டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் 66 வது நினைவுநாளில் பிரதமர் மரியாதை
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவுநாளில், நமது நாட்டுக்கு அவர் ஆற்றிய சிறப்பான சேவையை நினைவுகூர்ந்து பிரதமர் திரு.நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“மகாபரிநிர்வாண் தினத்தில், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நமது நாட்டுக்கு ஆற்றிய சிறப்பான சேவையை நினைவுகூர்ந்து நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது போராட்டங்கள் லட்சக்கணக்கானோருக்கு நம்பிக்கையை அளித்தது. மிக விரிவான அரசியல் சாசனத்தை இந்தியாவுக்கு அளிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஒருபோதும் மறக்க இயலாதவை”.பாரத ரத்னா டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு நாளில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் மரியாதை
இந்தியாவின் அரசியல் சாசனத்தை கட்டமைத்த பாரத ரத்னா டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் மறைந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து, மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் மரியாதை செலுத்தியுள்ளார்.
சமூக சீர்திருத்தவாதி என்ற வகையில் நாட்டு நிர்மாணத்தில் அவரது பங்களிப்பை ஒருபோதும் மறக்க இயலாது என அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“இந்தியாவின் அரசியல் சாசனத்தை கட்டமைத்தவரும், பெரும் சமூக சீர்திருத்தவாதியுமான, பாரத ரத்னா திரு.டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில் அவருக்கு பணிவான மரியாதை. நாட்டின் மேம்பாட்டுக்கான அவரது பங்களிப்பை நாடு ஒருபோதும் மறக்காது”.சென்னை துறைமுகத்தில் டாக்டர் பி ஆர் அம்பேத்கார் அவர்களின் 66வது நினைவு நாள் நிகழ்வு
சென்னை துறைமுகத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் துறைமுக வளாகத்தில் அமைந்திருக்கும் (சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரில்) டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அங்கே அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த அன்னாரின் புகைப்படத்திற்கும் மற்றும் துறைமுகத்தின் உள்ளே அம்பேத்கர் துறையில் நிறுவப்பட்டு இருக்கும் அன்னாரின் மார்பளவு சிலைக்கும், சென்னை துறைமுக தலைவர் திரு சுனில் பாலீவால், ஐஏஎஸ், துறைமுக துணைத்தலைவர் திரு எஸ் பாலாஜி அருண்குமார், ஐஆர்டிஎஸ், திரு.எஸ்.முரளிகிருஷ்ணன், ஐடிஏஎஸ், துறைமுக செயலாளர், திரு இந்திரனில் ஹசரா, துறை தலைவர்கள் திரு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, திரு ஜெயசிம்ஹா, திரு மில்டன், திரு ரமனமூர்த்தி, திரு கிருபானந்தசாமி மற்றும் உயர் அதிகாரிகள் தொழிலாளர்கள் திரளாக கலந்துகொண்டு அன்னாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கம் உள்ளிட்ட நாடு முழுவதும் பல இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கருத்துகள்