கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்
குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள செய்தியில் குறியிருப்பதாவது,
“நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பண்டிகையானது மொத்த மனிதகுலத்திற்கும் அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் சின்னமாக விளங்குகிறது. இந்த நாளில் இயேசு கிறிஸ்துவின் இரக்கம் மற்றும் தியாகத்தின் முக்கியத்துவத்தை நாம் நினைவுகூருவோம். கிறிஸ்துமஸ் பண்டிகை ஒருவரையொருவர் அன்புடனும், கருணையுடனும் நடத்த வழி காட்டுகிறது.
இயேசு கிறிஸ்துவின் தெய்வீக போதனைகளை நம் வாழ்வில் ஏற்றுக்கொள்ள உறுதிமொழி எடுப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.அதேபோல் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து
குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
"புனிதமான கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயேசு கிறிஸ்து அன்பு, பரிவு மற்றும் கருணை ஆகியவற்றின் வழியை நமக்குக் காட்டியுள்ளார். இது நமது வாழ்க்கையை நல்லொழுக்கம் உள்ளதாக்குகிறது. அத்துடன் சமூகத்தில் சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டுவருகிறது. இது உலகில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாம், இணக்கமான, சகிப்புத்தன்மையுடன் கூடிய மற்றும் அமைதியான சமுதாயத்திற்காகப் பாடுபடுவோம்."
இவ்வாறு தமது வாழ்த்துச் செய்தியில் குடியரசுத் துணைத் தலைவர் கூறியுள்ளார். அதேபோல் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, ஏசு கிறிஸ்துவின் உன்னதமான சிந்தனைகளை நினைவுகூர்ந்துள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
" கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! சிறப்பான இந்நாள் நமது சமூகத்தில் மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்க உணர்வை மேலும் வளர்க்கட்டும். ஏசு கிறிஸ்துவின் உன்னதமான சிந்தனைகளை நாம் நினைவுகூர்வோம்; சமூகத்திற்கு சேவை செய்வதை வலியுறுத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சென்னை, பெரம்பூர், டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் தாத்தாக்களுக்கு பரிசுகளை வழங்கினார், டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில் அருட்சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கினார். முதலமைச்சரின் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி.“சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேயப் பண்புகளின் விழாவாக அன்பைப் பரிமாறி, ஏழை எளியோருக்கு உதவும் திருநாளாக அமைந்துள்ள கிறிஸ்துமஸ் பெருவிழாவை மகிழ்ச்சியோடும் ஏற்றத்தோடும் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.சென்னை, மயிலாப்பூர் உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, அருட்தந்தை வின்சென்ட் சின்னதுரை ஆகியோர் முதலமைச்சரைச் சந்தித்து கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தார்கள். இதுபோல நாட்டின் பல பகுதிகளில் கிருஸ்மஸ் விழாக்கள் நடந்தன. காரைக்குடி மதர் சிறப்பு பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் புத்தாண்டு தினக் கொண்டாட்டம்
டிசம்பர் 24.ல் நடந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஆனந்தா அருட்கொடை மைய இயக்குனர் அருட்தந்தை R.S. இருதயராஜ் வருகை தந்தார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய விழாவில். பள்ளி நிர்வாக இயக்குனர் A. அருண்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பின்னர் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தன. சிறப்பு விருந்தினர் சிறப்புரையாற்ற பள்ளியின் நிர்வாக இயக்குநர்,சிறப்பு விருந்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இணைந்து கேக் வெட்டி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாற
மாணவர்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது, நிறைவாக பள்ளியின் ஆசிரியை P.அபிதா நன்றியுரை வழங்கிய பின் தேசிய கீதத்துடன் விழா இனிதாய் நிறைவுற்றது.
கருத்துகள்