முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காசி தமிழ் சங்கமத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்


உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
"இந்தியா முழுவதிலும், காசி இந்தியாவின் கலாச்சார தலைநகரமாக உள்ளது, அதே நேரம் தமிழ்நாடு மற்றும் தமிழ் கலாச்சாரம் இந்தியாவின் தொன்மை மற்றும் புகழின் மையமாக உள்ளது"

"காசியும் தமிழகமும் காலத்தால் அழியாத நமது கலாச்சாரம் மற்றும் நாகரிகங்களின் மையங்கள்"

"அமிர்த காலத்தில் நமது தீர்மானங்களை நாட்டின் முழுமையான ஒற்றுமையால் நிறைவேற்றுவோம்"

"தமிழின் பாரம்பரியத்தைப் பாதுகாத்து வளப்படுத்துவது 130 கோடி இந்தியர்களின் பொறுப்பு"

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ் சங்கமம்’ என்னும் ஒரு மாத கால நிகழ்ச்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நாட்டின் மிகப் பழமையான, கல்வி முக்கியத்துவம் வாய்ந்த தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே உள்ள பழங்காலத் தொடர்பைக் கொண்டாடுவதும், அந்தப் பெருமையை மீட்டெடுத்து  உறுதிப்படுத்துவதும், இந்த திட்டத்தின் நோக்கமாகும். தமிழகத்தில் இருந்து 2500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் காசிக்கு வருகை தரவுள்ளனர். இந்த தொடக்க நிகழ்ச்சியின் போது, 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ‘திருக்குறள்’ புத்தகத்தையும் பிரதமர் வெளியிட்டார். ஆரத்தியைத் தொடர்ந்து நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார்.நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், உலகின் மிகப் பழமையான உயிர்ப்புடன் உள்ள நகரத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.  நாட்டில் சங்கமங்கள் நடைபெறுவதின் முக்கியத்துவம் குறித்து பேசிய பிரதமர், நதிகள், சித்தாந்தம், அறிவியல் அல்லது அறிவின் சங்கமம் என எதுவாக இருந்தாலும், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களின் ஒவ்வொரு சங்கமமும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு போற்றப்படுகிறது என்று கூறினார். உண்மையில், காசி-தமிழ் சங்கமம் இந்தியாவின் வலிமை மற்றும் குணாதிசயங்களின் கொண்டாட்டமாகும், இதனால் இது தனித்துவம் பெறுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.காசிக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கிய பிரதமர், ஒருபுறம் காசி இந்தியாவின் கலாச்சார தலைநகரம் என்றும், அதேசமயம் தமிழ்நாடு மற்றும் தமிழ் கலாச்சாரம் இந்தியாவின் தொன்மை மற்றும் பெருமையின் மையம் என்றும் கூறினார். கங்கை மற்றும் யமுனை நதிகள் சங்கமிக்கும் இடத்தை ஒப்பிட்ட பிரதமர், காசி-தமிழ் சங்கமம் அதே அளவு புனிதமானது, அது முடிவில்லாத வாய்ப்புகளையும் வலிமையையும் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது என்றார். இந்த முக்கியமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த கல்வி அமைச்சகம், உத்தரபிரதேச அரசு ஆகியவற்றை பிரதமர் பாராட்டினார். இதற்கு ஆதரவை வழங்கியதற்காக சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் போன்ற மத்திய பல்கலைக்கழகங்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். குறிப்பாக காசி மற்றும் தமிழ்நாட்டின் மாணவர்கள் மற்றும் அறிஞர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.காசியும் தமிழகமும் காலத்தால் அழியாத நமது கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் மையங்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார். சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டும் மிகவும் பழமையான, இன்றும் உயிர்ப்புடன் திகழும் மொழிகளாகும்  என்று அவர் கூறினார். காசியில் பாபா விஸ்வநாதர் இருக்கிறார், தமிழகத்தில் ராமேஸ்வரத்தின் அருள் உள்ளது. காசி, தமிழகம் இரண்டுமே சிவனின் அருளைப் பெற்றுள்ளன.  இசையோ, இலக்கியமோ, கலையோ எதுவாக இருந்தாலும், காசியும், தமிழகமும் எப்போதும் அவற்றின் ஆதாரமாக விளங்குகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.இந்தியாவின் செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை விளக்கிய பிரதமர், இந்த இரண்டு இடங்களும் இந்தியாவின் தலைசிறந்த ஆச்சார்யர்களின் பிறப்பிடமாகவும் பணிபுரியும் இடமாகவும் திகழ்ந்துள்ளன என்றார். காசியிலும் தமிழகத்திலும் ஒரே மாதிரி சக்தியை  அனுபவிக்க முடியும் என்று அவர் கூறினார். இன்றும் தமிழர்களின் பாரம்பரிய திருமண ஊர்வலத்தின் போது காசி யாத்திரை இடம் பெறுவதை சுட்டிக்காட்டிய அவர்,  தமிழ்நாட்டின் காசி மீதான தீராத காதல், நமது முன்னோர்களின் வாழ்க்கை முறையான ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்னும் உணர்வைக் குறிக்கிறது என்று கூறினார்.

காசியின் வளர்ச்சிக்கு தமிழகத்தின் பங்களிப்பை சுட்டிக்காட்டிய பிரதமர், தமிழ்நாட்டில் பிறந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்ததை நினைவு கூர்ந்தார். தமிழ்நாட்டில் வேரூன்றியிருந்தாலும் காசியில் வாழ்ந்த வேத பண்டிதர் ராஜேஷ்வர் சாஸ்திரியையும், காசியில் உள்ள அனுமான் படித்துறையில் வாழ்ந்த பட்டாபிராம சாஸ்திரிகளையும் அவர் நினைவு கூர்ந்தார்.


அரிச்சந்திரா படித்துறை கரையில் உள்ள தமிழர் கோவிலான காசி காசி காமகோடீஸ்வரர் திருக்கோயில் மற்றும் கேதார் படித்துறை கரையில் உள்ள இருநூறு ஆண்டுகள் பழமையான குமாரசாமி மடம் மற்றும் மார்கண்டேய ஆசிரமம் ஆகியவற்றையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். கேதார் படித்துறை  மற்றும் அனுமான் படித்துறை கரையோரங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் வசித்து வருவதாகவும், பல தலைமுறைகளாக காசிக்கு மகத்தான பங்களிப்பைச் செய்துவருவதாகவும் அவர் கூறினார்.  பல ஆண்டுகளாக காசியில் வாழ்ந்த மாபெரும் கவிஞரும் புரட்சியாளருமான தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு  சுப்பிரமணிய பாரதியையும் பிரதமர் குறிப்பிட்டார். சுப்ரமணிய பாரதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இருக்கையை நிறுவி பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்  பெருமை சேர்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

விடுதலையின் அமிர்தப் பெருவிழா  காலத்தில்  காசி தமிழ் சங்கமம் நடைபெறுவதாக கூறிய  பிரதமர், அமிர்த காலத்தில் நமது  தீர்மானங்கள் நாட்டின் முழு ஒற்றுமையால் நிறைவேற்றப்படும் என்றார். பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையான கலாச்சார ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் நாடு இந்தியா என்று கூறிய பிரதமர், காலையில் எழுந்தவுடன் 12 ஜோதிர்லிங்கங்களை நினைவு கூரும் பாரம்பரியத்தை சுட்டிக்காட்டினார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் இந்த பாரம்பரியத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் இல்லாதது குறித்து திரு மோடி வருத்தம் தெரிவித்தார். காசிதமிழ்ச் சங்கமம் இன்று இந்தத் தீர்மானத்திற்கான களமாக மாறும் அதே வேளையில் நமது கடமைகளை நாம் உணர்ந்துகொள்ளவும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் ஆற்றலாகவும் திகழும் என்றும் அவர் கூறினார்.


சுவாமி குமரகுருபரர், மொழி மற்றும் அறிவு தடையை உடைத்து,  காசியைத் தம் கர்ம பூமியாக ஆக்கிக் கொண்டதுடன், காசியில் கேதாரேஷ்வர் கோயிலைக் கட்டினார் என்று பிரதமர் கூறினார். பின்னர், அவரது சீடர்கள் தஞ்சாவூரில் காவேரி நதிக்கரையில் காசி விஸ்வநாதர் கோயிலைக் கட்டினார்கள். காசிக்கும், தமிழ் அறிசர்களுக்கும் இடையிலான தொடர்பைச் சுட்டிக்காட்டிய பிரதமர், தமிழ் வாழ்த்துப் பாடலை எழுதிய  மனோன்மணியம் சுந்தரனார் போன்றவர்களுக்கு காசியுடன் உள்ள தொடர்பை குறிப்பிட்டார். வடக்கையும் தெற்கையும் இணைப்பதில் ராஜாஜி எழுதிய ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் பங்கையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். “தென்னிந்தியாவில் இருந்து ராமானுஜ ஆச்சாரியார், சங்கராச்சாரியார், ராஜாஜி முதல் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வரையிலான அறிஞர்களைப் புரிந்து கொள்ளாமல், இந்தியத் தத்துவத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பது எனது அனுபவம்" என்று திரு மோடி கூறினார்.

‘ஐந்து உறுதிப்பாடுகள்’ பற்றி குறிப்பிட்ட பிரதமர், செழுமையான பாரம்பரியம் கொண்ட நாடு அதன் மரபு குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும் என்றார். உலகில் இப்போதும் வாழும் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாக,  தமிழ் இருந்தபோதிலும், அதை முழுமையாகக் கௌரவிப்பதில் நாம் தவறி விட்டோம் என்று அவர் கூறினார்.

“தமிழின் பாரம்பரியத்தைப் பாதுகாத்து வளப்படுத்துவது 130 கோடி இந்தியர்களின் பொறுப்பு. நாம் தமிழைப் புறக்கணித்தால் நாட்டுக்கு பெரும் கேடு விளைவித்தவர்களாவோம். தமிழைக் கட்டுப்பாடுகளுக்குள் அடைத்து வைப்பது, அதற்குப் பெரும் தீமை விளைவிப்பதாகும். மொழி வேறுபாடுகளை நீக்கி, உணர்வுபூர்வமான ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்” என்று பிரதமர் கூறினார்.

சங்கமம் என்பது வெறும் வார்த்தை அல்ல, அது ஒரு அனுபவம் என்று கூறிய பிரதமர், காசி மக்கள் மறக்கமுடியாத விருந்தோம்பலை வழங்குவதில் எந்தக் குறையும் வைக்காது என்றார். தமிழகம் மற்றும் பிற தென்மாநிலங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்றும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து இளைஞர்கள் வருகை தந்து அங்குள்ள கலாச்சாரத்தை உள்வாங்க வேண்டும் என்றும் பிரதமர் விருப்பம் தெரிவித்தார். இந்த சங்கமத்தின் பயன்களை  ஆராய்ச்சி மூலம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும், இந்த விதை ஒரு மாபெரும் மரமாக மாற வேண்டும் என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், மத்திய அமைச்சர்கள் டாக்டர் எல் முருகன், திரு தர்மேந்திர பிரதான், நாடாளுமன்ற உறுப்பினர் திரு இளையராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னணி

‘‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற சிந்தனையை மேம்படுத்துவது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்படும் அரசு முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்றாகும். இந்த நோக்கத்தை பிரதிபலிக்கும் மற்றொரு முயற்சியாக, காசியில் (வாரணாசி) ஒரு மாத கால நிகழ்ச்சியான ‘காசி தமிழ் சங்கமம்’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்  பழமையான, கல்வி முக்கியத்துவம் வாய்ந்த தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே உள்ள பழங்காலத் தொடர்பைக் கொண்டாடுவதும், அந்தப் பெருமையை மீட்டெடுத்து  உறுதிப்படுத்துவதும், இந்த திட்டத்தின் நோக்கமாகும். இரு பிராந்தியங்களில் இருந்தும் அறிஞர்கள், மாணவர்கள், தத்துவ ஞானிகள், வணிகர்கள், கைவினைஞர்கள், கலைஞர்கள் போன்ற அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து, அவர்களின் அறிவு, கலாச்சாரம், அனுபவங்கள் மற்றும்  சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பளிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.  தமிழகத்தில் இருந்து 2500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் காசிக்கு வருகை தரவுள்ளனர். அவர்கள் ஒரே மாதிரியான வர்த்தகம், தொழில் மற்றும் ஆர்வமுள்ள உள்ளூர் மக்களுடன் தொடர்புகொள்வதற்காக கருத்தரங்குகள், தள வருகைகள் போன்றவற்றில் பங்கேற்பார்கள். கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஒரு மாவட்டம்-ஒரு பொருள், புத்தகங்கள், ஆவணப்படங்கள், உணவு வகைகள், கலை வடிவங்கள், வரலாறு, சுற்றுலாத் தலங்கள் போன்ற இரு பகுதிகளின் ஒரு மாதக் கண்காட்சியும் காசியில் நடைபெறும்.

தேசிய கல்விக் கொள்கை 2020, இந்திய அறிவு அமைப்புகளின் வளத்தை நவீன அறிவு அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கும் முன்முயற்சியை வலியுறுத்துகிறது. சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் இத்திட்டத்தை செயல்படுத்தும் முகமைகளாகும். மேலும் ...இந்த நிகழ்ச்சி குறித்து தமிழ்நாட்டிலிருந்து அரசியல் ரீதியாக விமர்சனங்களும் எழுகிறது.தமிழகத்தில் இலக்கண இலக்கியம் கற்ற நடுத்தரமான மற்றும்  அடித்தள மக்களிடம் தொடர்பே இல்லாத தமிழே அறியாத உயர் தட்டு மக்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட ஐ.ஐ.டி தான் தமிழ் சங்கமம் ஏற்பாட்டாளர்கள் என்றும் சமஸ்கிருத அறிஞரான சாமு சாஸ்திரி தான் ஒருக்கிணைப்பாளர் என்றும் தமிழ் அறிஞர்களை, படைப்பாளிகளை எல்லாம் தவிர்த்து விட்டு, பல கோடி செலவில், படாடோப ஏற்பாட்டில் நடக்கப் போவது தான் என காசி தமிழ் சங்கமம் குறித்த செய்திகள் ஒருபக்கம்.!

அதில் பங்குபெறுகிற நபர்கள் 

முதலில் 2,500 பேர் என்றார்கள்! தற்போது 5,000 பேராம்! எனற சிலரது ஏரிச்சலும்  இலவச குளிர்சாதன ரயில் பயணம்! போக்குவரத்து, தங்குமிடம், உணவு, கண்டு களிக்க கலை நிகழ்ச்சிகள்! அயோத்தி ராமர் கோயில் பாரதமாதா கோவில் போன்ற கோவில்களில் தரிசனம்… என ஏக தடபுடல்! அத்தனையும் இலவசமாம்! அரசாங்கத்தின் சிறப்பான  செலவில் தமிழ்ச் சங்கமம் 

இது குறித்து  பேராசிரியர் சுப.வீரபாண்டியனின்  ஒரு பதிவு :

"காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது"

தமிழ்நாட்டில் எப்படியாவது கால் வைத்து விட வேண்டும் என்பதற்காகத் தலைகீழாய் நின்று பார்க்கிறார்கள் பாஜகவினர்! 

அவர்களின் இப்போதைய புதிய திட்டம், காசித் தமிழ்ச் சங்கமம்.  தமிழ்நாட்டில் இந்தியைப் புகுத்தி விட்டுக் காசிக்குப் போய்த் தமிழை வளர்க்கப் போகிறார்களாம்!  

நவம்பர் 16 தொடங்கி டிசம்பர் 19 வரையில் வாரணாசியில், அதாவது காசியில், பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சங்கமம் விழாவை நடத்த இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து 2500 மாணவர்களைத் தொடர்வண்டி மூலமாக அழைத்துச் செல்லும் பணி இப்போது தொடங்கியிருக்கிறது. 

காசியில் போய் இறங்கும் மாணவர்களைப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு வரவேற்கக் காத்திருக்கிறாராம்!  குஜராத் பாலம் அறுந்து தொங்கி இறந்து போனவர்களைக் கூடப் பார்க்காத நிலையில் , தமிழ்நாட்டு மாணவர்களுக்காக அங்கே காத்திருக்கிறார்! எல்லாம் 2024 தேர்தல் அரசியல்தான். 

இங்கிருந்து புறப்படும் மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்து குங்குமம் வைத்து அனுப்பி வைக்கிறார்கள். இது தமிழ்ப் பயணமா,  தல யாத்திரையா என்று தெரியவில்லை!  

பயணச்சீட்டு, தங்குமிடம், சுற்றிப் பார்க்க வழிவகை அனைத்தும் செய்யப்படுகிறது.தமிழ் என்ற வலையின் மூலம் தமிழ் மாணவர்கள் என்னும் மீன்களைப் பிடிக்க முயற்சிக்கிறார்கள். காசிக்குப் போனால் எல்லாம் சரியாகிவிடும் என்று உபதேசிக்கிறார்கள். 

கவிஞர் பொன் செல்வகணபதி எழுதியுள்ள அந்தக் கவிதை வரிகள்தான் இதற்கு ஏற்ற விடையாக உள்ளது.  

"காசிக்குப் போனாலும்   கருமம் தொலையாது மாசில்லா தமிழ் முன்னே மதவாதம் செல்லாது!"  இதுதான் உண்மை. 

இந்த நேரத்தில், காசி பனாரஸ் பல்கலைக்கழகம்  பற்றிக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது நல்லது. 

1916 ஆம் ஆண்டு பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் மாளவியாவால் தொடங்கப்பட்டது. அவரை "மண்ணுருண்டை மாளவியா"என்று அழைப்பார்,  பெரியார். அது முழுக்க முழுக்க இந்துத்துவத்தை மையமாகக் கொண்ட ஒரு கல்வி நிறுவனம். அந்தனர்களும், உயர் சாதி என்று கூறப்படும் வகுப்பினரும் கூடுதலாகப் படிக்கும் பல்கலைக்கழகம். 

அங்குதான் 1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துணைப் பிரதமராக இருந்த ஜெகஜீவன் ராமுக்கு ஒரு பெரிய அவமானம் ஏற்பட்டது. சம்பூரானந்தர் சிலையை ஜெகஜீவன்ராம் திறந்து வைத்தார். அப்போது அங்கிருந்த பார்ப்பன மாணவர்கள், ஜெகஜீவன்ராம் சாதியைச் சொல்லி வெளியேறு என்று கூச்சலிட்டார்கள். அவருக்குத் தண்ணீர் கூடக் கொடுக்கவில்லை என்று அவருடைய மகள் மீரா குமாரி வேதனையோடு சொன்னார். 

அவர் திறந்து வைத்த காரணத்தினாலேயே கங்கை நீர் கொண்டு அந்தச் சிலையைக் கழுவித் தீட்டு கழித்தார்கள். 

மறுநாள் சென்னை வந்த துணை பிரதமர் ஜெகஜீவன்ராம், இந்தக் கொடுமையை, , சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.

இதுதான் பனாரஸ் பல்கலைக்கழகம் பின்பற்றும் சனாதனம். அதனால் தான் நம்முடைய சனாதனத்திற்கு ஆளுநராக விளங்கும் ஆர். என். ரவி அவர்கள், எல்லோரும் காசிக்குப் போய் வாருங்கள், அங்கு இருக்கும் படகோட்டி கூட என்னை விட நன்றாகத் தமிழ் பேசுவார் என்று சொல்லி வழியனுப்பி வைத்திருக்கிறார்!  

இதனை அவருடைய ஒப்புதல் வாக்குமூலம் என்று நாம் கொள்ளலாம். காசியில் இருக்கும் படகோட்டியை விட மோசமாகத் தமிழ் பேசும் இவர்தான், இங்கே திருக்குறள் ஆராய்ச்சி எல்லாம் செய்கிறார்!  இந்தக் கேலிக் கூத்தை நாம் என்னவென்று சொல்வது!  

போகட்டும், முன்பு தருண் விஜய் என்பவரை அழைத்து வந்து திருக்குறளை பற்றிப் பேச வைத்து, தமிழர்களைக் கவர முடியுமா என்று பார்த்தார்கள். அவர் இங்கிருந்து எடுத்துச் சென்ற திருவள்ளுவர் சிலை இப்போது வாரணாசியில் எங்கோ ஒரு மூலையில் கிடக்கிறது. வள்ளுவருக்கே இந்த நிலைமை என்றால், வாரணாசிக்கு அழைத்துச் செல்லப்படும் தமிழர்களுக்கு என்ன நிலை ஏற்படுமோ தெரியவில்லை!  

ஒன்றே ஒன்றை நாம் அழுத்தமாய் சொல்லலாம். தமிழ் சங்கமத்தை நடத்த எங்களுக்கு வாரணாசியோ,  வடநாட்டுப் பார்ப்பனர்களோ தேவையில்லை. நம் தமிழை நாம் வளர்ப்போம்!  நம்மை நம் தமிழ் காப்பாற்றும்!!

அன்புடன்

-சுப.வீரபாண்டியன், பொதுச்செயலாளர்,திராவிட இயக்கத் தமிழர் பேரவை." எனத் தெரிவித்துள்ளார். ஆனால் இதில் பெரிய வேடிக்கை ஏன்னவென்றால்  சுப.வீரபாண்டியன் தந்தை சுப்பையா செட்டியார் வழி மூதாதையர் பலர் காசி வந்து சென்றவர்கள் தான் என்பதை அவர் மற்ந்துவிடடது தான். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

பதிவு செய்யும் பத்திரங்களில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் கட்டாயம் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை

ஆவணங்கள் பதிவு செய்யும் போது எழுதிய பத்திரங்களின் கடைசி பக்கத்தில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால் பதிவு செய்த பத்திரப் பதிவு செல்லாது      அதோடு தற்போது அவரது புகைப்படம் இணைப்பு வேண்டும். கடைபிடிக்காத ஆவண எழுத்தர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை   பத்திர பதிவுத்துறைமின் சுற்றறிக்கை முழு விபரம்‌ பத்திரப் பதிவு செய்யும் ஆவணங்களில் பதிவு ஆவண எழுத்தர் பெயர், உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால், அந்த பத்திரப்பதிவு செல்லாது. தமிழகத்தில் போலியான பத்திரங்கள் பதிவாவதைத் தடுக்க மாநில பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அதில், ஆவணத்தை தயார் செய்த ஆவண எழுத்தர் அல்லது வழக்குறைஞர் பார் கவுன்சில் பதிவு எண் பெயர் மற்றும் உரிமம் எண் உடன் புகைப்படம் இணைத்து பதிவு செய்ய வேண்டும். ஆவண எழுத்தரின் புகைப்படமும் அதன் கீழ் அவரது கையொப்பமும் வேண்டும். இந்த நடைமுறை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ள இந்த நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் மாதிரிப் படிவம் ஒன