விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் கீழத்திருத்தங்கல் சிவகாந்தி நகரில்
வசிக்கும் பிரிதிவிராஜ் (வயது 30). அவர் தனக்குச் சொந்தமான நிலத்தின் அரசு வரி செலுத்தும் ஆவணமான பட்டா மாறுதலுக்கு சிவகாசி தாலுகா அலுவலகத்தில் டிசம்பர் மாதம் முதல் தேதி செய்த மனு கள விசாரணைக்காகவும், தற்போதுள்ள கணக்கில் உள்ள பெயர் சரிபார்க்கவும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரான உமாவதி (வயது 48) அனுப்பி வைக்கப்பட்டதன்படி கிராம நிர்வாக அலுவலர், உமாவதி, தலையாரி பொன்ராஜுடன் சேர்ந்து பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்திருந்த இடத்தை நேரில் பார்வையிட்டு புலம் சரிபார்த்திருக்கிறார். அதன்பின்னர், பிரிதிவிராஜைத் தொடர்பு கொண்டு பேசியவர் பட்டா பெயர் மாறுதல் செய்து தரவேண்டுமென்றால் எனக்கு ரூபாய்.10ஆயிரம் லஞ்சமாகத் தரவேண்டுமெனறு கேட்டகவே.
அதிர்ச்சியடைந்த. மனுதாரர், 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க தன்னிடம் பணமில்லை எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து பேரம் பேசி இறுதியாக உரிய ஆவணங்கள் இருந்த போதிலும் ரூபாய்.5 ஆயிரம் லஞ்சமாகத் தந்தால் தான் நிலத்துக்குப் பட்டா பெயர் மாறுதல் செய்து தருவதாக கிராம நிர்வாக அலுவல் பணியாளர் உமாவதியும், தலையாரி பொன்ராஜூம் இணைந்து தெரிவித்திருக்கின்றனர். அதனால் வேறு வழியின்றி பிரிதிவிராஜூம் இலஞ்சம் தர ஒப்புக்கொண்டு இவர்களை சிக்கவைக்க. நினைத்தவர், அவர்கள் கேட்ட 5 ஆயிரம் ரூபாய் லஞ்சப்பணத்தையும் கொடுக்க வழியில்லாமல் திண்டாடிய நிலையில் பிரிதிவிராஜ், பட்டா மாறுதல் செய்ய அவர்கள் லஞ்சமாகக் கேட்டது தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் தெரிவிக்கவே, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் இராமச்சந்திரன், மற்றும் ஆய்வாளர் பூமிநாதன் ஆகியோர் பிரிதிவிராஜிடம் துரிதமாக விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் ஆலோசணையில் அவர் கொண்டு வந்த பணம் அரசு சாட்சி முன்னிலையில் பினாப்தலின் இரசாயனப் பொடி தடவப்பட்ட ரூபாய்.5 ஆயிரம் இலஞ்சப்பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறையின் வழிகாட்டும் முறைப்படி அந்த ஊழல் இலஞ்சப் பெருச்சாளிகளைப் பிடிக்கப் பொறிவைத்து பிரிதிவிராஜிடம் அரசு சாடயசியுடன் கொடுத்தனுப்பிய நிலையில், பட்டா மாறுதல் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் உமாவதி, தலையாரி பொன்ராஜை சந்தித்தவர், லஞ்சப் பணம் ஐந்தாயிரம் ரூபாயைக் கொடுத்துள்ளார். இந்தப் பணத்தை தலையாரி பொன்ராஜ் பெற்றுக்கொண்டபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் .இராமச்சந்திரன், மற்றும் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையிலான. ஊழல் தடுப்புத் துறையினர் சமிக்சை வந்து உட்புகுந்து இலஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் உமாவதி, தலையாரி பொன்ராஜ் ஆகிய இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் சேர்த்தனர். பாதிக்கப்பட்ட நபருக்கு பட்டா மாறுதல் நிவாரணம் வழங்கப்பட்டது.
கருத்துகள்