இளம் கால்பந்து வீராங்கனைக்கு தவறான சிகிச்சையளித்த நிலையில் மரணமடைந்த விவகாரத்தில் தலைமறைவான அரசு மருத்துவர்களைத் தீவிரமாக தேடிவருவதாக தனிப்படை கருத்து தெரிவிக்க கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள 2 அரசு மருத்துவர்களை, தனிப்படை காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றனர் என்ற தகவலிருந்த போதும். நீதிமன்றம் மருத்துவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்தது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியா (வயது 17), பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் கால் மூட்டு ஜவ்வு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வலி குறையாததால், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கால் அகற்றப்பட்ட நிலையில், அவர் நவம்பர் 15-ஆம் தேதி உயிரிழந்தார்.
பெரியார் நகர் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் கவனக்குறைபாடே அதற்குக் காரணமென மருத்துவக் கல்வி இயக்குநர் அறிக்கையளித்ததன் அடிப்படையில், மருத்துவர்கள் பால்ராம்சங்கர், சோமசுந்தர் ஆகிய இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், இரண்டு மருத்துவர்கள் மீதும் பெரவள்ளூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு இரண்டு மருத்துவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதை. விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ‘‘இந்த வழக்கில் காவல்துறை விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். டாக்டர்களை கைது செய்வதற்கு தடை விதிக்க முடியாது’’ என உத்தரவிட்டார்.
முன்ஜாமீன் வழங்கப்படாததால், மருத்துவர்கள் உட்பட அறுவை சிகிச்சையின் போது உடனிருந்த மருத்துவ உதவியாளர்களும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், இரண்டு அரசு மருத்துவர்களும் தலைமறைவாக உள்ளனர். கொளத்தூர் காவல்துறை துணைக் காவல் ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து, அவர்களை தீவிரமாக தேடிவருவதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய மருத்துவக் குழுவிடம், பிரியா உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு வினாக்களை எழுப்பி காவல்துறை கடிதம் அனுப்பினர். அது தொடர்பான அறிக்கையை காவல் துறையிடம் அந்தக் குழு அளித்துள்ளது. ‘‘அதில் சில சந்தேகங்கள் உள்ளன. அதுபற்றி மருத்துவக் குழுவினரிடம் மீண்டும் சில தகவல் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் தெரிவிக்கும் விளக்கத்தைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என காவல்துறையினர் தெரிவித்தனர். கால்பந்து வீராங்கனை உயிரிழந்த விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் கடிதம் வாயிலாக வலியுறுத்தியது.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் கே.செந்தில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் 'உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலில் மருத்துவ சிகிச்சையின் போது ஏற்பட்ட இறப்பில் பொதுவாக அந்தத் துறை மூத்த ஸ்பெஷலிஸ்ட் கருத்தை காவல்துறையினர் பெற வேண்டும். அவ்வாறு மூத்த ஸ்பெஷலிஸ்ட் அந்த மரணத்தில் மருத்துவ சிகிச்சையின் போது கடும் கவனக்குறைவு இருக்கிறது என்று கூறினால் மட்டுமே காவல்துறை 304- A பிரிவின் படி வழக்கு தொடர வேண்டும். அப்படி 304-A பிரிவில் வழக்கு தொடர்ந்தாலும் டாக்டர்களை கைது செய்வது தவிர்க்கப்பட வேண்டுமென்று கூறுகிறது. உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் மருத்துவர்களைக் கொலைக் குற்றவாளி போல முன்ஜாமீன் மறுத்து உடனடியாக சரணடையக் கூறி இருப்பது நாட்டிலுள்ள அனைத்து மருத்துவர்களையும் ஏமாற்றமடைய வைத்திருக்கிறது.
இந்த நிகழ்வில் சிவில் கவன குறைவுக்கான ஒழுங்கு நடவடிக்கையை மட்டுமே மருத்துவர்கள் மீது எடுக்கப்பட வேண்டுமென்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. நோயாளியின் காலை, சிகிச்சை செய்யும் நோக்கில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்து, அதன் பின் கவனக்குறைவில் உயிர் சேதம் ஏற்பட்டது வருத்தமாக இருந்தாலும் அது சிவில் நெக்லி ஜென்சில் மட்டுமே வரும். காவல் நடவடிக்கை அதிகப்படியானது மருத்துவர் செவிலியர் மற்றும் சுகாதார அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு எதிரானது என்று சங்கம் கருதுகிறது. எனவே மருத்துவர் மீது பதியப்பட்ட 304-A பிரிவு மாற்றப்பட வேண்டும்.
அதையும் மீறி மருத்துவர் கைது செய்யப்பட்டால் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் உடனடியாக மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவு கேட்டு தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் அனுப்பியுள்ளது. தேவைப்பட்டால் மற்ற சுகாதார ஊழியர் சங்கங்களையும் சேர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. மருத்துவர்களும் மனிதர்களே. நல்ல எண்ணத்தில் செயல்பட்டவர்கள் தான். கவனக்குறைவினால் துரதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்பட்டது. சட்டப்படி உரிய ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே எடுக்க வேண்டும் என்று சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறோம்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மருத்துவர்களும் மனிதர்களே. நல்ல எண்ணத்தில் செயல்பட்டவர்கள் தான். கவனக்குறைவினால் துரதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்பட்டது.அரசு மருத்துவர்களுக்கு ஐந்து சங்கங்கள் உள்ளன! காரணம், தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் செந்திலின் நடவடிக்கைகள் பிடிக்காமல் பிரிந்து சென்றதால் உருவானவையே அவை யாவும்! இவர் அடிப்படையில் அதிகார மையத்தின் ஒரு புரோக்கர் என்ற கருத்து நிலவுகிறது ! ”இவர் மருத்துவப் பணியே செய்வதில்லை. மருத்துவர் சங்கத் தலைவர், மெடிக்கல் கவுன்சில் தலைவர் என்ற சுதந்திரத்தில் எல்லாவற்றிலும் பணம் பார்ப்பது ஒன்றே வேலையாக வாழ்பவர்” என்பது சுகாதாரத் துறையில் அனைவருக்குமே தெரிந்த உண்மையாக உள்ளது என்பது மக்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது.
”கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் எடுபிடியாகவே இருந்து அனைத்து ஊழல்களுக்கும் அவருக்கு வழிகாட்டியாக இருந்து கமிஷன் பார்த்தவர் தான் இந்த செந்தில்” என்கிறார்கள்! இவரைப் பற்றி அறிந்த பலர் அந்த வகையில் தான் ஆட்சி மாற்றம் நடந்ததும் இவர் வீட்டிலும் சோதனைகள் நடத்தப்பட்டது. ஆனால், சோதனைக்குப் பிறகு விஜயபாஸ்கரைப் போலவே இப்போது பலரையும் சரிகட்டி விட்டார். இவர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. தமிழ் நாடு மெடிக்கல் கவுன்சிலுக்கும் தலைவராக உள்ளார். அந்த வகையில் தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு பெரிய தவறுகள் செய்தாலும், நோயாளிகளுக்கு எவ்வளவு அநீதி இழைக்கப்பட்டாலும், அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு எல்லா புகார்களையும் நீர்த்துப் போக வைத்து விடுகிறார். இது பற்றி இன்னும் எழுதலாம்! அந்த அளவில்
இப்படிப்பட்ட டாக்டர் செந்தில் மீண்டும் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தேர்தலுக்கு நிற்பதால் டாக்டர்கள் ஓட்டுக்களை அறுவடை செய்யும் விதமாக, ஏதோ மருத்துவர்களின் பாதுகாவலனாகத் தன்னை காட்டிக் கொண்டு அரசியல்வாதிகள் வட்டத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். உண்மையில் இந்த அறிக்கையானது சம்பந்தப்பட்ட இரு மருத்துவர்கள் மீதுள்ள மக்களின் கோபத்தை ஒட்டுமொத்த அரசு மருத்துவர்கள் மீதும் மடை மாற்றுவது போலத் தான் உள்ளது. அரசு மருத்துவர்களில் மிகப் பெரும்பாலோர் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றனர் என்பதை மக்கள் அறிந்தே உள்ளனர். நடைபெற்ற சம்பவத்திற்கு சட்டப்படியும், தார்மீக அடிப்படையிலும் உரிய தண்டனையை ஏற்க சம்பந்தப்பட்டவர்கள் முன்வருவதே இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் இருப்பதற்கு வழி வகுக்கும். ”டாக்டர்கள் என்ன செய்தாலும், சங்கம் காப்பாற்றிவிடும்” என்றால், மக்களுக்கு பாதுகாப்பு தான் என்ன? ஒரு துயர நேரத்திலும் இந்த மாதிரி பேசுவது மக்களின் பெரும் கோபம் ஒட்டு மொத்த டாக்டர்களிடம் திரும்பவே வழிவகுக்கும்! சட்டத்தின் முன் டாக்டர்களும் சமமானவர்களே.
கருத்துகள்