நிதி அமைச்சகம் 2022 டிசம்பரில் ரூ.1,49,507 கோடி ஜிஎஸ்டி வருவாய், கடந்த ஆண்டு டிசம்பரை விட 15% அதிகரிப்பு
தொடர்ந்து 10 மாதங்களாக மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.4 லட்சம் கோடிக்கு மேல் வசூல்
2022 டிசம்பரில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,49,507 கோடி. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.26,711 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.33,357 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.78,434 கோடி (இறக்குமதி சரக்குகள் மீதான வசூல் ரூ.40,263 கோடி உட்பட) செஸ் வரி வசூல் ரூ. 11,005 கோடி.
அரசு 36,669 கோடி ரூபாயை மத்திய GST க்கும், 31,094 கோடி மாநில GST க்கும் வழக்கமான தீர்வாக செலுத்தியுள்ளது. டிசம்பர் 2022 இல் வழக்கமான தீர்வுகளுக்குப் பிறகு மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் முறையே ரூ 63,380 கோடி மற்றும் ரூ 64,451 கோடி ஆகும்.
2022 டிசம்பர் மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாத ஜிஎஸ்டி வருவாயை விட 15% அதிகமாகும். இந்த மாதத்தில், சரக்குகளின் இறக்குமதியின் வருவாய் 8% அதிகமாக இருந்தது. உள்நாட்டு பரிவர்த்தனையின் (சேவைகளின் இறக்குமதி உட்பட) வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட வருவாயை விட 18% அதிகமாகும். நவம்பர், 2022 இல், 7.9 கோடி இ-வே பில்கள் உருவாக்கப்பட்டுள்ளன, இது அக்டோபர், 2022 இல் உருவாக்கப்பட்ட 7.6 கோடி இ-வே பில்களை விட கணிசமாக அளவு அதிகமாகும்.
கடந்த டிசம்பரில் தமிழகத்திலிருந்து ரூ.8, 324 கோடி வசூலாகியிருக்கிறது. இது முந்தைய ஆண்டு டிசம்பர் வசூலான ரூ. 6,635 கோடியை விட 25% அதிகமாகும். புதுச்சேரியில் 30 சதவீதம் அதிகமாக வசூலாகி இருக்கிறது. முடிந்த டிசம்பரில் ரூ. 192 கோடியும், முந்தைய ஆண்டில் ரூ. 147 கோடியும் ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்