'கைதேர்ந்த' கேடி
அம்பலப்படுகிறாள். விஜிஸ் பழனிசாமி இந்தப்பெயரை இதுவரை நான் உச்சரிக்கவில்லை. பாடல்களில்கூட அநாகரீகத்தை அனுமதிக்காத நான் இந்த 'ஆபாசக்கூத்தை' என் பேனாவால் எழுத வேண்டி நேர்கிறதே .. என கவிஞர் தாமரை முகநூலில் பதிவிட்டுள்ளார். கோயமுத்தூர் இளைஞரின் மரணத்திற்கு சின்னத்திரையில் பணிசெய்யும் விஜிஸ் பழனிசாமி காரணமென கவிஞர் தாமரையின் குற்றஞ்சாட்டு.கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் அருகில் தென்னம்பாளையத்தைச் சேர்ந்த இளைஞர் சிவா எனும் இரத்தினசீலன்.
செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட வழக்கு குடும்பப் பிரச்னை காரணமாக நிகழ்ந்ததென வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது. மகன் தற்கொலைக்குக் காரணம் அவரது மனைவி விஜி பழனிசாமி தான் என வீடியோ ஆடியோ ஆதாரங்களுடன் சிவாவின் பெற்றோர் கோயமுத்தூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததையடுத்து இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்துள்ளது
.தன்னுடைய வாழ்க்கையை அளித்து விட்டதாக 37 வயதாகும் ஒரு பெண்ணின் மீது பிரபல கவிஞர் தாமரை குற்றச்சாட்டு கூறியிருப்பதாக தற்போது தகவல் வெளியாகி சமுக வலைதளத்தில் வைரலானது. தென்னம்பாளையம் முத்துக்குமார். மனைவி ஈஸ்வரி இவர்களுக்கு சிவா என்ற மகன் எம்.பி.ஏ பட்டதாரியாவார். சிவாவுக்கும் சென்னை விஜிஸ் பழனிசாமிக்கும் தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது. நாளடைவில் அது காதலாகியுள்ளது. எனவே தனக்கு ஏற்கனவே விவாகரத்து ஆனதை தெரிவித்துள்ளார் சிவா.
மேலும் விஜி ஏற்கனேவே திருமணமானவர் என்றும் 3 குழந்தைகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிற நிலையில் ஜூலை மாதம் 6 ஆம் தேதி அவர்களுக்குத் திருமணம் நடந்துள்ளது. நாளடைவில் விஜி சில நண்பர்களுடன் பழகியதை அறிந்த சிவா அவருடைய செல்போனில் விஜி அவரது நண்பர்களுடன் இருந்த தவறான புகைப்படங்களை பார்த்ததனால் விஜியை வீட்டை விட்டு வெளியில் அனுப்பிய பின்னர் விஜி சிவா வேலை செய்யும் இடத்திற்கு வந்து காலில் விழுந்து இதை போல் இனி செய்ய மாட்டேன் என்று கூற சிவாவும் மனமிரங்கி வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார்.
வந்த சில நாட்களிலேயே இருவருக்கும் மீண்டும் தகராறு நடந்த நிலையில் விஜியும் சிவாவும் பிரிந்துள்ளனர். அதன் பிறகு விஜி தன்னுடைய நண்பர்களுடன் உளவியல் ரீதியாக மிரட்டியதாகவும், அதனால் ஏற்பட்ட அவமானத்தால் சிவா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக 43. ஒளிப்பதிவும் செய்துள்ளதில் நான் சாக்கடையில் விழுந்து விட்டேன் என்னுடைய சாவுக்கு நான் தான் காரணம் எனக் கூறி செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி தற்கொலை செய்துள்ளதை குடும்பப் பிரச்னையால் தான் தற்கொலை செய்தாரென்று வழக்கு பதிவும் செய்த காவல்துறை . அவரது பெற்றோர்கள் தங்களுடைய மகன் தொடர்பாக பல்வேறு ஒளி மற்றும் ஒலிஒளிப் பதிவுகளைக் கொண்டு கோயமுத்தூரஹ மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளார்.இந்த புகாரை தொடந்து விசாரணை செய்ததில் விஜி என்பவர் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இந்த நிலையில் இது குறித்து கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை கூறிய தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்: `என்னுடைய முன்னாள் கணவருக்கும் (தியாகு) எனக்கும் ஏற்பட்ட பிரிவுக்குக் காரணம் இந்த விஜி என்கிற விஜயலட்சிமி தான். இவரால் தான் என்னுடைய குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இவர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று கவிஞர் தாமரை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் 37 வயதாகும் விஜயலட்சுமி பல்வேறு ஆண்களுடன் தொடர்பு காரணமாக பணமோசடியும் செய்ததாகக் கூறப்படுவது பலரும் அதிர்ச்சியை ஆச்சரியமும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது
கருத்துகள்