நடப்பு 2022-23-ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாவது வேலைவாய்ப்பு முகாமின் டிசம்பர் 2022 முதலாவது நாளின் முடிவில் சென்னை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவத்தைச் சேர்ந்த 445 பேர் வேலைவாய்ப்பைப் பெற்றனர்
நடப்பு 2022-23-ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாவது வேலைவாய்ப்பு முகாமின் டிசம்பர் 2022 முதலாவது நாளின் முடிவில் சென்னை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவத்தைச் சேர்ந்த 445 பேர் வேலைவாய்ப்பைப் பெற்றனர். கடந்த ஆண்டில் 407 மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெற்ற நிலையில்,
இந்த ஆண்டு 10 சதவீதம் பேர் அதிகமாக வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். இதில் 25 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேலான ஊதியத்தில் வேலைவாய்ப்பு கிடைத்தது.
4 நிறுவனங்களின் மூலம், மொத்தம் 15 மாணவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைத்தது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1,722 மாணவர்கள் நடப்பு 2022-23-ஆம் கல்வி ஆண்டில் வேலைவாய்ப்பு முகாமிற்கு பதிவு செய்திருந்தனர். இதில் பங்கேற்ற மொத்தம் 331 நிறுவனங்கள் பதிவு செய்திருந்தன. அவர்கள் 722 மாணவர்களை பணிக்குத் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
கருத்துகள்