இராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஆறு நபர்களை விடுதலை செய்த உச்சநீதிமன்றம்
“தமிழ்நாடு அரசின் தீர்மானங்களை ஆளுநர் காலதாமதம் செய்யக்கூடாது என்பதற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பே ஆதாரம் பேரறிவாளன் என்ற நபர் விடுதலையைத் தொடர்ந்து, நளினி உள்ளிட்ட ஆறு பேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை வரவேற்கும் காங்கிரஸ் கட்சியை உள்ளிட்ட சில கட்சிகளைத் தவிர பல அரசியல் கட்சிகளில். பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நளினி, இரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சாந்தன், முருகன், ஜெயக்குமார் ஆகிய ஆறுபேரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது உச்ச நீதிமன்றத்தில் . தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரை, தண்டனை பெற்றிருந்தவர்களின் கல்வித் தகுதி, சிறையிருந்த காலத்தில் அவர்களது நன்னடத்தை, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலிருந்தது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா அமர்வு தீர்ப்பளித்துள்ள தீர்ப்பின் முழுவிவரம்:-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருந்த குற்றவாளியான பேரறிவாளனை விடுதலை செய்த தீர்ப்புப் படி 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எற்கனவே பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாம் பார்க்க வேண்டும் .
அதில் முக்கிய அம்சங்கள்:
30 ஆண்டுகளாக சிறையிலுள்ள தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு கடந்த மே மாதம் 18 ஆம் தேதி தீர்ப்பு வந்தது.
பிரிவு 161கீழ் மாநில ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த அவரை கட்டுப்படுத்துவதுடன் அவர் மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு உட்பட்டவர் தான் என உறுதியாகிறது.
பிரிவு 161 ன் கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்தாமை அல்லது அதிகாரத்தை பயன்படுத்துவதில் காரணம் சொல்லப்படாத தாமதத்தை செய்யும் பொழுது அது நீதித்துறையின் மறு ஆய்வுக்கு உட்பட்டது. குறிப்பாக ஒரு கைதியை விடுதலை செய்வது தொடர்பான அமைச்சரவையின் பரிந்துரைகளின் மீது ஆளுநர் முடிவெடுப்பதில் தாமதம் செய்தால் அது நீதித்துறையின் ஆய்வுக்குள் முழுமையாக வந்துவிடும்.
பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசின் பரிந்துரையை இரண்டரை ஆண்டுகள் காலமாக தாமதம் செய்து எந்த அரசியலமைப்பு ஆதாரமுமில்லாமல் குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் அனுப்பி வைத்தது அரசியலமைப்பிற்கு விரோதமானது.
ஆளுநர் என்பவர் பணிபுரியும் மாநிலத்திற்கான கட்டுப்பாட்டிற்குள் வரக்கூடியவர் தான்.
160 ஆவது பிரிவின் கீழ் மாநில அமைச்சரவையின் பரிந்துரையின் மீது இரண்டரை ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது
பேரறிவாளன் நீண்ட நாள் சிறைவாசத்தில் சிறையில் அவரது நன்னடத்தை பரோலின் பொழுது அவரது நன்னடத்தை அவரது மருத்துவப் பதிவுகளில் இருந்து அவருக்கு இருக்கக்கூடிய நீண்ட நாள் நோய் அவர் பெற்ற கல்வித் தகுதிகள் மற்றும் அவரது மனு நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கக் கூடிய விஷயம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் அவரை உச்ச நீதிமன்றம் விடுவிக்கிறது.
அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ் எங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளன் இதுவரை பெற்ற தண்டனை முழுமையாக அனுபவித்ததாகக் கருதி அவரை விடுதலை செய்த நிலையில்.
தமிழ்நாடு அமைச்சரவை அந்த 7 பேர் விடுதலை சம்பந்தமாக எடுத்த முடிவு பல்வேறு சட்ட விதிகளுக்கு உட்பட்டது அதன் மீது
ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.
முடிவெடுக்க ஆளுநர் காலம் தாழ்த்தியதால், அதன் பலனை மனுதாரரான பேரறிவாளனுக்கு வழங்குகிறோம்.
இவ்வாறு பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனடிப்படையில் தான் தற்போது நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.31 வருடமாக அவர்கள் தண்டனை அனுபவித்து உள்ளனர்,அதன் காரணமாக அவர்கள் நடத்திய சட்டப் போராட்டத்திற்குப் பிறகு விடுதலை ஆன உள்ளேன்! இது நீதிக்கும், உண்மைக்கும் கிடைத்த வெற்றி. தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு காரணமாகத் தான் இது சாத்தியமானதாக விடுதலை ஆன நளினி கூறியது. காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பலரைக் குறிக்கும்.
”ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளிகள் 12 பேர் பிடிபடாமலேயே தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர்களோடு தொடர்பில் இருந்ததற்காக கைது செய்யப்பட்டவர்கள் தான் இந்த ஏழு நபர்கள் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைப்பது மனிதாபிமானமற்றது” என்ற குரல்கள் கடந்த பத்தாண்டுகளாகவே மேலேழுந்து வலுப் பெற்றன! காஞ்சிபுரத்தில் செங்கொடி என்ற ஆதிதிராவிட சமூகத்தில் கம்யூனிஸ்ட் சார்ந்த பெண் இந்த எழுவரை விடுதலை செய்யக் கோரி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து தமிழ்நாட்டில் ”இவர்களை விடுதலை செய்ய வேண்டும்”என பல அமைப்புகள் களம் கண்டனர்.
அது குறித்து வேலூரையடுத்த பிரம்மபுரத்தில் பரோலில் வெளியில் வந்து தங்கி இருந்த நளினியை சில பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டு அவரிடம் வாழ்த்துக்களைக் கூறியவர்களிடம் பேசிய போது நளினி
’’உண்மைக்கு ஒரு நாள் நீதி கிடைத்தே தீரும்!’’ - எனத் தெரிவித்தார் அதுபோல இவர்கள் மாநில அரசின் தீர்மாணம் மற்றும் உச்சநீதிமன்றம் மூலம் விடுதலை சாத்தியமானது...அதைப்போல. இராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது காவல்துறை உள்ளிட்ட பலர் மரணமும் கொடுமையான செயல் தானே வரலாறு இந்தப் பாதகமான செயல் செய்த யாரையும் விடாது. சட்டம் இவர்களுக்கு விடுதலை வழங்கியது.தேசம் ஒரு நல்ல தலைவரை இழந்த காயம் பலருக்கு இன்னும் உண்டு.
கருத்துகள்