நவம்பர் 6 ஆம் தேதியில் உள்அரங்கிலோ நான்கு சுவர்களுக்கு மத்தியிலோ, RSS அணிவகுப்பு ஊர்வலம் நடத்த விருப்பமில்லை.
கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, மாநிலங்களின் ஆர் எஸ் எஸ் தலைவர் டாக்டர் வன்னியராஜன் அறிவிப்பு!
ஊர்வலத்தை உள்அரங்கிலோ, அல்லது நான்கு சுவர்களுக்குள்ளோ, நடத்துமாறு நீதிமன்றம் கூறியிருப்பது எங்களுக்கு ஏற்புடையதல்ல!.
என்று தனது பத்திரிகை செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார் மேலும் 97 ஆண்டுகளாக தொடர்ந்து காஷ்மீர், கேரளம், வங்காளம் உட்பட எல்லா மாநிலங்களிலும், பொதுவெளியில் RSS அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்று வருகிறது.
நாங்கள் சட்ட ரீதியாக இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம். என்று தெரிவித்துள்ளார்
நாளை நடைபெற இருந்த ஊர்வலம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். "அணிவகுப்பு ஊர்வலத்தை உள் அரங்கிலோ நாலு சுவர்களுக்குள்ளோ நடத்த வேண்டும் என்ற நிபந்தனை ஏற்புடையது அல்ல. காஷ்மீர், கேரளம், மேற்குவங்கம் போன்ற எல்லா இடங்களிலும் அணிவகுப்பு பொதுவெளியில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளோம்.
தமிழ்நாட்டில் நாளை நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணி ரத்து செய்யப்படுவதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
கருத்துகள்