முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தெருவில் வசிப்பவர்களின் சுகாதார பிரச்சனைகளை அலசும் மராத்தி திரைப்படம் ‘ரேகா’

தெருவில் வசிப்பவர்களின் சுகாதார பிரச்சனைகளை அலசும் மராத்தி படம் ‘ரேகா’

மராத்தி மொழிப் படமான ரேகா, 53 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா கதை அல்லா பிரிவின் கீழ் வியாழனன்று திரையிடப்பட்டது.


தெருவில் வசிப்பவர்களின் அன்றாடப் போராட்டங்கள், அவர்களின் சுகாதாரம் மற்றும் தூய்மைப்  பிரச்சினைகள், அவர்கள் மீதான   சமூகத்தின் கண்ணோட்டம் பற்றி  இத்திரைப்படம் அலசுகிறது. இத்திரைப்படத்தின் இயக்குனர் சேகர் பாபு ரன்காம்பே, “தெருவில் வசிப்பவர்களின் குறிப்பாக பெண்களின் சுகாதாரப் பிரச்சினைகளை, அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை இப்படம் சித்தரிக்கிறது’’ என்று கூறினார்.  ‘’ஒன்றரை ஆண்டுகளாக இதுபற்றி ஆராய்ச்சி செய்தபோது, அவர்களின் உண்மை நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். பல மாதங்களாக அவர்கள் குளிக்க முடியாமல் இருப்பதையும் காணமுடிந்தது'' என்றார்.

கதாநாயகி ரேகா சாலையோரத்தில் வசிக்கிறார். பூஞ்சை தோல் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, குளித்துவிட்டு மருந்து தடவுமாறு மருத்துவர் பரிந்துரைக்கிறார். ஆனால் அவளது கணவன் அவளைத் தடுத்து நிறுத்தி அவளை மோசமாக நடத்துகிறான். ரேகா குளிக்க முயல்கிறாள், ஆனால் அவளது சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் அவளிடம் வேண்டாம் என்ற காரணத்தைக் கூறும்போது அதிர்ச்சியடைந்து, அவள் கணவனை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். சுத்தமாக இருக்க அவள் படும் கஷ்டங்களை படம் சித்தரிக்கிறது.

மகாராஷ்டிராவின் வாகா (நாடக ) கலைஞர்களைக் கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இதுவரை கேமராக்களை எதிர்கொள்ளவில்லை. எனவே, அவர்களுக்கு கேமரா முன் நடிப்பது குறித்து பயிற்சி அளிக்கும் வகையில் இரண்டு மாத கால பயிலரங்கம் நடத்தப்பட்டது. சாங்லியில் வசிக்கும் சேகர் பாபு ரன்காம்பே, இன்று பத்திரிகை தகவல் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட  "டேபிள்-டாக்ஸ்" அமர்வில் பேசும் போது, இந்த திட்டத்தில் உதவியதற்காக புகழ்பெற்ற மராத்தி இயக்குனர் ரவி ஜாதவ்க்கு தான் கடன்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கும், திரைப்படங்களில் இடம்பிடித்ததற்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள மாயா பவார் மற்றும் தமினா பவார் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.  மேலும் மற்றொரு நிகழ்வில்   படத்தொகுப்பின் நுணுக்கங்கள் பற்றி புகழ்பெற்ற திரைப்பட எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் பகிர்ந்து கொள்கிறார்

புகழ்பெற்ற திரைப்பட படத்தொகுப்பாளர்  ஏ ஸ்ரீகர் பிரசாத், இன்று கோவாவில் 53 வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவின்  மாஸ்டர் கிளாஸ் நிகழ்ச்சியில்,  திரைப்படப் படத்தொகுப்பின்    நுணுக்கங்களைப் பற்றிய முக்கிய அம்சங்களைப் பகிர்ந்து கொண்டார்.

திரைப்பட இயக்குநர்கள்  பார்வையாளர்களை நன்கு அறிந்திருக்க வேண்டும், அவர்களது விருப்பங்களை நன்கு உணர்ந்திருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். பார்வையாளர்களை நன்கு அறியும் இலக்கை அடைவது  படத்தின் வெற்றியை உறுதிப்படுத்த உதவுகிறது.

படங்களில் காணப்படும் மிகைப்படுத்தல்கள் பற்றி பேசிய பிரசாத், படம் மற்றும் நடிகர்களைப் பொறுத்து மிகைப்படுத்தலின் அளவு மாறுபடும் என்று கூறினார். ‘ஸ்டார் படங்களில், ரசிகர்களை மகிழ்விக்கும் தருணங்களை பெரிதுபடுத்துகிறோம் என்றார்.

தனது திரைப்பட அனுபவத்தைப் பற்றிக் கூறிய  ஸ்ரீகர் பிரசாத், ஒவ்வொரு அனுபவமும் இன்னொரு அனுபவத்திற்கு இட்டுச் செல்கிறது என்றார். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று அனுபவம் கற்றுக்கொடுக்கிறது. ஒவ்வொரு முறையும் இது ஒரு கற்றல் அனுபவமாக இருக்க வேண்டும். இது முடியாது போலிருக்கிறது என்று கை விட்டு விடுவது மிகவும் எளிதானது. ஆனால் இலக்கை நோக்கி உழைத்து அதை அடைவது மிகவும் சவாலானது என்று அவர் கூறினார்.

இளம் திரைப்பட இயக்குநர்கள்  எடிட்டிங் மேஜையில் அமரும் வரையில் படத்தின் ஒரு காட்சியை வெட்டுவது என்பதை கற்பனை செய்து பார்க்க முடியாது. பல இயக்குனர்களுக்கு எடிட்டிங் அறை அனுபவம் இல்லை. முன்னதாக, திரைப்பட இயக்குநர்கள் தங்கள் இயக்கத்தை சிறப்பாகச் செய்ய அந்த அனுபவத்தைப் பெறுவது கட்டாயமாக இருந்தது. இப்போது, படம் எடிட்டிங் அறைக்கு வருவதற்கு முன்பே பல மென்பொருள்களின் உதவியுடன் இன்னும் அதிகமாகத் திருத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது, ஆனால் சரியான விஷயத்தைப் பெறுவது கடினமாக உள்ளது என்று தற்போதைய நிலையை அவர் விளக்கினார்.

படத்தின் வெற்றிக்கும், சிறப்புக்கும் படத்தொகுப்பு மிகவும் முக்கியமானது என்று கூறிய பிரசாத், சில அமைதியான காட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்துவதும், பின்னணி இசையுடன், வேறு உணர்ச்சியை ஏற்படுத்துவதும் உண்டு என்றார்.

பாடல்களை படமாக்கும்போது எதை மனதில் கொள்ள வேண்டும் என்ற பார்வையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், 'பாடல்கள் எப்போதுமே திரைப்பட வரலாற்றின் ஒரு பகுதியாகும், மேலும் இது காட்சி உயர்வைக் கொடுக்கப் பயன்படுகிறது. முன்பெல்லாம் பாடல் வரிகள் கதையின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது நிலைமை மாறி படத்தின் பாடல்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவிட்டது’ என்றார்.

கிளைமாக்ஸ் படத்தின் உச்சக்கட்ட காட்சிக்கான செயல்முறை குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீகர் பிரசாத், 'கிளைமாக்ஸ் கதையின் உச்சத்தை அடைவதற்கான  ஒரு பெரிய பங்கை வகிக்கிறது. க்ளைமாக்ஸ் சரியில்லை என்றால் படம் முழுமையடையாது. துரதிர்ஷ்டவசமாக இந்திய சினிமாவில், இரண்டு கிளைமாக்ஸ்கள் உள்ளன, ஒன்று இடைவேளையில் மற்றொன்று இறுதியில். சில சமயங்களில் முதல் பாதி இரண்டாம் பாதியை விட சிறப்பாக இருக்கும். க்ளைமாக்ஸ் என்பது படத்தின் கடைசிக் காட்சி என்பதால் பார்வையாளர்கள் அதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்’ என்று கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...