நாட்டில் பாதுகாப்புத் தளவாட பொருட்கள் ஏற்றுமதி நிலை
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாதுகாப்புத் தளவாட பொருட்கள் 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தற்போது ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. சில பாதுகாப்பு ரகசிய காரணங்களுக்காக அந்நாடுகள் குறித்த பட்டியலை வெளியிட இயலாது. கடந்த 2019-20-ம் ஆண்டில் ரூ.9116 கோடி அளவிற்கும், 2020-21-ம் ஆண்டில் ரூ.8435 கோடி அளவிற்கும், 2021-22-ம் ஆண்டு ரூ.12,815 கோடி அளவிற்கும், 2022-23 (இதுவரை) ரூ.6058 கோடி அளவிற்கும் பாதுகாப்புத் தளவாட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இத்தகவலை மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட், உறுப்பினர் திரு சுஜீத் குமாருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.பாதுகாப்புத்துறையில் சுயசார்பு
நாட்டில் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத்தில் சுயசார்பை ஊக்குவிக்க கடந்த சில வருடங்களாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
தற்போது நமது பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறை அதி நவீன தளவாடங்களை உற்பத்தி செய்யும் திறன் பெற்றுள்ளது. பீரங்கிகள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், ஏவுகணைகள், மின் உபகரணங்கள், பலவகையான வெடிமருந்துகள் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது. அதன் விளைவாக இலகு ரக தேஜஸ் போர் விமானம், தரையிலிருந்து வானில் உள்ள இலக்கை தாக்கக்கூடிய ஆகாஷ் ஏவுகணை, அர்ஜூன் போர் பீரங்கி, சீட்டா ஹெலிகாப்டர், மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர் உள்ளிட்டவை கடந்த சில வருடங்களில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட், உறுப்பினர் திரு. ராகேஷ் சின்ஹா வுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.எல்லைப்பகுதிகளில் சாலைகள் அமைப்பு
எல்லைப்பகுதிகளில் எல்லைச்சாலை அமைப்பு மூலம் கடந்த 5 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டுள்ள சாலைப் பணிகள் குறித்த விவரங்கள்; லடாக், ஜம்மு-காஷ்மீர், அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசங்கள், உத்தராகண்ட், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், நாகாலாந்து, மணிப்பூர், சிக்கிம், மேற்கு வங்கம், இமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் அதிகபட்சமாக லடாக் யூனியன் பிரதேசத்தில் 760.331 கி.மீ. தொலைவிற்கும், ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 723.056 கி.மீ. தொலைவிற்கும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தகவலை மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட், உறுப்பினர் திரு. கன்ஷியாம் திவாரிக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
கருத்துகள்