிலமும் 200 கலம் நெல்லும், சிலருக்கு அறைக் காணி நிலமும் கிடைத்தன, 

அனைத்துப் பணியாளர்களின் ஊரும் பேரும் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.  தஞ்சாவூர்க் கோட்டத்தில் உள்ள திருக்களித்திட்டையில் பின்வரும் பெயர்கொண்ட சேரிகள் இருந்தன; 
அருள்மொழிதேவச் சேரி,  ஜனநாதச் சேரி,  நித்தவிநோதச் சேரி, இராசகேசரிச் சேரி,  நிகரிலி சோழச் சேரி,  அழகிய சோழச் சேரி, சிங்களாந்தகச் சேரி,  குந்தவ்வை சேரி, சோழகுல சுந்தரச் சேரி, இராசமார்த்தாண்டச் சேரி, இராசராசச் சேரி  என்பன.  சோழர் சமுதாயத்தில் ஜாதிப் பிரிவுகளுடன் கூடிய ஜாதிவேறுபாடுகள் கடுமையாக இருந்தன. ஜாதி வழக்கத்தை மீறுவோர் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். இதைத் தவிர சத்திரிய குலத்திற்கும் சூத்திர  குலத்திற்கும் பிறந்தவர் அனுலோமர் எனப்பட்டனர். சத்திரிய-வைசியக் கலப்பினர் மாகிஷ்யர்கள், வைசிய-சூத்திரக் கலப்பினர் கரணீகள், மாகிஷ்யர்-கரணீகளுக்குப் பிறந்தவர் இரதகாரர் என்று பிரிவினை இருந்தது.


எந்த ஜாதியினர் எந்தத் தொழிலில் ஈடுபட வேண்டுமென  ஜாதியினர் வரையறுத்தனர். தலைமைச் சத்திரிய ஜாதியினருக்கு  அந்தணர் ஆலோசகர் ஆவார். ஹரிஜன மக்கள் சேரிகளில் வாழ்ந்தனர். 1250 ஆம் ஆண்டு பல ஜாதியர்களுக்கிடையே ஒப்பந்தம் ஒன்று நிகழ்ந்தது. இதில் கிட்டத்தட்ட 40 ஜாதியினர் கையொப்பம் இட்டுள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்