தென்பிராந்திய இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் சென்னை விமான நிலையம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை கடைபிடித்தது
மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தென்பிராந்திய இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் சென்னை விமான நிலையம் 31 அக்டோபர் 2022 முதல் 06 நவம்பர் 2022 வரை ஊழல் தடுப்பு கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை கடைபிடித்தது. அப்போது இந்திய விமான நிலைய ஆணைய ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தொடக்க நிகழ்ச்சியில் சுங்கத்துறை முதன்மை ஆணையர் டாக்டர் மேத்யூ ஜாலி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சென்னை விமான நிலைய இயக்குநர் டாக்டர் சரத்குமார், தென்பிராந்திய மண்டல செயல் இயக்குநர் திரு வெங்கடேஸ்வர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
அந்த ஒருவார காலத்தில் இளம் மாணவர்களிடையே நல்ல ஒழுக்கத்தை கற்பிக்கும் வகையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பயணிகள் மற்றும் ஊழியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மீனம்பாக்கத்தில் உள்ள முனையக் கட்டடத்தில் கேந்திர வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் தெரு விளையாட்டுக்களில் ஈடுபட்டனர்.
நவம்பர் 4 2022 அன்று விமான நிலைய ஆணையத்தின் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இடையே தமிழ்நாடு ஊழல் தடுப்பு கண்காணிப்பு இயக்குநர் டாக்டர் பி கந்தசாமி உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பள்ளி- கல்லூரிகள் ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கருத்துகள்