மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள ஸ்ரீ கோவர்தன் நாத் ஜி கோவிலுக்கு சென்று, பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத்தின் மெஹ்சானாவில் உள்ள ஸ்ரீ கோவர்தன் நாத் ஜி கோவிலுக்கு சென்று, கோவில் வளாகத்தில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மெஹ்சானாவில் ஷெத் ஜி.சி. மேல்நிலைப் பள்ளியின் 95 ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் திரு அமித் ஷா பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். உள்துறை அமைச்சர் காந்திநகரில் உள்ள மஹுதி ஜெயின் கோயிலுக்கும் சென்றார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், 95 ஆண்டுகளாக ஒரு நிறுவனம் தடையின்றி வெற்றிகரமாக இயங்கி வருவது, அந்த நிறுவனம் திறமையான முறையில் நிர்வகிக்கப்பட்டு வருவதை எடுத்துக்காட்டுகிறது. எந்தவொரு நிறுவனத்தையும் நடத்துவதற்கு விடாமுயற்சி, கடின உழைப்பு, ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம் என்று கூறினார். பள்ளியின் அறங்காவலர் குழு 95 ஆண்டுகளாக எந்த இடையூறும் இல்லாமல் இந்த நிறுவனத்தை வெற்றிகரமாக நிர்வகித்து 35,000 க்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த பாடுபட்டுள்ளது, அத்தகைய முயற்சியை விட பெரிய தர்மம் எதுவும் இருக்க முடியாது என்று திரு.ஷா கூறினார்.
95 ஆண்டு காலத்தில், இந்தக் கல்வி நிறுவனம் இரண்டு கல்விக் கொள்கைகளைக் கண்டுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். முதலாவதாக, ஆங்கிலேயர்கள் வகுத்த கல்விக் கொள்கை. இந்தக் கல்விக் கொள்கையில் சிந்தனை, ஆராய்ச்சி, தர்க்கம், அலசல், முடிவெடுக்கும் ஆற்றல், நீதி, தத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படாததால், சமூகத்தில் பல கேள்விகள் எழுந்துள்ளன. 2014 ஆம் ஆண்டில் நாட்டில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது என்றும், திரு நரேந்திர மோடியின் தலைமையின் மீது நாடு நம்பிக்கை வைத்து , அவர் நாட்டின் பிரதமரானார் என்றும் அவர் கூறினார். நரேந்திர மோடி பிரதமரான பிறகு, புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தார் என்றும், அடுத்த 25 ஆண்டுகளில் உலக அளவில் இந்தியா முதலிடத்தை எட்ட புதிய கொள்கை உதவும் என்றும் திரு. ஷா கூறினார். புதிய கல்விக் கொள்கையில் பல அடிப்படை மாற்றங்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், தாய்மொழியில் இரண்டாம் நிலை வரையிலான கல்வியை படிப்படியாக வழங்குவது மிகப்பெரிய மாற்றமாகும் என்று அவர் கூறினார்
புதிய கல்விக் கொள்கை, தாய்மொழியில் பேசுதல் மற்றும் சிந்திப்பதுடன், பகுத்தறிவு திறன், பகுப்பாய்வு, ஆராய்ச்சி மற்றும் தாய்மொழியில் அசல் சிந்தனை ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது, இந்தியாவில் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஒரு நபர் தனது தாய்மொழியில் அசல் சிந்தனையை வைத்திருப்பது மிகவும் முக்கியம் என்றும், அதை பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்து வருகிறார் என்றும் அவர் கூறினார்.
"சுதந்திரம் அடைந்த பிறகும், அடிமைத்தனத்தின் துர்நாற்றம் தொடர்ந்து வீசினால், சுதந்திரத்தின் வாசனை பரவாது" என்று அவர் கூறினார். நாட்டின் குடிமகன் கல்வியறிவு பெறாத வரை அவரது சொந்த மொழியில் சிந்தனைகளை வளர்க்கும் வரை, அவர் தன்னையும் தனது நாட்டையும் மதிக்க முடியாது. புதிய கல்விக் கொள்கையில், 5 + 3 + 3 மற்றும் 4 ஆண்டு கல்வி முறை தொடங்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் இந்த கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
கருத்துகள்