மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக, தேசியப் பேரிடர் மீட்பு படை குழுவினர் தஞ்சாவூரில் தயார் நிலையில் உள்ளனர்.
தென்கிழக்கு வங்காள வுரிகுடாக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற பின் புயலாக வலுவடைந்து வட தமிழ்நாடு - தெற்கு ஆந்திரப்பிரதேசமிடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டாஸ் என பெயரிடப்பட்ட புயல்
எதிரொலியாக 8 ஆம் தேதி, 09 மற்றும் 10 ஆம் தேதி தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிகப்பலத்த கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. கடல் பகுதிக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதனிடையே, புயல் எச்சரிக்கை காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு தேசியப் பேரிடர் மீட்பு படையினர் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு தலா 25 பேர் அடங்கிய குழுவினர் அனுப்பப்பட்டுள்ளதன்படி தஞ்சாவூர் மாவட்டத்துக்கு எஸ்.ஐ., அலோக் குமார் சுக்லா, பாட்டீல் ஆகியோரது தலைமையிலான 25 பேர் அடங்கிய குழுவினர் வெள்ள தடுப்பு மீட்பு உபகரணங்கள், தகவல் தொடர்பு சாதனங்களுடன் வந்தனர். அந்தக் குழுவினர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்த பின்னர் அவர்களுக்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து எடுத்துரைத்து தயாராக இருக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம்,மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் சுமார் 150 விசைப்படகுகள், 32 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுபடகுகள் பாதுகாப்பாக கரையில் மீனவர்கள் நிறுத்தி வைத்தனர்.வரும் வெள்ளிக்கிழமை திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் .
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 7ஆம் தேதி மாலை புயலாக வலுவடையக் கூடும். இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 08 மற்றும் 09-ஆம் தேதிகளில் வடதமிழ்நாடு-புதுச்சேரி, அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப்பிரதேச கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 8 ஆம் தேதி தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழ்நாடு மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
9ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுச்சேரியில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்; ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்
10ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து 07.12.2022 அன்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 08.12.2022 அன்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து 07.12.2022 அன்று காலை மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், 08.12.2022, 09.12.2022 தேதிகளில் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
தமிழ்நாடு- புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப்பிரதேச கடலோரப்பகுதிகள், வட இலங்கை கடலோரப்பகுதிகள் : சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் 08.12.2022 அன்று காலை தொடங்கி காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து 08.12.2022 மாலை முதல் 09.12.2022 மாலை வரை மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், 09.12.2022 மாலை முதல் 10.12.2022 காலை வரை மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் வேகத்தில் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 10.12.2022 மாலை மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
08.12.2022 மாலை முதல் 09.12.2022 மாலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 09.12.2022 மாலை முதல் 10.12.2022 காலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கருத்துகள்