உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது சம்பந்தமாக, மத்திய சட்ட அமைச்சகம் புதிய ஆட்சேபனை.
தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65 ஆகவும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62 ஆகும் . நாடு முழுதும் அதிக வழக்குகள் தேங்கிய நிலையில், நீதிபதிகள் ஓய்வு வயதை உயர்த்துவது குறித்து நீண்ட காலமாக பேசப்படுகிறது.பாரதிய ஜனதா கட்சியின் சுஷில்குமார் மோடி தலைமையிலான சட்டம், நீதி, பணியாளர்கள் நலனுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு இது குறித்து ஆய்வு செய்த பின் மத்திய சட்ட அமைச்சகம் தரப்பில் கூறப்படுவதாவது: நீதிபதிகள் ஓய்வு வயதை உயர்த்துவதை தனியாகப் பார்க்கக் கூடாது. பல்வேறு அம்சங்களுடன் இணைத்தே பார்க்க வேண்டும். ஓய்வு வயதை நீட்டித்தால், சரியாக செயல்படாத நீதிபதிகளுக்கும் அந்த சலுகை கிடைக்கும்; இது, நீதிமன்றத்தின் செயல்பாட்டைச் சீர்குலைக்கும். மேலும் நீதிபதிகள் நியமனம் தொடர்பான நடைமுறையில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆய்வு செய்ய வேண்டும். இவற்றுடன் இணைத்து ஓய்வு வயதை நீட்டிப்பது குறித்து ஆராயலாம்.
கீழமை நீதிமன்றங்களில் காலியாகும் இடங்களை நிரப்புவது, வழக்குகள் தேங்குவதை குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். தவிர பல்வேறு தீர்ப்பாயங்களுக்குத் தேவையான தலைவர்கள், உறுப்பினர்கள் கிடைக்காமல் போகும் அபாயமும் உண்டு.
நீதிபதிகள் ஓய்வு வயதை உயர்த்தினால், மத்திய - மாநில அரசு அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்டவையும் இதே கோரிக்கையை முன் வைக்கும் வாய்ப்புள்ளது. அதனால், அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து, இதில் முடிவுஎடுக்கலாம். என மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகளை நியமிக்கும், 'கொலீஜியம்' முறை தொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசு இடையே கருத்து மோதல் நிலவும் நிலையில், சட்ட அமைச்சகம் இவ்வாறு தெரிவித்துள்ளதுஉச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
"உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவதற்காக 2010 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (114 வது திருத்தம்) மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், அது பாராளுமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை மற்றும் 15 வது நாடாளுமன்ற மக்களவை கலைக்கப்பட்டதால் காலாவதியானது" என்று ரிஜிஜு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதில் தெரிவித்தார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 124(2) பிரிவின்படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65. அரசியலமைப்பின் 217(1) பிரிவின்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் 62 வயதில் ஓய்வு பெறுவார்கள். தொடக்கத்தில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 60, பின்னர் 1963. ஆம் ஆண்டில் 114 வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் 62 ஆக அதிகரித்தது. அரசியலமைப்பின் பிரிவு 124(7) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எந்த மன்றத்திற்கும் முன்பாகப் பணிபுரிவதைத் தடுக்கிறது, அதே நேரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு, அவர்கள் பணியாற்றியதைத் தவிர மற்ற உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் பயிற்சி பெற அனுமதிக்கும் வகையில் 1956 ஆம் ஆண்டு ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது.
1974 ஆம் ஆண்டில், சட்ட ஆணையத்தின் 58 வது அறிக்கை உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதிற்கு இடையே சமமான நிலையைக் கொண்டு வர பரிந்துரைத்தது. 2002 ஆம் ஆண்டில், நீதிபதி வெங்கடாசலயா அறிக்கை - அரசியலமைப்பின் செயல்பாட்டை மறுபரிசீலனை செய்வதற்கான தேசிய ஆணையத்தின் அறிக்கை - உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை முறையே 65 மற்றும் 68 ஆக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்தது.
இந்திய உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் இல்லை,
நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதித்துறை காலியிடங்களை கையாள்வதற்கான தீர்வாக நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பது பல தசாப்தங்களாக முன்வைக்கப்பட்டது
மாநிலங்களவையில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு
" ராஜ்யசபாவிற்கு எழுத்துப்பூர்வ பதில் மூலம் மேற்கூறிய தகவல் தெரிவித்த போதிலும் நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பது பல தசாப்தங்களாக முன்வைக்கப்படுகிறது. பணிபுரியும் நீதிபதிகள், பணி ஓய்வுக்குப் பிந்தைய பணியை நிறைவேற்று அதிகாரிகளிடம் இருந்து தேடுவதில்லை என்பதை உறுதிப்படுத்தும் சூழலிலும் இது விவாதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்