எட்டாம் வகுப்பு வரை கல்வி பயிலும் மத மற்றும் மொழி சிறுபான்மையின மாணவர்களுக்கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகை நிறுத்தம்
முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வி பயிலும் மத மற்றும் மொழி சிறுபான்மையின மாணவர்களுக்கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகை நிறுத்தம்.
ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் மட்டும் 2022-2023 ஆம் ஆண்டிலிருந்து சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் உதவித்தொகைக்குத் தகுதி பெறுவார்கள்.சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கல்வி உதவித்தொகைத் திட்டத்திற்கிணங்க இந்த நடவடிக்கை என தேசிய உதவித்தொகை இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு கூறுகிறது. கல்வி உரிமைச் (ஆர்.டி.இ) சட்டம், 2009, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயத் தொடக்கக் கல்வியை (ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை) வழங்குவதை அரசு கட்டாயமாக்குகிறது. அதன்படி, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பலன் பெறுவார்கள். அதே போல், 2022-23 ஆம் ஆண்டு முதல், சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் கவரேஜ் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு மட்டுமே வழங்கப்படும்' என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான விண்ணப்பங்களை மட்டுமே இன்ஸ்டிடியூட் நோடல் அதிகாரி (INO) மற்றும் மாவட்ட நோடல் அதிகாரி (DNO) மற்றும் மாநில நோடல் அதிகாரி (SNO) சரிபார்க்கலாம்' என அறிவிப்பு கூறுகிறது.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் சிறுபான்மை விவகாரங்களின் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வெளியிட்ட அறிக்கையில், 2014-15 ஆம் ஆண்டுக்கு முன்பு 3.03 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்ட நிலையில், 2014-15 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடு முழுவதும் சிறுபான்மையின மாணவர்களுக்கு 5.20 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
2014-15 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுக்கு இடையில், இஸ்லாமிய மாணவர்களுக்கு 3,36,11,677, கிறிஸ்தவ மாணவர்களுக்கு 53,13,905, சீக்கிய மாணவர்களுக்கு 35,90,880, பௌத்த மாணவர்களுக்கு 12,98,637 மற்றும் ஜெயின் மாணவர்களுக்கு 4,58,665 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதென அமைச்சர் கூறினார். அதனால் மத்திய அரசுக்கு ரூபாய்.9057.08 கோடி செலவாகும்.
சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து உதவித்தொகைகளின் மொத்தச் செலவு அதே காலகட்டத்தில் ரூ.15,154.70 கோடியாகும்.
சிறுபான்மையினப் பள்ளி மாணவர்களுக்கு 2022-23 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்காக அமைச்சகம் ரூ.1,425 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு சிறுபான்மையின மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகையை கட்டுப்படுத்தும். அரசாங்கத்தின் அறிவிப்பு,
கருத்துகள்