புதுக்கோட்டை மாவட்டம் இழுப்பூர் வட்டம் இறையூர் கிராமத்திலுள்ள ஆதிதிராவிட மக்களை, மாவட்ட ஆட்சியர் கோயிலுக்குள் அழைத்துச் சென்ற நிலையில்,
தரம்தாழ்த்திப் பேசிய சிங்கம்மாள், மற்றும் அஞ்சப்பன் மீது குடியுரிமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் படி வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தேனீர் விற்பனை செய்யும் கடையில் தனிக் குவளை முறையை பின்பற்றிய கடையின் உரிமையாளர் மூக்கையா மற்றும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இழுப்பூர் வட்டம் முத்துக்காடு ஊராட்சி மன்றம் இறையூர் கிராமத்தின் பகுதியில் 50 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட அனைத்து மக்களும் வசிக்கின்றனர் அங்கு ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நீர் சேகரித்து வைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது சில தினங்களுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் துர்நாற்றத்துடன் குடிநீர் வந்தது அதை அறிந்த அப் பகுதி மக்கள் தொட்டியின் மேல் சென்று பார்த்த போது யாரோ மர்ம நபர்கள் மனிதக் கழிவுகளை கலந்தது தெரியவே அச் சம்பவம் பெரும் அதிர்ச்சியான நிலை ஏற்படுத்தியதால்
சுகாதார அலுவலர்கள் அங்கு சோதனை செய்த போது மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அது குறித்து வெள்ளானுர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு ஐந்து பிரிவுகளின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது , அதுகுறித்து விபரம் வருமாறு :-அன்னவாசல, அருகில் இறையூரில் அமைந்த வேங்கிவயல் கிராமம். இங்குள்ள ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் மக்களிடம் அப்பகுதியினர் நீண்ட காலமாக பாகுபாட்டுடன் நடந்துகொள்வதாகவும்., சமீபத்தில் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த நான்கு குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சையின் போது குடிநீர் பிரச்சனைகள் இருப்பது தெரிந்தது. ஊரிலிருந்த மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை அவ்வூர் இளைஞ்ர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் பார்வையிட்ட. போதுதான்,
அதில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்டதை அப்பகுதியில் உள்ளவர்கள் கண்டறிந்த நிலை . இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் அந்தப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.குடிநீர் தேவைக்காக 2016-17-ஆம் ஆண்டில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டதிலிருந்து. அவர்கள் குடிநீர் விநியோகம் செய்து வந்தனர். இந்தச் சம்பவம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ சின்னதுரை அப்பகுதிக்கு சென்ற பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
அது தொடர்பாக, வேங்கைவயல் ஊராட்சி மன்றத் தலைவர் அளித்த புகாரில், வெள்ளானூர் காவல் நிலையத்தினர் 5 பிரிவுகளின் படி வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.குடிநீர்த் தொட்டியைப் பராமரிக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவரிடம் குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்யப்படுகிறதா, மற்றவர்கள் ஏறும் வகையில் அந்த ஏணி திறக்கப்பட்டிருந்ததேனென்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.
இந்த அவரது ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் நா. கவிதப்பிரியா, இழுப்பூர் வருவாய்க் கோட்டாட்சியர் குழந்தைசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கருணாகரன், சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் டாக்டர் ச. ராம்கணேஷ் ஆகியோரும் உடனிருந்தனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். கவிவர்மன் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள், அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில செயல் தலைவர் இளமுருகு முத்து, மாநிலச் செயலர் மெய்யர் உள்ளிட்டோரும் நேரில் சென்று பார்வையிட்டு அப் பகுதி மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த அவரது ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் நா. கவிதப்பிரியா, இழுப்பூர் வருவாய்க் கோட்டாட்சியர் குழந்தைசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கருணாகரன், சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் டாக்டர் ச. ராம்கணேஷ் ஆகியோரும் உடனிருந்தனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். கவிவர்மன் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள், அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில செயல் தலைவர் இளமுருகு முத்து, மாநிலச் செயலர் மெய்யர் உள்ளிட்டோரும் நேரில் சென்று பார்வையிட்டு அப் பகுதி மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இச் சூழலில் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் ஆய்வு செய்தனர். பகுதி மக்களிடம் குறைகளையும் கேட்டனர். அப்போது பகுதி மக்கள் குற்றம் செய்த மர்ம நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மேலும் தங்களை அய்யனார் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லையென்றும் தேனீர் விற்பனை செய்யும் கடையில் தனிக் குவளை முறை இருப்பதாகவும் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து
மாவட்ட ஆட்சித் தலைவர் ஆதிதிராவிட வகுப்பின் அனைத்து மக்களையும் கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபடச் செய்தார்.அப்போது அவர்கள் வழிபட்ட போது, அங்கிருந்த பெண் ஒருவர் திடீரென்று ஆவேசமாகி, அந்த மக்களைப் பார்த்து கோவிலுக்குள் ஏன் வந்தாய் எனக் கேட்டதால் மாவட்ட ஆட்சித் தலைவரும், காவல்துறை உயர் அலுவலர்களும் அதிர்ச்சியாகி அந்த ஆவேசம் கொண்ட பெண் மீதும், தனிக்குவளை முறையைப் பயன்படுத்தி வந்த தேனீர் விற்பனைக் கடை உரிமையாளர் மீதும், குடியரிமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ர் கவிதா ராமு உத்தரவிட்டார். இது குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இறையூர் கிராமத்தில் சிங்கம்மாள் எனும் பெண், அஞ்சப்பன் ஆகியோர் மீது குடியுரிமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு தேனீர் விற்பனைக் கடையில் தனிக்குவளை முறையைக் கடைபிடித்த கடை உரிமையாளர் மூக்கையா மற்றும் அவரது மனைவி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, சிங்கம்மாள், மூக்கையா இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இச் சம்பவத்தில் தொடர்புடைய பலரை கைது செய்யத் திட்டமிட்டுள்ளனர், சுதந்திரம் பெற்ற பின்னரும் ஜனநாயக நாட்டில் இதுபோன்ற கொடும் நிகழ்வுகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இழுப்பூர் வட்டத்தில் மட்டுமே நிகழும் காரணம் பல
காவல்துறையில் அங்கு ஒரு பிரிவு ஆதரவான நிலை இன்றும் காணலாம். அது களையப்பட்டால் நீதி நிலைபெரும் என்பதே அப்பகுதி நடுநிலை மக்களின் பேச்சாகும். சமூகநீதி சமநீதியானால் அதுவே பொது நீதி மாவட்ட ஆட்சியரும்,காவல்துறைக் கண்காணிப்பாளரும் பாரட்டுக்கு உரியவர்கள்.
கருத்துகள்