பார்வையற்றோருக்கான டி-20 உலகக் கோப்பையை வென்ற
இந்திய கிரிக்கெட் அணியினருடன் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் உரையாடினார்
பார்வையற்றோருக்கான டி-20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினரை புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் இன்று சந்தித்து அவர்களுடைய வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்தார். டிசம்பர் 17, 2022 அன்று
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற டி-20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணி 120 ரன் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வென்றது.தொடர்ந்து 3-வது முறையாக டி-20 உலகக் கோப்பையை வென்றுள்ளது நாட்டிற்கு பெருமைமிக்க தருணமாகும். முன்னதாக, கடந்த 2012-ல் மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இந்தியா கோப்பையை வென்றது. பார்வையற்றோருக்கான 3 டி-20 உலகக் கோப்பைப் போட்டிகளையும் இந்தியா நடத்தியது.
கருத்துகள்