தாம்பரம் விமானப்படை தளத்தின் ஏர் கமாண்டிங் அதிகாரியாக ரதீஷ்குமார் பொறுப்பேற்பு
சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளத்தில் டிசம்பர் 22ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், அதன் புதிய ஏர் கமாண்டிங் அதிகாரியாக ஏர் கமோடர் திரு ரதீஷ்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரிடம் தாம்பரம் விமானப்படை தளத்தின் தற்போதைய ஏர் கமாண்டிங் அதிகாரி விபுல் சிங் பொறுப்பினை ஒப்படைத்தார்.
ஏர் கமோடர் ரதீஷ்குமார் இதுவரை சுக்கோய் -30, மிக் -21, கிரண் மற்றும் எச்பிடி ரக விமானங்களில் சுமார் 5 ஆயிரம் மணி நேரத்திற்கு மேல் பறந்தவர் ஆவார். இதற்குமுன்பு தாம்பரத்தில் உள்ள விமானப்படை வீரர்களுக்கான பறக்கும் பயிற்சி பள்ளியில் கமாண்டிங் அதிகாரியாக பணியாற்றியிருக்கிறார்.
திறம்பட பணியாற்றியதற்காக ரதீஷ்குமார் வாயு சேனா உள்ளிட்ட பதக்கங்களை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்