சீனாவை உலுக்கிவரும் புதிய வகை கொரோனா.
சீனாவில் ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு புதிய வடிவில் உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை தகவல்.
உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இது அதிகபட்ச எண்ணிக்கையாகும். இந்த நிலையில் இந்தியாவில் ஆக்சிஜன் சிலிண்டர்களைத் தயாராக வையுங்களென அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களை தயாராக வைத்துக்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது
ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பை மாநில அரசுகள் உறுதி செய்து கொள்ளுமாறும் மத்திய சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது
புதிய வகை கொரோனா திரிபு பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசின் அறிவுறுத்தல் மீண்டும் ஒரு பாதி்ப்புகளை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் வருகிறது.மத்திய சுகாதாரத்துறையின் அமைச்சர் மன்சுக் மாண்டவியா டெல்லியில் நடத்திய நிலையில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் கொரோனா நிலைமை பற்றி டெல்லியில் அவசர ஆலோசனை செய்தார்.
இந்த நிலையில், சர்வதேச விமானத்தின் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவு செய்ததில் முக்கியமாக வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சனிக்கிழமை முதல் கொரோனா தடுப்பு பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மத்திய விமானப் போக்குவரத்து துறைக்கு, சுகாதாரத்துறையின் செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியதில்:
வெளிநாடுகளிலிருந்து சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளில் இரண்டு சதவீதத்தினருக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும். மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் பயணிகளை அவர்களின் நாடுகளின் அடிப்படையில் விமான நிறுவனங்களே தேர்வு செய்யலாம். அந்தப் பயணிகளிடமிருந்து மாதிரிகளைச் சேகரித்த பின்னரே விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும். பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், அந்த மாதிரிகளை மரபணு சோதனைக்காக அனுப்பி வைக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்