பதிவுத்துறைச் சட்டத் திருத்தத்தை திறமையாக மற்றும் முறையாக அமல்படுத்த சுற்றறிக்கை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு
பத்திரப் பதிவுத்துறை அலுவலர்கள் ஆதரவில்லாமல் யாரும் மோசடி ஆவணங்களை பதிவு செய்ய முடியாது
ஆனால் சில ஊழல் சார்பதிவாளர்கள் சில மோசடிகளை சுய லாபநோக்கில் லஞ்சம் கிடைக்கிறதே என்பதற்காக தெரிந்தே பதிவு செய்கிறார்கள். அதற்கு நம்மிடமே பல ஆதாரங்கள் உண்டு. மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாச்சியர் இருவரும் மாவட்டப் பதிவாளருக்குத் தடையாணை விதித்து சில புல எண்களைப் பதிவுசெய்யக்கூடாது என உத்தரவு இருந்தும் மீறி பதிவு செயத சார்பதிவாளர் மற்றும் ஊழல் நபர்களுக்கு தண்டனை வருமா என்பதே பலரது வினாவாகும்,
மேலும் ஏற்கனவே பதிவுத்துறைத் தலைவர் மூலம் போடப்பட்ட சர்குலர் 67 மற்றும் 68 ,ஆகியவை மூலம் புகார் தாரர்களிடமும் அவர்கள் எதிரிகளிடமிருந்தும் விசாரணை என்ற பெயரில் அடித்த கொள்ளை அளவிடமுடியாத நிலையில், தற்போது இலஞ்ச இலாவண்யத்தில் மூழ்கிப்போன துறை என்றால் அது பதிவுத்துறை மட்டுமே. மேற்கூறிய தவறுகளுக்கு நடவடிக்கை எப்போது இந்த நபர்களுக்கு ?.என்ற நிலையில் தான் உள்ளது. தற்போது மோசடி ஆவணங்கள் உள்ளிட்ட பதிவுகளை ரத்து செய்ய மாவட்டப் பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ள சட்டத் திருத்தத்தை திறமையாக மற்றும் முறையாக அமல்படுத்தும் வகையில் அனைத்து மாவட்டப் பதிவாளர்களுக்கும் அரசின் சார்பில் சுற்றறிக்கை அனுப்ப பதிவுத்துறை தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதுகுறித்து விபரம் வருமாறு:-
கோயமுத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில், மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை இரத்து செய்ய கோரி மாவட்டப் பதிவாளருக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரை விசாரித்த மாவட்ட பதிவாளர், குறிப்பிட்ட அந்த ஆவணங்கள் மோசடியானவை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பித்த போதும்,
அதை ரத்து செய்வது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுகும் படி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டை விசாரித்த கோயமுத்தூரில் உள்ள பதிவுத்துறைத் துணைத் தலைவர், சென்னையில் உள்ள பதிவுத்துறை தலைவரிடம் முறையீடு செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், "பதிவுச் சட்டத்தில் 2022 ஆகஸ்ட் மாதத்தில் கொண்டுவந்த திருத்ததின் படி, மோசடியானவை என கண்டறியப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய மாவட்ட பதிவாளருக்கும், பதிவு துறை துணை தலைவருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது
எனக்கூறி, இருவரின் உத்தரவுகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், தமிழக அரசின் சட்டத்திருத்தம் குறித்து மாவட்டப் பதிவாளர் அறிந்து கொள்ளாமல் இருப்பது மிகவும் தீவிரமானது. அவருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம். தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்ததின் படி,
மோசடியாகப் பதியப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய மாவட்டப் பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ள சட்டத் திருத்தத்தை திறமையாக அமல்படுத்தும் வகையில் அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பும்படி, பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார். மத்திய பதிவுச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், ஆகஸ்ட் 16, 2022 முதல் அமலுக்கு வந்து விட்டது.
கருத்துகள்