அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மையம் கட்சி இடம்பெற நடிகர் கமல்ஹாசன் விரும்புகிறார்.
அதற்கான அடித்தளமாகவே அவரது டெல்லிப் பயணம் பார்க்கப்பட. டெல்லியில் ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் ஒன்றாகச் சென்றார், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்த வாய்ப்பாகவும் கூறப்படுகிறது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கமலஹாசன் நெருங்கிய நட்புடன் உள்ளார். டெல்லியில் அவரையும் கமல் சந்தித்து பேசுவாரென்று கூறப்படுகிறது.டெல்லியில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயண யாத்திரையில் கமல்ஹாசன் பங்கற்ற நிகழ்வு அவரது 108-வது நாளாக ராகுல்காந்தி தலைநகர் டெல்லி நடைபயணத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களும் பங்கற்றுள்ளனர்.காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வகையில், செப்டம்பர் மாதம் ராகுல் காந்தி பாத யாத்திரையை இந்திய ஒற்றுமை நடைபயணம் ( பாரத் ஜோடோ யாத்திரை) என்ற பெயரில் தமிழ்நாட்டில் தொடங்கி காஷ்மீர் வரை சுமார் 3,500 கி.மீ தூரத்தை 150 நாட்களில் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டு.108-வது நாளான நேற்றுக் காலையில் டெல்லி சென்றடைந்தார். டெல்லி மாநில எல்லை பதர்பூரில் ஆயிரக்கணக்கில் திரண்ட காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு உற்சாகமாக வரவேற்பளித்தனர்.
பின்னர் அங்கிருந்து செங்கோட்டையை நோக்கி ராகுல்காந்தி நடைபயணம் சென்றார். இந்த யாத்திரையில் சோனியாகாந்தி, பிரியங்கா வதேரா, ராபர்ட் வதேரா உள்பட அவரது குடும்பத்தினரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் பங்கேற்றனர். அத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் தனது கட்சியினர் 250 பேருடன் பேரணியில் பங்கேற்றார். பின்னர் மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி, ல்லிகார்ஜுன கார்கே, கமலஹாசன் உள்ளிட்டவர்கள் பேசினார்கள். காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் நடந்த இந்திய ஒற்றுமைப் பயணக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னால் செயல் தலைவர் ராகுல்காந்தி, மநீமை தலைவர் நடிகர் கமல்ஹாசனை தமிழில் பேசுமாறு கேட்டுக்கொண்டார். அது ஒருவரின் தாய்மொழிக்கு, தமிழுக்கு அவர் தருகிற மரியாதை.
அவர் தமிழில் பேசுவதை கரூர் நாடாமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். திடீரென கமல்ஹாசன் தமிழுக்குப் பதில் ஆங்கிலத்திலேயே சிறிது பேசிவிட்டார். அதை
ஆங்கிலத்திலேயே திருப்பிச் சொன்னார். தற்போது சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்றுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் ராகுல் காந்தியின் பேரணியில் பங்கேற்ற யாரும் முகக்கவசம் அணியவில்லை. அதில் சோனியா காந்தி மட்டும் முககவசம் அணிந்திருந்தார். அந்த நிலையில் ராகுல்காந்தியின் நடைபயணத்துக்கு ஏழுநாட்கள் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு ஓய்வுக்குப் பின்னர் 2023 ஜனவரி மாதம் 2 ஆம் தேதி மீண்டும் டெல்லியில் பாத யாத்திரை புறப்படுகிறது. இதனால் பாதயாத்திரையில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ராகுலின் பாதயாத்திரையில் பங்கேற்கும் தொண்டர்களுக்காக 64 கண்டெய்னர்களில் படுக்கை வசதி, கழிப்பறை, குளியலறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் டெல்லியில் தற்போது கடும் குளிர் நிலவுவதால், கண்டெய்னரில் தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் குளிர்சாதனப் பெட்டிகளை அகற்றிவிட்டு ஹீட்டர்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணிகள் ஓரிரு நாட்களில் நிறைவடையுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஜனவரி 1 ஆம் தேதி அவரவர் கண்டெய்னர்களில் வந்து ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்