தமிழ்நாடு அமைச்சராக சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்றப் பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் 2019-ஆம் ஆண்டு முதல் தீவிரமான அரசியலில் ஈடுபட்ட நிலையில் திரைப்படத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்தார் உதயநிதி ஸ்டாலின்.திமுக இளைஞரணி செயலாளராக கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார் திராவிட மாடல் அமைச்சரவையில் இடம் தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்
ஆளுநர் ஆர்.என்.ரவி,முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்
பதவியேற்கும் அமைச்சர்களை ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 34 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை 2021 ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டுகள் கடந்து அமைச்சரவை விரிவாக்கம் நடந்ததன் அடிப்படையில் தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், முதல்வர் மு.க ஸ்டாலின் மகனுமான உதயநிதிக்கு அமைச்சரவையில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஒதுக்கப்பட்டது.
அத்துடன் பல்வேறு அமைச்சர்களின் பொறுப்புகள் மாற்றப்பட்டது தொடர்பாக வெளியான அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கையின்படி நான்கு அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பணி ஐ.பெரியசாமியிடம் வழங்கப்பட்டுள்ளது.அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை, பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆர்.காந்தி வசம் இருந்த கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் காந்திக்கு பூதானம் மற்றும் கிராம தானம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிதாய் அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையுடன் செயலாக்கம், வறுமை ஒழிப்பு, கிராமப்புற கடன் திட்டத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்போர் எண்ணிக்கை 35 ஆக உள்ளது.அமைச்சரவை விரிவாக்கத்துடன் சில மூத்த அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டுள்ளன. இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் அமைச்சராக இருந்த சிவ.வீ.மெய்யநாதன், சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை கவனிப்பார். சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை துறையை உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கே.ஆர்.பெரியகருப்பன் கவனித்த வறுமை ஒழிப்பு இலாக்காவும் உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதன்படி ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சி துறையும் ,கே.ஆர்.பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத் துறையும் , வனத்துறை அமைச்சரான இராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறைக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் வனத்துறை அமைச்சராகவும் முத்துச்சாமியிடம் இருந்து சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை, பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஆர்.காந்தி வசமிருந்த கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஆர்.காந்திக்கு பூதானம் மற்றும் கிராம தானம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.துறை வாரியான தரவரிசை சீனியாரிட்டி (Inter-se-seniority) அடிப்படையில் குழு புகைப்பட நிகழ்வு நடைபெற்றது. ஆளுநர் - முதல்வருடன் அமைச்சர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளும்போது துறைவாரியான முக்கியத்துவத்தின் அடிப்படையில் அமரவைக்கப்படுவார்கள். குழு புகைப்படத்திற்காக புரோட்டோகால் படி அமைச்சர்களை, அதிகாரிகளே அமரவைத்தனர். அந்த அடிப்படையிலேயே, அமைச்சரவை தரவரிசை சீனியாரிட்டியில் 10வது இடம் பிடித்த உதயநிதி ஸ்டாலின், முதல் முறை அமைச்சரானதுமே, குழு புகைப்படத்தில் முன்வரிசையில் அமர்ந்தார்.அமைச்சரவை சீனியாரிட்டியில் 16வது இடமுள்ள கீதா ஜீவன், பதவியேற்பு நிகழ்வுக்கு வராத காரணம் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பின் காரணமாக வராமல் தூத்துக்குடியிலிருந்தார் வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.தரவரிசை சீனியாரிட்டி பட்டியலில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 23 வதிடத்திலும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு 26 வதிடத்திலும் உள்ளனர். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 30 வதிடத்தில் உள்ளார். 35 அமைச்சர்கள் உள்ள இந்தப் பட்டியலில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கடைசியில் உள்ளார்.
கருத்துகள்