சென்னை நகர தெற்கு மண்டலத்தில் அஞ்சல் குறை தீர்ப்பு முகாம்
சென்னை நகர தெற்கு மண்டலத்தில் 28.12.2022 புதன்கிழமையன்று காலை 11 மணி அளவில் அஞ்சல் குறை தீர்ப்பு முகாம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகர தெற்கு மண்டல வரம்புக்கு உட்பட்டு செயல்படும் ஆழ்வார் திருநகர், ஆதம்பாக்கம், அடையாறு, அசோக்நகர், பெசன்ட் நகர், பொறியியல் கல்லூரி, கிண்டி தொழிற்பேட்டை, ஐஐடி, ஈஞ்சம்பாக்கம், கே கே நகர், கோடம்பாக்கம், கோட்டூர்புரம், மடிப்பாக்கம், நந்தம்பாக்கம், நந்தனம், நங்கநல்லூர், ஒக்கியம் துரைப்பாக்கம், பெருங்குடி, ஆர் ஏ புரம், ராஜ்பவன், சைதாப்பேட்டை, சாலிகிராமம், சோழிங்கநல்லூர், செயின்ட் தாமஸ் மவுண்ட், திருவான்மியூர், டிடிடிஐ, தரமணி, வடபழனி, வேளச்சேரி, விருகம்பாக்கம், மேற்கு மாம்பலம், ஆலந்தூர், சென்னை விமான நிலையம், கிண்டி வடக்கு, ஜாபர்கான்பேட்டை, காரப்பாக்கம், மடிப்பாக்கம் தெற்கு, மாம்பலம் ஆர்எஸ், மீனம்பாக்கம், நீலாங்கரை, நீலமங்கை நகர், பாலவாக்கம், பழவந்தாங்கல், ராஜாஜி பவன், ராம்நகர், ராமாபுரம், சாஸ்திரி நகர், டைடல் பார்க், வளசரவாக்கம், வால்மீகி நகர், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் ஆகிய தபால் நிலையங்களில் சேவைகள் (மணியார்டர், பதிவுத்தபால், சேமிப்பு வங்கி, சேமிப்பு சான்றிதழ்கள் மற்றும் பிற) தொடர்பாக புகார்கள் அல்லது ஆலோசனைகளை 27.12.2022 செவ்வாய் கிழமை அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி வைக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதற்கான மின்னஞ்சல் dochennaicitysouth.tn@indiapost.gov.in
தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்கள்
044 – 2834 1668, 044 2834 2554
சென்னை நகர தெற்கு மண்டல அஞ்சலகங்களுக்கான முதுநிலை மேற்பார்வையாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்