100 வயதான நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம்
அஹமதாபாத்திலுள்ள UN மேத்தா நெஞ்சக நோய் மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் முதுமை காரணமாக ஹீராபென் மரணமடைந்துள்ளார். 100 வயதான தன் தாயார் ஹீராபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் மாலை மருத்துவமனைக்குச் சென்று தாயாரின் உடல்நிலை குறித்து விசாரித்தார். ஹீராபென்னின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் பிரதமரிடம் விளக்கினர். தொடர்ந்து நேற்று மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஹீராபென் மோடி குணமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு என்ன பிரச்சனைகள் இருந்ததென்பது குறித்தோ எத்தகைய சிகிச்சை முறைகள் அளிக்கப்பட்டு வருகிறதென்பது குறித்தோ மருத்துவமனை சார்பில் வெளியில் தெரிவிக்கப்படாத நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சையில் அவரது உடல்நிலை சீராக இருந்த நிலையில், பல
தலைவர்கள் நலம்பெற வேண்டினர், இன்று அதிகாலை 3.39 மணிக்கு, சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
அவரது மறைவுக்கு பிரதமர் நறேந்திர மோடி தனது தாயார் மறைவு குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது. "ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு இறைவனின் காலடியை சேர்ந்துள்ளதாக அவர் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். அர்ப்பணிப்பான வாழ்க்கையை தன் தாயாரிடம் உணர்ந்ததாக மோடி மேலும் குறிப்பிட்டுள்ளார்.பிரதமர் தனது தாயாருக்கு அஞ்சலி
நூற்றாண்டு கண்ட தனது தாயின் ஆன்மா இறைவனின் பாதங்களில் அமைதி அடைந்துள்ளது என்றார் பிரதமர் திரு.நரேந்திர மோடி.
திருமதி ஹீராபென் இன்று காலமானதையடுத்து கடவுளின் திருமூர்த்தி ஸ்வரூபமாகிய அவருடைய இறையம்சம் கொண்ட வாழ்க்கைப் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியாகவும், முக்கியத் தத்துவங்களுக்கு தனது வாழ்வை அர்ப்பணித்ததையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.
தனது நூற்றாண்டு பிறந்தநாளில் ஞானத்தோடு செயல்பட வேண்டுமென்றும், பரிசுத்த வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறிய அறிவுரைகளை பிரதமர் நினைவு கூர்ந்தார்.
பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“மேன்மை பொருந்திய நூற்றாண்டு கண்ட ஆன்மா இறைவனின் பாதங்களில் இளைப்பாறுகிறது. இறையம்சம் கொண்ட அவர் வாழ்க்கைப் பயணம், தன்னலமற்ற கர்மயோகி செயல்பாடுகள் மற்றும் முக்கியத் தத்துவங்களுக்கு தனது வாழ்வை அர்ப்பணித்தார்.
அவரது நூற்றாண்டு பிறந்தநாளில் அவரை நான் சந்தித்தபோது, ஒன்றை குறிப்பிட்டுச் சொன்னார். அதாவது அறிவாற்றலுடன் பணிபுரிய வேண்டுமென்றும், தூய்மையான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்”.பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள திரு அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மதிப்பிற்குரிய ஹீரா பா அவர்களின் மறைவுச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. ஒரு மனிதரின் வாழ்வில் முதல் நண்பரும் ஆசிரியரும் தாய்தான், ஒருவரின் தாயை இழந்த வலி சந்தேகத்திற்கு இடமின்றி மிகப்பெரிய வலியாகும் என்று கூறியுள்ளார்.
தனது குடும்பத்தைப் பாதுகாத்து வளர்ப்பதற்காக ஹீரா பா எதிர்கொண்ட போராட்டங்கள் அனைவருக்கும் வழிகாட்டக் கூடியவை. அவரது தியாகம் நிறைந்த துறவு வாழ்க்கை என்றும் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும். இந்தத் துயரமான நேரத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நாடு துணைநிற்கிறது. கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனைகள் பிரதமருக்காக உள்ளன. ஓம் சாந்தி என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.பிரதமர் திரு நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு, மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திரு தர்மேந்திர பிரதான், வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தாயைப் போல் யாரும் இல்லை என்று கூறியுள்ளார். துறவு மனப்பான்மையுடனும், கர்மயோகியாகவும் வாழ்ந்த பிரதமரின் தாயார் ஹீராபென்னுக்கு அஞ்சலி செலுத்துவதாக கூறியுள்ள அவர், இது துக்கமான நேரம் என்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக நாடே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்."
கருத்துகள்