இந்தியா என்னில் ஒரு பகுதி, நான் எங்கு சென்றாலும் அதை என்னுடன் எடுத்துச் செல்கிறேன்"பத்ம பூஷன் விருதைப் பெற்ற சுந்தர் பிச்சை,
அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சித்துவிடம் இருந்து மதிப்புமிக்க பத்ம பூஷன் விருதைப் பெற்ற கூகுள் மற்றும் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி திரு சுந்தர் பிச்சை,
"இந்தியா என்னில் ஒரு பகுதி, நான் எங்கு சென்றாலும் அதை என்னுடன் எடுத்துச் செல்கிறேன்" என்று கூறினார்.
வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவில் இந்திய-அமெரிக்கரான பிச்சைக்கு 2022 ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை இந்த ஆண்டின் தொடக்கத்தில் விருது பெற்ற 17 பேரில் முக்கியமானவராவார் .
வெள்ளிக்கிழமை சான் பிரான்சிஸ்கோவில் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதைப் பெற்றார். நமது பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் சார்பில் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.
கருத்துகள்