ரூபாய் எட்டாயிரம் லஞ்சம் வாங்கிய நன்னிலம் வருவாய் வட்டாட்சியர் கைது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வருவாய் வட்டாட்சியரையும்
ரூபாய். பத்தாயிரம் லஞ்சம் பெற்றதாக, ஜீப் ஓட்டுநரையும், பொறையாறில் ரூபாய்.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரையும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம்வருவாய் வட்டாட்சியராகப் பணியாற்றுபவர் லட்சுமிபிரபா(வயது49). இவர், நேற்று முன்தினம் மாலை பேரளம் பகுதியில் எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து, அதிகப் பாரம் இருப்பதாகக் கூறி லாரியை விட மறுத்ததுடன், அதை ஓட்டிவந்த லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் குமாரிடம் ரூபாய்.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது. தன்னிடம் பணம் இல்லை என குமார் தெரிவித்ததால், லாரியின் சாவியை எடுத்துக்கொண்ட லட்சுமி பிரபா, மறுநாள் தன்னை சந்தித்து பணத்தைக் கொடுத்துவிட்டு, லாரி சாவியை பெற்றுச் செல்லுமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
லஞ்சம் பெற்றதாக நன்னிலம் வட்டாட்சியர் கைது: பொறையாறில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சிக்கினார்
திருவாரூரில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக நன்னிலம் வட்டாட்சியர், ஜீப் ஓட்டுநரையும், பொறையாறில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரையும் ஊழல் தடுப்புத் துறையினர் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வருவாய் வட்டாட்சியராகப் பணி செய்து வருபவர் லட்சுமிபிரபா(வயது 49). இவர், நேற்று முன்தினம் மாலை பேரளம் பகுதியில் எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து, அதிக எடை இருப்பதாகக் கூறி லாரியை விட மறுத்ததுடன், அதை ஓட்டிவந்த லாரி உரிமையாளர் குமாரிடம் ரூபாய்.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது. தன்னிடம் பணமில்லை என குமார் தெரிவித்ததால், லாரியின் சாவியை எடுத்துக் கொண்ட லட்சுமி பிரபா, மறுநாள் தன்னை சந்தித்து பணத்தைக் கொடுத்துவிட்டு, லாரி சாவியை பெற்றுச் செல்லுமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் குமார் புகார் தெரிவித்தார். பின்னர், லஞ்ச ஒழிப்புத் துறையினரின் அறிவுரைப்படி, நேற்று முற்பகல் 11 மணியளவில் லட்சுமிபிரபாவை குமார் தொடர்பு கொண்டு, பணத்தை எங்கு கொண்டு வந்து தரவேண்டும் எனக் கேட்டார். அதற்கு, தான் திருவாரூர் தபால் நிலையத்தில் இருப்பதாகவும், அங்கு வந்து பணத்தை தரும்படியும் லட்சுமிபிரபா கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, திருவாரூர் தபால் நிலையத்துக்கு அரசு சாட்சியுடன் சென்ற குமாரிடமிருந்து பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை லட்சுமிபிரபா பெற்றுக் கொண்ட போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், லட்சுமி பிரபாவை கைது செய்தனர். மேலும், அதற்கு உடந்தையாக இருந்த ஜீப் ஓட்டுநர் லெனின்(வயது 35) என்பரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் பொறை யாறு பார்வதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மனோ கரன்(வயது 57). தனது காலிமனைக்கு பட்டா மாறுதல் கேட்டு, தரங்கம்பாடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். வட்டாட்சியர் மற்றும் மயிலாடு துறை கோட்டாட்சியர் ஆகியோர் பட்டா மாறுதலுக்கான உத்தரவைப் பிறப்பித்தனர். அந்த உத்தரவு நகலை குமாருக்கு வழங்க, கோட் டாட்சியரின் நேர்முக உதவியாளர் மலர்விழி(வயது 57) ரூபாய்.20 ஆயிரம் லஞ்சமாககா கேட்டதாகக் தெரிகிறது.
இதுகுறித்து நாகபட்டிணம் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் மனோகரன் புகார் அளித்ததையடுத்து, ஊழல் தடுப்புத் துறையினரின் அறிவுரைப்படி, பொறையாறு சிவன் வடக்கு வீதியிலுள்ள மலர்விழியின் வீட்டுக்கு நேற்று அரசு சாட்சியுடன் சென்ற மனோகரன், அங்கு பினாப்தலின் இரசாயனபஹ பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை மலர்விழியிடம் கொடுத்தார். அதை மலர்விழி வாங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் நந்தகோபால், ஆய்வாளர்கள் ரமேஷ்குமார், அருள்பிரியா மற்றும் ஊழல் தடுப்புத் துறையினர். மலர்விழியை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
மேலும், அவரது கைப்பையில் வைத்திருந்த கணக்கில் வராத ரூபாய் .30 ஆயிரம் பணம், பட்டா நகல்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்த நிலையில் விசாரணை நடத்தினர். மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகம் காட்டூர் வின்நகரில் உள்ளது.
திருவெறும்பூர் வட்டம் காட்டூர் அருகில் பாப்பாக்குறிச்சியில் வசிக்கும் சுப்பிரமணியனின் மகன் அசோக்குமார். நிலங்கள் வாங்கி விற்பனை செய்கிறார். பாப்பாக்குறிச்சியில் 21 சென்ட் விவசாய நிலத்தை வாங்க முடிவு செய்த நிலையில். பத்திரப்பதிவு செய்ய சார் பதிவாளர் பாஸ்கரனை அணுகியுள்ளார்.
அந்த நிலத்தை அரசு நில வழிகாட்டி மதிப்பீட்டின் படி சதுர அடி மதிப்பில் மட்டுமே பதிவு செய்ய முடியுமென்று சார்பதிவாளர் கூறியுள்ளார். மேலும் விவசாய நிலமாக புஞ்சை என 47(A) படி பதிவு செய்ய வேண்டுமானால் தனக்கு ரூபாய்.ஒரு லட்சம் லஞ்சமாகக் கொடுத்தால் தான் விவசாய புஞ்சை நிலமாக மாற்றம் செய்து ஸ்டாம்ப் டூட்டி குறைத்துப் பதிவு செய்ய முடியுமென்று தெரிவித்ததால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அசோக்குமார் திருச்சிராப்பள்ளி லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டனிடம் புகாரளித்தார். அதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த ஆலோசனையின்படி நேற்று அரசு சாட்சி முன்னிலையில் சார் பதிவாளர் பாஸ்கரனிடம், ரூ.ஒரு லட்சத்தை அசோக்குமார் கொடுத்த.
பணத்தை பாஸ்கரன் பெற்ற போது, அவரை அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புத் துறையினர் பிடித்துக் கைது செய்தனர். மேலும் அதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள்
சார் பதிவாளர் பாஸ்கரன் பணியிட மாறுதல் காரணமாக ஆறு மாதங்களுக்கு முன்னர் திருவெறும்பூர் சார் பதிவாளராகப் பொறுப்பேற்ற நிலையில், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்ததாகவும், அலுவலகத்தில் அவர் இருக்காமல், அவரது இருக்கையில் வேறு யாரையாவது அமர வைத்துவிட்டு வெளியே சென்றுவிடுவாரென்றும் புகார் இருந்துதாகத் தெரிவித்தனர்.
லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் கைது செய்யப்பட்ட நிலையில் இவர் போல இலஞ்சம் பெறும் பலருக்கும் அலுவலகத்தில் அச்சம் நிலவுகிறது. மேலும் ரூபாய்.500 லஞ்சம் பெற்ற வழக்கில் உதகமண்டலம் வருவாய் ஆய்வாளருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூபாய்.6 ஆயிரம் அபராதமுமஹ விதித்து உதகமண்டலம் ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றியவர் தாண்டவ நடராஜன். 2007-ஆம் ஆண்டு உதகமண்டலத்தைச் சேர்ந்த ஜான்பாஸ்கோ வாரிசுச் சான்றிதழுக்காக உதகமண்டலம் வட்டாட்சியர் அலுவலத்தில் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தைப் பெற்ற கிராம வருவாய் அலுவலர், அதைப் பரிந்துரை செய்து வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பியுள்ளார். வருவாய் ஆய்வாளராக இருந்த தாண்டவ நடராஜன், ஜான்பாஸ்கோவிடம் சான்றிதழ் அளிக்க வேண்டுமானால் ரூபாய்.500 லஞ்சமாகத் தரவேண்டும் எனக் கேட்டுள்ளார். இதனால், ஜான்பாஸ்கோ ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடரிடம் புகார் அளித்ததன் பேரில் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர், ஜான்பாஸ்கோவிடம் பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய பணத்தை வழங்கி, வருவாய் ஆய்வாளரிடம் வழங்கக் கூறினர். வருவாய் ஆய்வாளர் தாண்டவ நடராஜனிடம், அரசு சாட்சி முன்னிலையில் ஜான்பாஸ்கோ பணத்தை வழங்கும் போது, ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தாண்டவ நடராஜனைக் கைது செய்தனர்.
அது தொடர்பான வழக்கு உதகமண்டலத்திலுள்ள ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதி சி.ஸ்ரீதர், குற்றவாளியான தாண்டவ நடராஜனுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையும் . மேலும், ரூபாய்.6 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார். ரூ.500 லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளருக்கு 14 ஆண்டுகளுக்குப் பின்னர் 9 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்படட நிகழ்வு அரசுத் தரப்பில் பணியாளர்கள் பலருக்குப் பயம் நிலவும் படி செய்தது.
கருத்துகள்