பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் திருச்சி என்ஐடியில் நடைபெற்றது.
திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் இன்று தொடங்கியது. இன்று முதல் 9-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கிற்கு திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் உள்புகார் கமிட்டி ஏற்பாடு செய்திருந்தது.
அந்நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் டாக்டர் ஜி.அகிலா தலைமை தாங்கிய இந்த கருத்தரங்கை திருமதி சுஜா சுகுமாறன் தொடங்கிவைத்தார். இதில் பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய மேற்கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பாலியல் தொந்தரவுகள் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்வது குறித்த வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.
மாணவிகள், பெண் பணியாளர்கள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், அவற்றை முறியடித்து வெளிவர பயன்படுத்த வேண்டிய யுக்திகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதுடன், அவர்களது உரிமைகளை நிலை
நாட்ட இருபாலரும் உதவ வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
கருத்துகள்